www.arusuvai.com
கல் தோசை
இந்த வகை தோசை மெத்தென்று இல்லாமல் சற்று கடினமாக இருப்பதனால் இதற்கு கல் தோசை என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
தேவையானப் பொருட்கள்
- பச்சரிசி- ஒரு கோப்பை
- புழுங்கலரிசி-ஒரு கோப்பை
- உளுந்து- ஒரு கோப்பை
- வெந்தயம்-ஒரு தேக்கரண்டி
- உப்பு-ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
- மேற்கூறியுள்ள பொருட்களில் உப்பைத்தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாளன்று அவைகளை மைய்ய அரைக்கவும்.
- பிறகு அதில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும் புளிக்கவைக்க வேண்டிய அவசியமில்லை.
- தோசைக் கல்லில் எண்ணெயைத் தடவி மிதமான அனலில் காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை வார்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
- தோசை முழுவதும் வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே எடுத்துவிடவும்.
- இந்த சுவையான தோசைக்கு காரக் குழம்பு அல்லது கார சட்னி பொருத்தமாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5 நபர்களுக்கு |
இரவு முழுவதும் ஊறவைத்தல் |
30 நிமிடங்கள் |