உருளை, தக்காளி பூரி / சப்பாத்தி

தேதி: May 24, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
மைதா - 1 கப்
உருளைக் கிழங்கு - 2
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்


 

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து வடிகட்டவும்.
வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, சாம்பார் பொடி, உப்பு, கோதுமை மாவு, மைதா மாவு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து இட்டு பொரிக்கவும்.
சப்பாத்தியாகவும் செய்யலாம்.


விரும்பினால் தக்காளியுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்தும் அரைத்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி மாமி எப்படி இருக்கீங்க? வீட்டில் எல்லாரும் நலமா? ரொம்ப நாளா கேட்க வேண்டிய சந்தேகம். இன்னைக்கு செய்யலானு இருக்கேன் இந்த ரெசிப்பியில தேவையான பொருள சாம்பார் பொடினு இருக்கு, செய்முறையில மிளகாய் பொடினு இருக்கு. எந்த பொடி சேர்க்கனும் சொல்லுங்க மாமி.

நன்றி காயத்திரி. பின்னூட்டத்திற்கும், தவறைச்சுட்டிக்காட்டியதற்கும். திருத்திட்டேன்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி, என்னுடைய சந்தேகத்துக்கு விளக்கம் தாங்கோ. இதில் தக்காளி சேர்க்காமல் செய்தால் சுவை நன்றாக இருக்குமா? அதற்குப் பதில் தேசிக்காய் சேர்க்கலாமோ? பிளேன் பிளவறிலேயே செய்துகொள்ளலாம்தானே? கோதுமாயும் மைதாவும் என்றால் குழப்பமாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா கோதுமை மாவு என்பது ஆட்டா மாவையும், மைதா என்பது ப்ளெயின் ஃப்ளவரையும் குறிக்கும். நீங்கள் இலங்கையில் மைதாவைத் தான், கோதுமைமாவு எனக் குறிப்பிடுவீர்கள், இந்தியாவில் மைதா வேறு, கோதுமை மாவு வேறு இங்குவந்த புதிதில் எனக்கும், என் இலங்கை சிநேகிதிக்கும் அடிக்கடி இக்குழப்பம் வரும்.
உத்தமி.

உத்தமி நன்றி. எனக்கும் இது பெரிய குழப்பம்தான். இப்போ புரிந்தது. இனிச் செய்யலாம். மாமியைத்தான் இன்னும் காணவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

திருமதி. அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த சப்பாத்தியின் படம்

<img src="files/pictures/aa100.jpg" alt="picture" />