ஸ்பானிஸ் ஆம்லெட் ரோல்

தேதி: May 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 3
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கேப்ஸிகம் - ஒன்று
கேபேஜ் - 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - ஒன்று
பால் - 2 தேக்கரண்டி
மொஸரல்லாசீஸ் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு தேக்கரண்டி


 

சீஸ் & பால் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக நல்ல அடித்து வைக்கவும்.
தக்காளி, கேப்ஸிகம், கேபேஜ், வெங்காயம் பொடியாக நறுக்கவும். இப்போது பால் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
இதை பானில் ஊற்றி ஸிம்மில் வைத்து வெந்த பிறகு அதன்மேல் சீஸ் தூவி அப்படியே மசாலா தோசை மடிப்பது போலாவோ/ரோலாகவோ செய்து சாப்பிடவும்.
இதில் பச்சைமிளகாய்க்கு பதிலா வெள்ளை மிளகு பொடி சேர்க்கலாம்.
இதன் கூட ப்ரெட் டோஸ்ட் வைத்தும் சாப்பிடலாம்


இது ஸ்பானிஸ்காரர்கள் ப்ரேக் பாஸ்டாக சாப்பிடக் கூடியது
இதை ஒவனில் கூட ஐந்து நிமிடம் வைத்தும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்