ஈஸி சுண்டைக்காய் சாம்பார்

தேதி: May 26, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சுண்டைக்காய் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 5 இலை
கடுகு - தாளிக்க


 

முதலில் சுண்டைக்காயை இரண்டாக வெட்டி கொள்ளவும்.
துவரம் பருப்பை தண்ணீர் விட்டு கழுவி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கொள்ளவும்.
பின்னர் துவரம் பருப்பு, சுண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
இத்துடன் ப்ரஷர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை கொட்டி கிளறவும். இப்பொழுது சுவையான சுண்டைக்காய் சாம்பார் ரெடி.
இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்