கலவை சட்னி

தேதி: May 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
வரமிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 2
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
புளி - ஒரு சிறிய கோலிக்குண்டின் அளவு
தேங்காய் - அரை கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பை போட்டு சிவக்க வறுத்ததும் வரிசையாக வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதங்கியதும் தீயைக் குறைத்து விட்டு புளி, தேங்காய் துருவல், மல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி தீயை அணைத்து விடவும்.
பிறகு மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று இரவு இட்லிக்கு கலவை சட்னி தான். ரொம்ப நல்ல இருந்தது. எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

தேன்க் யூ வித்யா.என் மாமனார் இந்த சட்னியை வெறும் சாதம்,பருப்பு சாப்பிடுவார் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.இது ஒரு தமிழர்களிடம் கற்றுக் கொண்டது தான்.

உங்களுடைய குறிப்புகள் எல்லாம் கோயம்புத்தூரில் எங்கள் வீட்டில் செய்வதுபோல் உள்ளது. உங்களுடன் நான் பேசியதில்லை. ஆனால் ஒரு வருடமாக மன்றத்தை பார்வையிடுகிறேன். நன்றாக பேசி பழகுகிறீர்கள். keep it up.

ஹாய் சுஜாதா ஆமாம் நீங்க சரியா சொன்னீங்க.நானும் கோவை தான் அதனால் தான் அங்குள்ள குறிப்பு;-).நீங்க நல்ல தமிழ் எழுதரீங்க நான் ரொம்ப தினறித்தான் எழுதப் பழகினேன்

ஹாய் தளி மேடம்,

உங்களுடைய கலவை சட்னி நேற்று செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி

செல்வி

டியர் செல்வி இந்த கலவை சட்னி செய்து பர்த்து பின்னூட்டம் அனுப்பியதை தளிகா பர்த்தால் ரொம்ப சந்தோஷ படுவார்கள்.
இப்ப அவர் இன்னும் ஊரிலிருந்து வரவில்லை. நன்றி.
ஜலீலா

Jaleelakamal

அசிஸ்டன்ட் ஜலீலாக்கா நல்லா தான் வேல பாக்கராங்க..வெரி குட்.அக்கா நான் 1 வாரத்தில் ஊர் திரும்பலாம்னு இருக்கேன்..வந்து பேசறேன் சரியா.இப்ப தான் மெயில் பாத்தேன்.பதில் பிறகு போடறேன் சரியா..ஐ லவ் யூ ஜலீலாக்கா

போன வாரம் ரவா இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்தேன், மிகவும் நன்றாக இருந்தது.உடனே எல்லாம் காலி, நன்றி தளிகா!

இது எந்த மாலி..நம்ப வானதி தங்கையா?தேன்க் யூ மாலி;-)