ஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ்

தேதி: June 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பாஸ்மதி அரிசி - 2 கப்
நறுக்கின பீன்ஸ், சோளம், காரட் - ஒரு கப்
வெங்காயத்தாள் - 5
எலுமிச்சை - ஒன்று
நெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
புதினா இலை - 6
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு


 

வெங்காயத்தாளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
எண்ணெய் சூடானதும் அதில் 2 தேக்கரண்டி சீரகத்தை போட்டு பொரிய விடவும்.
சீரகம் பொரிந்ததும் துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தாளை போட்டு வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள காரட், பீன்ஸ், சோளம் ஆகியவற்றை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கி அப்படியே வேக விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்தவுடன் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை எடுத்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு காய்கறி கலவையுடன் போட்டு கிளறவும்.
இந்த கலவையுடன் நெய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்
பின்னர் அந்த கலவையை ஒரு முறை நன்கு கிளறி விட்டு எடுத்து ரைஸ் குக்கரில் போட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 15 நிமிடம் கழித்து வெந்ததும் திறந்து எடுத்து மேலே கொத்தமல்லி தழையை தூவவும்.
இப்பொழுது சுவையான ஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ் ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும். இதில் மிளகாய் மற்றும் மிளகாய் தூள் இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் இந்த ஈஸி கிட்ஸ் வெஜ் புலாவை செய்து காட்டியுள்ளார். செய்வதற்கு மிகவும் எளிதான வெஜ் புலாவ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்ன மஹா இப்படி அசத்துரீங்க ம் ம் நடக்கட்டும்!!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புஅட்மின் அவர்களுக்கு

வணக்கம்,இந்த ஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ் குறிப்பு என்னுடையது அல்ல வேறு யாருடையதோ என் பெயரில் போட்டு இருக்கிறீங்க ப்ளீஸ் விரைவாக சரியான நபரின் பெயரை போடவும்.இதை அவர்கள் பார்த்தால் மிகவும் வேதனை படுவார்கள்.ஏதோ தவறு நடந்து உள்ளது விரைவில் தீர்வு காணவும்.

மர்ழி சாரி இது என்னுடைய குறிப்பு அல்ல,உங்கள் பாராட்டுக்குரியவர் வேறு யாரோ.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஒஹ் அப்படியா!அட்மின் தற்சமையம் சென்னை டிராவலில் இருப்பார் உடனே முடியாது மாற்ற...அந்த அவசரத்தில் மாற்றி போட்டு இருப்பார் பாவம்...டைம் கிடைக்குறப்ப மாற்றுவார்...யாரும் தப்பா எடுக்க மாட்டாங்க பாவம் அட்மின் நிலமை அவங்களுக்கு நன்கு புரிஞ்சு இருக்கும்..

யாரு அனுப்பியது அனுப்பியவங்க தற்சமையம் சொன்னால் நல்லா இருக்கும்..தற்சமையம் மற்றவர்கள் பாதிவு போட...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

you are in online now

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹி மர்ழியா,
தவறுதலாகா அட்மின் அவர்கள் பெயர் மாற்றி இருக்கின்றார். அது என்னுடைய recipe தான்.

with love,
geethaachal

ஆஹா நீங்கதானா அந்த அம்மனி ரொம்ப சந்தோசம் அருமையா இருக்குமா உங்க குறிப்பு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மிகவும் நன்றி

HAI GEETHA HOW R U HOW WAS U R WEEKEND

BE GOOD TOO GOOD

கீதா ஆச்சல் பார்க்கவே அருமையா இருக்கு,டிரை பண்ணி பார்க்கிறேன்
இதில் வெங்கயம்,தக்காளி இல்லை, பிள்ளைகளுக்கு பிடிக்கும்.இதில் எலுமிச்சை எப்போது சேர்க்கனும் என்பதை குறிப்பிட வில்லை, அது அலங்கரிக்கவா?
ஜலீலா

Jaleelakamal

குழந்தைகள் விருப்பத்திற்கு எற்றாற்போல் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை நான் குறிப்பிட மறந்துவிடேன்.
with love,
geethaachal

ஹாய் கீதா,

நேற்று இரவு செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது .பீன்ஸ்க்கு பதிலாக பச்சை பட்டாணி சேர்த்தேன்,கலர்புல்லாக இருந்ததால்,பொடியனும் விரும்பி சாப்பிட்டான், நல்லவேளை நீங்கள் வந்து உங்கள் குறிப்பு என்றவுடன் தான் எனக்கு நிம்மதி வந்தது ,என்னுடைய பெயரை போட்டு இருந்ததைப் பார்த்து குறிப்பு அனுப்பியவர் என்ன நினைப்பாகள் என்றுதான் வருத்தம் அடைந்தேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

இந்த recipe என் மகளுக்கு(18 mths old )ரொம்ப பிடித்து விட்டது.இந்த குறிப்பிற்கு நன்றி.இது போன்ற குழந்தைகளுக்கு பிடித்தமான குறிப்பை மேலும் தாருங்கள்.Keep up the good work.
Thanks&regards,
Anu.

Be the best of what you are and the Best will come to you :)