இஞ்சி பூண்டு பேஸ்ட்

தேதி: June 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

இஞ்சி - ஒரு கிலோ
பூண்டு - அரை கிலோ
எண்ணெய் (அ) வினிகர் (அ) உப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

முதலில் பூண்டை ஒரு கவரில் போட்டு சுத்தி அல்லது சின்ன குழவியால் இடித்து கொள்ளுங்கள். பிறகு குப்பை கொட்டும் இடத்தில் வைத்து லேசா புடைத்தால் அவ்வளவு பூண்டு குப்பையும் அதில் போய் விடும் இல்லை என்றால் வீடு முழுவதும் பூண்டு குப்பைதான்..
இஞ்சி தோலை சீவி விட்டு பிறகு மண் போக கழுவி பிறகு பொடியாக நறுக்கவும்.
பூண்டையும் நறுக்கி கழுவி கொள்ளுங்கள்.
இப்போது இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைத்தெடுத்து அதில் உப்பு அல்லது வினிகர் அல்லது எண்ணெய் கலந்து (நல்ல கலக்கி)பாதியை ஒரு கன்டெயினரில் போட்டு ஃப்ரீஜரில் வைத்து விடுங்கள். ஃப்ரீசரில் வைக்கும் போது முழுவதும் அடைத்து வைக்காதீர்கள். வெடித்து வெளியே வந்துவிடும்.
மீதியை கீழே ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் தேவைக்கு பயன்படுத்தலாம்.


இது சமையல்காரர்கள் பிரியாணி மற்றும் பகாறா காணாவிற்கு மற்றும் பல இஸ்லாமிய அயிட்டங்களுக்கு செய்யும் போது அரைக்கும் இஞ்சி பூண்டின் அளவு
சில பேர் இஞ்சி பூண்டு உரிக்க சோம்பல் பட்டே நிறைய அயிட்டம் செய்ய மட்டார்கள். இது டிவி பார்த்து கொண்டே செய்தால் சிரமம் இருக்காது. உடனே கையை நல்ல சோப்பு போட்டு தேய்த்து கழுவி விடுங்கள் இல்லை என்றால் அவ்வளவு தான்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அய்யோ அக்கா என்னக்கா இது காலையில் இருந்து ஒரே சிரிப்பு உங்களால் மாறி மாறி :-D

குப்பை அது இதுன்னு..நான் ஒன்னுக்கு ஒன்னுன்னு அளவில் போடுவேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

குறிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்று இதை படித்தபின் தெரிந்து கொண்டேன். நான் சமையலுக்கு சற்றே புதிதென்பதால், எனக்கு அளவுகள் சரியாய் தெரியாது. மேலும் எனக்கு ஒரு ஹெல்ப். குக்கரில் செய்யும் தக்காளி சாதம், வெஜிடபுள் சாதம், தேங்காய் புலவு இதற்கு அரிசி (புழுங்கல் & பச்சரிசி) 2 ஆழாக்கு என்றால் தண்ணிர் எவ்வளவு விடவேன்டும்

சாரதா, பச்சரிசி என்றால் பத்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தாளித்து கொதிக்க விட்டு அரிசியும் போட்டு பாதி கொதிக்கும் போது மூடி போட்டு இரண்டாவது விசில் வரும் போது ஆஃப் பண்ணி விடுங்கள் பிறகு ஆவி அடங்கியதும் உடனே கிளறி வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விடுங்கள்.

புழுங்கல் 20 நிமிடம் ஊறவைத்து நல்ல ஒன்னுக்கு இரண்ணு தண்ணீர் வைக்கனும் மூன்று விசில் வந்ததும் இருஅக்குங்கள்.
சரியா
ஜலீலா

Jaleelakamal

மிகவும் நன்றி ஜலீலாக்கா