www.arusuvai.com
பெங்களூர் மசால் தோசை
தேவையானப் பொருட்கள்
- புழுங்கலரிசி/idly rice- இரண்டு கோப்பை
- பச்சரிசி-அரைக் கோப்பை
- உளுந்து- அரைக் கோப்பை
- கடலைப்பருப்பு- ஒரு மேசைக்கரண்டி
- ஆப்பச்சோடா- ஒரு சிட்டிகை
- உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
- எண்ணெய்-தேவையான அளவு
- உருளைக்கிழங்கு மசாலா- தேவையான அளவு
- தேங்காய்/ கார சட்னி- தேவையான அளவு.
செய்முறை
- மேற்கூறியுள்ள பொருட்களில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக கலந்து நான்கு மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
- பின்பு மிக்ஸியில் போட்டு ரொம்ப மைய்ய அரைய விடாமல் சற்று முன்னதான பதத்தில் எடுத்து உப்பைச் சேர்த்து இரவு முழுவதும் வைத்து புளிக்கவிடவும்.
- பின்பு மாவில் ஆப்பச்சோடா மற்றும் சிறிது நீரைச் சேர்த்து சற்று தளர கலக்கவும்.
- தோசைக் கல்லில் எண்ணெயைத்தடவி இளஞ்சூட்டில் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக வார்த்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றவும்.
- தோசை முழுவதும் வெந்ததும் எடுத்து விட்டவும்,திருப்பி போட வேண்டாம்.
- பின்பு அதன் மீது ஒரு தேக்கரண்டி தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியை தடவி நடுவில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து இரண்டு புறமும் மடித்து, சாம்பாருடன் மேலும் சட்னியை வைத்து சூடாக பரிமாறவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
இரவு முழுவதும் ஊறவைத்தல் |
30 நிமிடங்கள் |