MENU OF THE DAY

ஹாய் ப்ரண்ட்ஸ் இந்த டாபிக் எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன், ஏன்னா நம்மில் பல பேர் என்ன இன்னக்கி சமையல் செய்றதுன்னு குழம்பி போய் இருப்போம். டெய்லி நம்ம என்ன சமையல் செய்தோம்னு இங்க எல்லார் கூடயும் பகிர்ந்துகிட்டோம்னா மற்றவர்களுக்கும் அந்த காம்பினேஷன் தெரியும், டைய்லி ஓரே மாதிரி சமைக்காம விதவிதமாகவும் வித்தியாசமான காம்பினேஷனுடனும் சமைக்கலாம்ல. இங்க நிறைய பேர் வேலை செய்றவங்களும் இருக்காங்க அதனால அவங்க காலையில உள்ள அவசரத்தில் என்ன சமையல் செய்யலாம்னு ஒரு ஐடியா கிடைக்கும்.

இன்றைய மெனு:
காலையில இடியாப்பம் - பால், வெங்காயம் பச்சைமிளகாய் தாளித்தது, புளிப்பு இடியாப்பம், மசாலா இடியாப்பம்.
மதியம் - முருங்கைகாய், வெண்டைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், செல்விமாவோட மிளகு ரசம், அப்புறம் வழக்கமா உள்ள தயிர் வெங்காயம்.
இரவு - இட்லி வைத்து ஏதாவது செய்யலாமான்னு பார்த்து தேடிக்கிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம்?

ஹாய் harigayathri நிங்கள் சொல்லியது போல இந்த டாபிக் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்.

இட்லிக்கு தாக்காளி சட்னி ,நிங்கள் மதியம் வைத்த சாம்பார் இரண்டுமே நன்றாக இருக்கும்.

எங்கள் விட்டில் இன்றைய மெனு:
காலை- நவதானிய தோசை, தாக்காளி சட்னி
மதியம் - காராமணி குழம்பு,அப்பளம், அவரைகாய் பொரியல், தயிர்
இரவு - hotelலுக்கு போகிறோம்.

வெள்ளி கிழமை இரவு hotelலுக்கு போவது வளகம்.

ஒரு சில வீடுகளில் பார்த்து இருக்கிறேன்.ஒரு வாரத்துக்கான மெனுவை டைம் டேபிள் போட்டு ஒட்டி இருப்பதை.என்னால் அதை வழக்கப்படுத்திக்கொள்ள முடியவில்லை..சகோதரிகள் அவரவ்ர்கள் வீட்டு மெனுவை சொன்னால் பின்பற்றமுடியும்.
---ஸாதிகாa

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்