ஈஸி கோபி மஞ்சுரியன்

தேதி: May 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (11 votes)

 

காலிஃப்ளவர் – ஒன்று (பெரியது)
வெங்காயம் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் காலிஃபிளவரை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
சற்று பெரிய கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளைப் போடவும்.
2 நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் 5 நிமிடம் வேகவிடவும்.
அதன் பின் அத்துடன் தக்காளி சாஸை சேர்க்கவும்.
சாஸ் காலிஃப்ளவருடன் நன்றாக சேருமாறு கலந்துவிட்டு வேகவிடவும்.
இப்பொழுது வெங்காயத்தை நான்கு பாகமாக வெட்டிக் கொள்ளவும். அதன் பின் வெட்டிய வெங்காயத்தின் இதழ்களைத் தனித்தனியாக பிரித்துக் கொள்ளவும்.
பிரித்து வைத்துள்ள வெங்காயத்தை ஒரு சிறிய கடாயில் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி வதக்கவும்.
ஒரு நிமிடம் வதங்கிய பிறகு அதை காலிஃப்ளவர் கலவையுடன் சேர்க்கவும்.
அதன்பின்பு அனைத்தையும் கலந்து 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் கொத்தமல்லி தூவவும்
இப்பொழுது சுவையான ஈஸி கோபி மஞ்சுரியன் ரெடி.
நேயர்களுக்காக, அறுசுவை உறுப்பினரான <a href="user/5671" target="_blank" >திருமதி. கீதா ஆச்சல் </a> அவர்கள் இந்த எளிய முறை கோபி மஞ்சூரியனை செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்துபார்த்து கருத்து தெரிவியுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் காலிபிளவர் வாங்குவது(அதன் அழகில் மயங்கி), பின்னர் வறை செய்வேன் வெள்ளைக்கறி வைப்பேன் எதுவும் சரிவருவதில்லை. அதனால் காலிபிளவர் வாங்குவதில்லை, இப்போ இந்த கோபி மஞ்சூரியனைப் பார்த்ததும் செய்யவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது... இது இறைச்சிக் கறிபோலவே இருக்கிறது, செய்ததும் பதில் போடுவேன்.... உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே திருமதி.கீதா ஆச்சல்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள கீதா அவர்களே,
வேகவிட வேண்டும் என்ற இடத்தில் தண்ணீர் ஊற்றுவது பற்றி சொல்லவில்லையே.. தண்ணீர் ஊற்றி தானே வேகவிடவேண்டும்... இல்லை காயின் தண்ணீரே போதுமானதா???

அன்புள்ள அதிரா , சுபா அவர்களுக்கு,
மிகவும் நன்றி.
தண்ணீர் தேவையில்லை. காயில் உள்ள தண்ணீரே போதும். வேண்டுமானால் அடுப்பை சிறிது குறைத்து கொள்ளவும்.
ஆமாம் இது இறைச்சி போலவே இருக்கும்.
with love,
geethaachal

இது Fried rice, veg puloa உடன் மிகவும் நன்றாக இருக்கும். காலிபிளவரை கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டால் இன்னும் அருமையாக இரைச்சி போலவே இருக்கும்

thank u so much geetha acca,
i'll try this!and i really like this!

have a great day

thanks..

கீதா கோபி மஞ்சுரியன் தான் இன்று மதிய பிரைட் ரைஸ்க்கு பக்க உணவு. காலை அவசரத்தில் சிக்கீரம் செய்ய முடிந்தது. எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வித்யா,
மிகவும் சந்தோசம். Thanks for trying it and replying me..Feeling happy.
with love,
geethaachal

நான் இந்த Gobi Manchurian செய்து பார்த்தேன்...ஆனால் கொஞ்சம் கருப்பு கலராயும் (ஆனால் தீய வில்லை),எண்ணையு மாக வந்தது..எப்படி உங்களால் இந்த படத்தில் உள்ளது போல் colour கொண்டு வர முடிந்தது?

Be the best of what you are and the Best will come to you :)

கீதா அவர்களுக்கு ,
இன்று ஈஸி கோபி மஞ்சுரியன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.மைக்ரோ அவனில் 5 நிமிடங்கள் வேக வைத்து செய்தேன்.மற்றபடி தாங்கள் செய்து காட்டிய முறையில் தான் செய்தேன்.முழுவதும் எண்ணையில் பொரித்து எடுக்காமல் இவ்வாறு செய்வது மிகவும் பயனுள்ள வித்தியாசமான குறிப்பு.

அதில் color எதுவும் சேர்க்கவில்லை. நீங்கள் அடுப்பை சிறிது slow செய்து வேண்டுமானால் சமைக்கவும். எண்ணெய் நிறைய சேர்க்ககூடாது.

அன்புள்ள mdf( can u tell ur name please!!!!!!) அவர்களுக்கு ,
மிகவும் சந்தோசம்.
with love,
Geethaachal

அவள் பெயர் கருப்பாயி அதனால்தான் mdf ன்னு வைத்து இருக்கா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என் பெயர் பாத்திமா .என் கணவரின் பெயரில் என் பெயரையும் சேர்த்து சுருக்கமாக mdf என வைத்துள்ளேன் நான் அறுசுவையில் குறிப்புகள் மட்டும் கொடுத்து இருக்கிறேன் .ஆனால் இது வரையிலும் மன்றத்தில் அரட்டை அடித்ததில்லை.நீங்கள் அனைவரும் அரட்டை அடிப்பதை பார்த்து மிகவும் ரசிப்பேன்.
அன்புடன் mdf

நா உனக்கு வைத்த செல்ல பெயரையே நீ என் பெயராக சொல்லி இருப்பது ஏன் ?
இது எப்படி இருக்கு .ஹா ஹா ஹா .சும்மா கேலிக்கு சொன்னேன் . மரியம் எப்படி இருக்கா.சாட் பண்ண முடிஞ்சா வா.நா offline msg அனுப்பறேன் பாரு .
அன்புடன் mdf

மர்லியா மேடம், என்ன "BILLA" போல I M Backகா. மிகவும் சந்தோஷம், உங்கள் மாமி கொஞ்சம் தேறி வருவதற்க்கு. விரைவில் முற்றிலும் குணமடைந்து விடுவார். பெண்ணை Play school அனுப்ப போறிங்களா. வாழ்த்துக்கள். (உங்கள் பெண் photo பார்த்தேன். செம cute.)

மர்லியா மேடம், என்ன "BILLA" போல I M Backகா. மிகவும் சந்தோஷம், உங்கள் மாமி கொஞ்சம் தேறி வருவதற்க்கு. விரைவில் முற்றிலும் குணமடைந்து விடுவார். பெண்ணை Play school அனுப்ப போறிங்களா. வாழ்த்துக்கள். (உங்கள் பெண் photo பார்த்தேன். செம cute.)

பாத்திமா நினைத்தேன் என்னை புகழந்து நிச்சயம் ஆப் லைன் மெசேஜ் போடுவான்னு தாங்ஸ் ரொம்ப புகழ்ந்ந்து தள்ளி இருக்கே ;-0

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பாத்திமா நினைத்தேன் என்னை புகழந்து நிச்சயம் ஆப் லைன் மெசேஜ் போடுவான்னு தாங்ஸ் ரொம்ப புகழ்ந்ந்து தள்ளி இருக்கே ;-0

சார்தா BILLA" போல I M Backகா என்ன இது சுத்தமா புரியல...வாழ்த்துக்கும்..ஆதரவான பேச்சுக்கும் நன்றிமா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புள்ள பாதிமா, மார்லியா அவர்களுக்கு,
மார்லியா நான் உங்களுடைய ரசிகை. நீங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கின்றிர்கள்.
நன்றி பாதிமா உங்கள் பெயர் தெரிவித்ததர்கு.

ஆஹா அப்படியே ஐஸ் மழையை கோட்டின மாதுரி இருக்கு உங்க பதிவை படித்ததும்.....என்னால் சிரிக்குறீங்களா ரொம்ப சந்தோசம்..நன்றி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் முதல் தடவையாக உங்களுடன் chat செய்கிறேன். your daughter is so beautiful...like your words..

ஹாய் கீத்தாஞ்சல் எனக்கு பாத்திமா குட் பிரண்ட் சோ வேனும்னுதான் கருப்பாயின்னு கொடுத்துட்டேன் அப்புறம் சின்ன பயம் அய்யோ யார் கீத்தாஞ்சல்னு தெரியலேயே இப்படி பாத்திமாவை கலாய்ச்சு யாரோட குறிப்பிலேயோ இப்படி பதிவு கொடுத்துட்டேமே அடுத்து என்னத்த வாங்கி கட்டிக்க போறேனோன்னு குழப்பம் இப்பதான் நிம்மதி எனக்கும் சந்தோசம் உங்களுடன் பேச அப்புறம் சொல்லவே மற்ந்துட்டேன் சாரிம்மா உங்க குறிப்பு அழக்கா இருந்தது இப்போதய்க்கு புதுசா செய்யும் மூடில் இல்லை இன்ஷஅல்லாஹ் எல்லாம் சரியானதும் செய்து பார்த்து மின்னூட்டம் கொடுக்கிறேன்..ஓஹ் அந்த மாஹாராணியை பார்த்தீங்களா?அவ லூட்டிதான் தாங்கல...சுகமான சுமை அவள்..

என்னை பற்றி எல்லாம் தெரிஞ்சு வைத்துட்டீங்க நான் தெரிய வேண்டாமா உங்களை பற்றி சரி உங்களை பற்றி சொல்லுங்க ...வேறு திரட்டில் பேசலாம் இது குறிப்புக்கு மின்னோட்டம் போடுறது பாபு அண்ணன் முறைத்து சகோதிரி மர்ழியான்னு பதிவு போட்டுடுவார் அதுக்கு முன் ஓடிடறேன் வாங்க வேற ஏதாவது திரட்டில்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi
geetha
i tried today u r easy gobi it was very good can u update some other type of gobi manchurian please
thank you
sandhya

BE GOOD TOO GOOD

கீதா உங்கள் கோபி மஞ்சூரியன் செய்தேன். சூப்பர். ஒரு கிழமை முன் செய்துவிட்டேன். பதில் போட தாமதமாகிவிட்டது. அதன் சுவையில் மறக்க முடியாமல், மீண்டும் வாங்கி வந்துள்ளேன் செய்வதற்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள அதிரா அவர்களுக்கு ,
மிகவும் சந்தோசம்.

with love.
geethaachal

உங்கள் குறிப்பு செய்து பார்க்கனும்னு ஆசை ஆனால் தக்காளி சாஸ் தீர்ந்துவிட்டது அதனால் நாளை ட்ரை பண்ணுகிறேன். மிகவும் செய்வதற்க்கு ஈஸியான குறிப்பு கொடுத்ததற்க்கு நன்றி.போட்டோவில் நீங்களும் உங்கள் குழந்தையும் சூப்பராக இருக்கீங்க. உங்கள் செல்ல குட்டியின் பெயர் என்ன விருப்பம் இருந்தால் சொல்லவும்.

அன்புடன் கதீஜா.

அன்று இந்த போட்டோ இல்லையே கீதாங்சால் இப்ப பிட் பண்ணியதா அழகான அம்மா,அருமையான பொண்ணு இப்பதான் பார்த்தேன்..
நானும் செய்யனும் ஒரு நாள் செய்துட்டு சொல்லுறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

My daughter Name is Akshata( Now she is 14 months old...The photo is taken on her Birthday)

with love,
Geethaachal

எப்படி இருக்கீங்க. மகள் எப்படி இருக்கிறாள். அழகான பெயர். உங்கள் ஈஸி கோபி மஞ்சூரியன் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. ஈஸியான குறிப்பு தந்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

அன்புள்ள கதீஜா,
மிகவும் சந்தோசம். செய்து பார்த்து நன்றாக வந்தது என்று தெரிவித்ததுற்கு மிகவும் நன்றி.
என்னுடய மகள் மிகவும் நன்றாக இருக்கிரள்.

with love,
geetha achal

நலமா? ஒருவலியா செய்துட்டேன் ரொம்ப சூப்பர்..தேங்ஸ்..

உங்க குட்டி பொண்ணுக்கு என் முத்தத்தை கொடுத்துடுங்க ரொம்ப அழகு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய்.நான் அருசுவைக்கு புதுசு.நான் அபுதாபியில் வசிக்கிறேன்.

wow! really wonderful. Thank you.