இறால் வடை

தேதி: May 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - 15
ஊறவைத்த கடலைப்பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் மாவு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப் (பொரிப்பதற்கு)


 

முதலில் ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பிறகு இறால் தவிர மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்ஸியில் பருப்புடன் போட்டு மையாக அரையாமல் ஒன்றிரண்டாக இருக்குமாறு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய இறாலை சேர்த்து கலக்கவும். இதனை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்