பூண்டு ரசம் - சுலப முறை

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் - 4
மிளகு - 4
பூண்டு - ஒரு சிறு துண்டு
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
கடுகு - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

புளியை தண்ணீரில் ஊறவைத்து ஒரு பாத்திரத்தில் புளிக்கரச்சலை எடுத்துக் கொள்ளவும்.
அதில் உப்பு, பெருங்காயம் போட்டுக் கொதிக்கவிடவும்.
மிளகாய், பூண்டு, மிளகு இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்த விழுதை அதில் கரைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் போட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்