இட்லி உப்புமா

தேதி: June 13, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

இட்லி - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - 6
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
தனியா - அரை மேசைக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி


 

இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சின்ன வெங்காயம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல், தனியா, பூண்டு போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின பெரிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அதிக தீயில் வைத்து நுரைத்து வரும் வரை 3 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும். கலவை கெட்டியாகி மிளகாய் வாடை போகும் வரை கிளறி விடவும்.
பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் இட்லியை போட்டு இட்லியில் எல்லா மசாலாவும் சேரும்படி நன்கு ஒன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
எளிதில் செய்ய கூடிய இட்லி உப்புமா தயார். பரிமாறும் பொழுது மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். உதிர்த்து விட்டு செய்வதை விட இதை போல் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. நிர்மலா சத்தியமூர்த்தி </b> அவர்கள். சமையல் கலையில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். சமையலில் பல வருட அனுபவம் கொண்ட இவர், தான் கற்றுக் கொண்டவற்றை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இட்லி உப்புமா செம டேஸ்ட். சாம்பார் பொடி எப்படி செய்வது?

என் மகள் B'Dayக்கு செய்தேன்.எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருந்தது.மிகவும் நன்றி

Be Good,Do Good