உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கல் தோசை

 

இந்த வகை தோசை மெத்தென்று இல்லாமல் சற்று கடினமாக இருப்பதனால் இதற்கு கல் தோசை என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

தேவையானப் பொருட்கள்

  • பச்சரிசி- ஒரு கோப்பை
  • புழுங்கலரிசி-ஒரு கோப்பை
  • உளுந்து- ஒரு கோப்பை
  • வெந்தயம்-ஒரு தேக்கரண்டி
  • உப்பு-ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

  • மேற்கூறியுள்ள பொருட்களில் உப்பைத்தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாளன்று அவைகளை மைய்ய அரைக்கவும்.
  • பிறகு அதில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும் புளிக்கவைக்க வேண்டிய அவசியமில்லை.
  • தோசைக் கல்லில் எண்ணெயைத் தடவி மிதமான அனலில் காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை வார்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
  • தோசை முழுவதும் வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே எடுத்துவிடவும்.
  • இந்த சுவையான தோசைக்கு காரக் குழம்பு அல்லது கார சட்னி பொருத்தமாக இருக்கும்.

வழங்கியவர்

மனோகரி

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 நபர்களுக்கு இரவு முழுவதும் ஊறவைத்தல் 30 நிமிடங்கள்
  random food image


comments