கணவா பிரட்டல்

தேதி: June 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார்.

 

கணவா மீன் - 500 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு/உள்ளி - பாதி
இஞ்சி - அரை அங்குலத்துண்டு
கறித்தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை/தேசிக்காய் - பாதி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கணவா மீனை சுத்தம் செய்ய அதன் தலைப்பகுதியைப் பிடித்து இழுத்தால், அப்படியே பிரிந்து வரும். அதில் கறுப்பு பை போல் உள்ள பகுதியில் மை போல் இருக்கும். அதை உடையாமல் பிரித்தெடுத்தெடுக்கவும். உடைந்தால் எல்லாம் கறுப்பாகிவிடும். அதே போல் கண்பகுதியையும் மெதுவாகப் பிரித்து விடவும். அதிலும் மை இருக்கும். பின்னர் தலைப்பகுதியை வெட்டினால் ஒரு பல் வரும். அதனையும் எடுத்து விடவும். உடல் பகுதியில் ஒரு ஓடு இருக்கும். அதனையும் எடுத்து விட்டு தோலை நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
துண்டுகளாக்கிய கணவாவுடன் ஒரு தேக்கரண்டி கறித்தூள் மற்றும் உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல், பாத்திரத்தை மூடி வைத்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சூடானதும் கணவாவிலிருந்து தண்ணீர் வரும். அந்த தண்ணீரே கணவா வேக போதுமானது. வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி விட்டு உருவி வைக்கவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் சற்று வதங்கியதும் நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி விட்டு, மீதமுள்ள கறித்தூளையும் அதில் போட்டுப் பிரட்டவும்.
அதன் பின்னர் அதனுடன் அவித்து எடுத்து வைத்துள்ள கணவாவை போட்டு நன்கு பிரட்டவும்.
அதில் உள்ள தண்ணீர் வற்றியதும் கரம் மசாலாவும், கறிவேப்பிலையும் போட்டு கிளறி விட்டு இறக்கி வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விடவும்.
சுவைமிக்க கணவாய் பிரட்டல்கறி தயார். இதில் தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா கலக்குறீஙக போங்க என்ன ஆளைய காணும் என்று பார்த்தேன் இதுதான் விஷியமா?

பார்க்கவே அருமையா இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

அதிரா ஸாரிப்ப நான் பூயூர் வெஜ். என்னால கனவா எல்லாம் செய்யமுடியாது. அட்லீஸ்ட் பாட்டு ஆவாது பாடலாம் என்று தான். ஹா ஹா நிஜாமாவே எனக்கு தெரியாது இப்படி ஒன்று இருக்கு என்று...

கனவா... இது நினவா.... ஒஹோ...அதிரா.....கோபம் கொள்ளாதே அதிரா..

ஜலீலாக்கா, அதில்லை விஷயம், விஷயம் வேறு இருக்கிறது... காதைக்கொண்டுவாங்கோ சொல்றேன்.... கிட்ட.... விஜிக்குக் கேட்டிடப் போகுது.... நான் ஜிம்முக்கெல்லோ போகிறேன்.... அதுதான் பாட்ஸ் பாட்ஸ்சாக நொருங்கியுள்ளேன்.... ஆரம்பம்தானே...போகப் போக சரியாகிவிடுமாம்.....

விஜி.... அது கனவில்லம்மா..... கற்பனை... இனித் தமிழ் படிப்பிக்க வேணும்போல கிடக்கே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Its real kanavu . parkum podhu nakku taste pannasolluthu. muthalil innaikku ethu try saiyyanum

alhamdhulillah

Nice dish and i will try it soon.What is the name for 'kanava meen' in tamilnadu,plz tell me.இந்த டிஷ் எதற்கு மேட்ச்சாக இருக்கும்.நன்றி.

ஓஹ் அதிரா கலக்கல்தான் ஜஸ்ட் இப்பதான் பார்த்தேன் இது உங்களோட குறிப்பா..ரொம்ப நல்லா இருக்கு ஆனா ஒன்னு எல்லாம் என்னிடம் இருந்து சுட்டதுதானே புழைத்து போங்க யாரிடமும் சொல்ல மாட்டேன்!

ஹாய் clement அவங்க பயல்வான் ஆக ஜிம்மில் இருப்பாங்க போல கொஞ்ச நேரத்தில் வந்து சொல்லுவாங்க அதுக்குள் நா எஸ்கேப்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அதிரடி அதிரா சும்மா அதிருது உங்க கணவா மீன் பிரட்டல்,பார்க்கவே நல்ல கலர்புல்லா இருக்கு ஆனால் எனக்கு இங்கு இந்த கணவா மீன் கிடைக்குமா?என்று தெரியாது... ஆனால் செம்மீன் கிடைக்கும் இதே குறிப்பை செம்மீனுக்கு செய்து பார்க்கிறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாஜா ஜஸ்மின்,
நலமா? விரைவாகச் செய்துபோட்டுச் சொல்லவும். இது மிகவும் சுலபம் செய்வது.

Clement,நலமாக இருக்கிறீங்களா? தமிழில் எழுதப் பழகிவிட்டீங்கள் வாழ்த்துக்கள். நீங்கள் யார் என்று எதுவும் தெரியாது, உங்கள் புறொபைல், எனது மூளைபோல் இருக்கிறது ஏன் தெரியுமா? இரண்டிலும் ஒன்றுமில்லை...ஹா.....ஹா......ஹா.......

நாங்கள் கணவாய் என்றுதான் சொல்வோம், தமிழ்நாட்டில்தான் கணவா மீன் என்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டேன், ஏனெனில் நான் கணவாய் என்றுதான் போட்டேன் எங்கள் அட்மின் தான் இப்படி மாற்றிப்போட்டுள்ளார். படம் இருக்கிறதுதானே அதைப் பார்த்துவிட்டு மார்கட் போய் வாங்குங்கள். மீனென்றால் வெட்டுவது முள் எடுப்பது என்று கஸ்டம், அதிலும் மணம் அதிகம், இது அப்படியல்ல, எல்லாமே சுலபம் சுவையும் அதிகம். உங்கள் விருப்பத்திற்கேற்ப, குழம்பு தேவையெனில் தண்ணி வற்றமுன் இறக்குங்கள். ஆனால் நன்கு வற்றினால்தான் சுவை அதிகம். non stick பாத்திரம் என்றால் எந்தப் பிழையும் வராது...

இது இடியப்பம்,புட்டு, வெள்ளை சோறு இவற்றிற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆ... மர்ழியா நூகு,
எவ்வளவு பெரிய மனது உங்களுக்கு.... அப்பப்பா அதிலும் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி வேறு.... அப்பப்பா... புல்லரிக்கிறதப்பா புல்லரிக்கிறது எனக்கு......உங்கள் பெருந்தன்மையைப் பார்த்து....

இருந்தாலும் ஒரு உண்மையைச் சொல்கிறேன்.... இந்தக் கறி செய்து அனுப்பும் வரை உங்கள் ஞாபகமே இருந்தது.... ஏன் தெரியுமோ... தளிகாவிடம் சொன்னீங்க தெரியாமல் சாப்பிட்டு விட்டேன் இப்போ படம் பார்த்ததும் இனிச் சாப்பிட மாட்டேன் என்று... அதனால் தான்.... இப்போ கிட்டத்தட்ட உங்க பெரிய மனது பொருந்துது பாருங்க.... பறவாயில்லை எனக்காக ஒரு தடவை சமைத்துச் சாப்பிடுங்க....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மஹா,
எப்படி இருக்கிறீங்க, அரட்டையில் கதைக்க பார்த்தேன் போய்விட்டீங்க. சைனாவில் கணவாயில்லாமலா... இருக்குமே.... ஏனெனில் சைனீஸ் ரெஸ்ரோறண்டுகளில் கணவாய் பொரியல் கிடைக்கிறது... தேடுங்கள் கிடைக்கும். இல்லாவிட்டால் மர்ழியா அனுப்புவா யோசிக்க வேண்டாம்... பெரிய மனதல்லவா.... சோ டோண்ற் வொறி.:):(....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,
கனவாய்னு தமிழ்ல வேற வார்த்தை இருக்கு. வரலாறுல நாம கூட படிச்சு இருப்போமே கைபர், போலன் கனவாய்கள் வ்ழியே ஆரியர்கள் வந்தார்கள்ன்னு. அதுனாலதான் அட்மின் "கணவா"ன்னு மாத்திருப்பார்னு தோனுது.
Rajini

ஆமாம் ரஜினி ,அதிரா எழுதின கணவாய் கிறது "வழி" என்று தான் அர்த்தம் எடுப்பாங்க ,நான் நினைத்தேன் நீங்க அடுத்தது எழுதியிருந்தீங்க.

அதிரா நான் கண்டிப்பாக மீன் மார்கட்டில் தேடுகிறேன்.எனக்கு அவ்வளவாக மீனின் பெயரை கொண்டு கண்டுபிடிக்க தெரியாது அதிலும் இந்த பாஷை தெரியாத ஊரில் முதலில் நான் கணவா மீனின் பெயரை கண்டுபிடிக்கவேண்டும். கணவாபிரட்டல் சாப்பிடவேண்டும் என்றால் நான் பெயரை கண்டுபிடிக்கவேண்டும். பார்க்கிறேன். இந்த வீக் எண்டுக்குள் டிரை பண்ணுகிறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

I am fine.How r u? I like to try this recipe.கணவா மீன் கடையில் பார்த்துட்டேன்,இங்கு கிடைக்கிறது.க்ளீன் பண்ணியே கிடைக்கிறது.அப்படியே உபயோகப்படுத்தலாம்.Could you say me the measurement of ginger,garlic in grams,if possible please.

பதிலுக்கு நன்றி.If i get cleaned "kanava meen" from the shop how much grams i have to use for your above recipe.Not urgent.Plz say me when u do it at home.Thanks in advance.

your staying where ? in china. you ask the shop keeper the name is cuttle fish. or (sothong)

alhamdhulillah

மஹா, ரஜனி
எனக்கு சரியாக எதுவும் தெரியவில்லை. தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் / பொருள்கள் உள்ளதுதானே. நான் நினைப்பதுண்டு மீன் வகை என்றால் முள் இருக்கும். றால், நண்டு, கணவாய் வேறு வகை என்று. எனக்கு சரியான உடம்பு வலி, ரொன்சிலற்றிஸ் கட்டிலால் எழுந்திருக்கவே இல்லை. இன்றுதான் வந்தேன், இருக்க கஸ்டமாக இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Clement! கண்டுபிடித்துவிட்டீங்களா?. இதில் சுத்தம் செய்கிறபோது பெரிதாக கழிவு வருவதில்லை. அதனால் அளவுகளில் மாற்றம் தேவையில்லை. ஏதோ ஓட்டுக் கணவாய் என இருக்கிறதாம், அதில்தான் அந்த ஓட்டிலேயே நிறைய எடை போய்விடும். ஆனால் நான் செய்தது மெல்லிய பொலித்தீன் போன்ற ஓடுதான், அதனால் இதே அளவையே பாவியுங்கள். இஞ்சி - 25 - 30 கிறாம் போடலாம். உள்ளி 50 கிறாம் போடுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அக்கா,பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.உடல்நிலை சரியில்லையென்று சொல்லி இருக்கீங்க.Take care.ஞாயிற்றுக்கிழமை கடை இல்லை என்பதால்,நாளை வாங்கி செய்ய இயலாது.இந்த வாரத்தில் கட்டாயம் செய்து விட்டு பதில் தருகிறேன்.வெள்ளை சோறுக்கு என்றால் சைட்டிஷ்ஷாக பாவிப்பீர்களா அல்லது ஊற்றி சாப்பிடுவது போலவா.எந்த குழம்புக்கு மேட்ச்சாக இருக்கும்.ரொம்பகேள்வி கேட்கிறேனோ,அக்கா?உங்கள் உடம்பு சரியானதும் பதில் தாருங்கள்.அவசரமில்லை.Take care of your health.நன்றி.

ஹாய் அதிரா

எப்படியிருக்கிறீங்க?இப்பவாது உடம்பு பரவாயில்லையா? நான் இன்று மீன் மார்கட்டுக்கு சென்று பார்த்தேன் அதிரா இந்த மாதிரி மீன் கிடைக்கவில்லை ஆனாலும் விடாமல் இதே போல் ஒரு பெரிய மீன்னை வாங்கி இந்த மெத்தடில் செய்துப்பார்த்தேன் நன்றாக இருந்தது.
என்னதான் இருந்ததாலும் ஒரிஜினல் கணவா மீனில் எப்படியிருக்குமோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.பார்ப்போம் கணவா கிடைக்குமா என்று .............
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அதிரா,
இப்போத்தான் பார்த்தேன் உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு பதிவு போட்டு இருந்ததை. எப்படி இருக்கு இப்போ?. டாக்டர்கிட்ட போனீங்களா?. உடம்புவலின்னா நல்ல ஒரு ஹாட் ஆயில் மசாஜ் எடுத்துகிட்டு ஹாட்வாட்டர்ல நல்லா ஒரு ஷவர் எடுங்க. டேக்கேர்ப்பா
Rajini

என்னாச்சுமா ஆளாளுக்கு சொல்லுறாங்க என்னால் உங்க உடல் நலமில்லை பதிவை பார்க முடியல..ரஜினி சொன்னதை வைத்து சொல்கிறேன் உடம்பு வலியா?ஆமாம் ஜிம் போனால் கண்டிப்பாக ஆரம்பத்தில் பெயின் உயிர் போகும் அன்னைக்கே சொல்ல இருந்தேன் நேரம் இல்லை..சுடு தண்ணீரில் ஒத்தனம் கொடுங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு Clement
இப்போ எவ்வளவோ பறவாயில்லை. ஆனாலும் வழமைக்குத் திரும்பவில்லை. நன்றி. நீங்கள், குழம்பு, சைட் டிஸ் என்பது எனக்குப் புரியவில்லை. வெள்ளைச் சோற்றுக்கு இதை நல்ல ஒரு மெயின் பிரட்டல் கறியாக வைக்கலாம். செய்து பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு மஹா, ரஜனி, மர்ழியா,

மஹா, கணவாய்க்குத்தான் இந்த முறை பொருந்தும், மீனுக்கு தேசிக்காய் சேர்ப்பதில்லை, பழப்புழிதான் சேர்ப்போம், அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்.
கணவாய் தேடிப்பாருங்கள். சில சமயம் சுப்பர் மார்கட்டில் எனக் இல் கிடைக்கிறது, அதுவும் சின்ன கணவாய்தான் கிடைத்தால் செய்யுங்கள். மன்னிக்கவும், எனக்கு கணவாய் என்றே கதைத்துப் பழகிவிட்டதால் அப்படியே எழுதுகிறேன். மாற்றி சொல்லக் கஸ்டமாக இருக்கிறது.

ரஜனி, மர்ழியா
இப்போ எவ்வளவோ உடல்நிலை பறவாயில்லை. கடந்த நான்கு நாட்கள் கட்டிலிலேயே இருந்தேன். இப்போ தேறிவிட்டது, ஆனால் வீக்காக இருக்கு. அதிலும் எனக்கு ஒரு சந்தோசம் 2 1/2 கிலோ இறங்கிவிட்டேன். இன்னும் ஒரு கிழமை ஜிம்முக்கு போக முடியாது, பின்னர் போக இருக்கிறேன்.

ஜிம்முடன் சேர்ந்து, நேசறியால் குழந்தைகளை வெளியே றிப் கூட்டிப் போகிறோம், முடிந்த பெற்றோர் உதவிக்கு வாருங்கள் எனக் கேட்டார்கள், நான் வருகிறேன் என பெரிய மனதாக பெயர் கொடுத்தேன். அது ஒரு பார்க், பழைய ராஜாவின் காசில். அங்கு விடிய 9 மணி தொடக்கம் 2 மணிவரை.... மேடும் பள்ளமும், குனிந்து தவண்டு படி ஏறி பிள்ளைகளைப் பிடித்தபடி அலைந்துவிட்டேன் அதுவும் உடம்பை முறித்து விட்டது. இப்போதுள்ள வெதரும் சரியில்லை. வெயில் பட்டால் சுதண்ணிபட்டதுபோல் உள்ளது. அதைவிட எனக்கு ரொன்சில் பிரச்சனை உள்ளது. அது எடுக்க வேண்டும் என்று சொல்லி, நான் மாட்டேன் என்றுவிட்டேன், இப்போ என் ஹஸ் எடுக்கும்படி சொல்கிறார்... எடுத்தால் நிறைய வருத்தங்கள் குறையுமாம், பயமில்லை சின்ன விஷயம் என்கிறார் எனக்கு தொண்டை என்பதால் பயம். பார்ப்போம், அப்பா, அம்மா நிற்கும்போது செய்திட வேண்டும்.

ரஜனி, இங்கு நான் கூடுமானவரை குடும்ப டொக்டரிடம் போவதில்லை, என் ஹஸ்பன்டே மருந்தை வாங்கித் தருவார். இப்போ அன்டிபைற்றிக் தான் எடுக்கிறேன். சும்மா இருக்க நன்றாக இருக்கிறது, இப்படி ரைப் பண்ண கஸ்டமாக இருக்கிறது. நான் அறுசுவையை நிறைய மிஸ் பண்ணிக்கொண்டிருந்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அக்கா,

எப்படி இருக்கீங்க? இப்போது உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது.நலமடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.

Today,we made your 'kanava pirattal'.It came out well and very tasty.we all liked it.Hereafter,we will do it often at home.Thanks for the good recipe.

அதிராக்கா,நாங்கள் சமையலுக்கு கறித்தூள் பயன்படுத்துவதில்லை.உங்கள் மீன் கட்லட் படத்தைப் பார்த்ததும் செய்யும் ஆசையில் வாங்கிட்டேன்.குறைந்த அளவுள்ள பாக்கெட்டாகவும் கிடைப்பதில்லை.எனவே,பெரிய டப்பாவாக வீட்டில் இருக்கிறது,என்ன செய்வதென்று தெரியாமல்.எனவே,அடுத்த ரெஸிபி எப்போது தருவீர்கள் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.ஹ ஹா.

Once again thanks for the nice recipe.

அப்படிய Clement?
சந்தோசம். கறித்தூளை வைத்திருங்கள். நான் என்ன குறிப்பு எழுதினாலும் கறித்தூள் தான் பாவிப்பேன், அதனால் கவலையே வேண்டாம். அதுவும் பழுதடையாது, நன்கு மூடி வைத்திருங்கள். ஏன் உங்கள் உறைப்புக் கறிகளுக்கும் அதனைப் பயன்படுத்தலாமே?

நான் இப்போ முக்கால்வாசி தேறிவிட்டேன், கேட்டது சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி. நீங்கள் எங்கே இருக்கிறீங்கள்?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நலமா.இப்போது உங்கள் உடல்நிலை எவ்வாறு உள்ளது.உங்களுடைய கணவாய் பிரட்டல் செய்து பார்க்க எனக்கு விருப்பம்.ஜெர்மனியில் கணவாய் கிடைக்கிறது.
இதில் தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால் எப்போது சேர்க்க வேண்டும்.கட்டியான தேங்காய் பால் என்றால் எவ்வளவு ml சேர்க்க வேண்டும்.உங்கள் பதில் கண்டதும் செய்ய விரும்புகிறேன்.நன்றி.

அன்பு அனுபா,
நான் இப்போ நலமாக இருக்கிறேன். மிக்க நன்றி. நீங்கள் தேங்காய்ப்பால் சேர்க்க விரும்பினால், கணவாயைப் போட்டுப் பிரட்டுக என்று உள்ளதே, அதற்கு முன் பாலை ஊற்றி, கொதித்ததும் கணவாயைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தண்ணிக் குழம்பாகத் தேவையெனில், பாதி டம்ளர் கட்டிப்பாலுக்கு பாதி டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்கு வற்றமுதல் இறக்குங்கள். பிரட்டலாகத்தான் தேவையெனில், பால் சேர்க்காமலே செய்யலாம், இல்லை சேர்க்க விரும்பினால் இதேபோல் பாதி பாதியாகக் கலந்து அரை டம்ளர் சேருங்கள். ஆனால் பால் சேர்க்க விரும்புகிறதனால், கணவாயை அவிக்கிறபோது நன்கு தண்ணி வற்றும்வரை அவித்து எடுத்துக்கொள்ளுங்கள். செய்துவிட்டுச் சொல்லுங்களேன். புரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அக்கா,

பதிலுக்கு நன்றி.நீங்கள் 200 ml கொள்ளளவு உள்ள டம்ளரையா குறிப்பிட்டுள்ளீர்கள்.

yes anupa,இப்போ அவசரமாக பதில் போடுகிறேன்,
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நலமா?உங்க பையன்கள் ரெண்டு பேரும் துறுதுறுன்னு அழகா இருக்காங்க.நேற்று கணவாய் பிரெஷ் மீன் கிடைத்தது. அதை வைத்து நீங்கள் கூறியது போல் தேங்காய் பால் ஊற்றி குழம்பு போல் செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. இனி அடிக்கடி வீட்டில் செய்வேன். மிகவும் நன்றி உங்களுக்கு.

அனுபா

கறி நன்றாக இருந்ததா? கேட்க சந்தோசமாக இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்