பீர்க்கங்காய் மசியல்

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பீர்க்கங்காய் - 4
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல் - 1
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி


 

பீர்க்கங்காயை தோல் சீவி சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு துண்டுகள் மூழ்கும் வரையில் நீர் ஊற்றி வேகவிடவும்.
அதில் தக்காளியையும் பச்சை மிளகாயையும் நறுக்கிப் போடவும்.
புளியையும் அதிலேயேப் போட்டு நன்கு வெந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், நறுக்கிய வெங்காயம், மிளகாய்வற்றல் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் எடுத்து, வேகவைத்து எடுத்து வைத்துள்ள காயுடன் சேர்த்து மத்தால் நன்றாக மசித்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்