உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

  • valentines day
    12 நொடிகள் முன்பு -
  • சரியான விடை!!
    ஒரு நிமிடம் 40 நொடிகள் முன்பு -
  • Santho
    ஒரு நிமிடம் 42 நொடிகள் முன்பு -
  • கொடுமை பா
    3 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -

  • 4 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
  • தாமரை மாமி!!
    4 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
  • விடை
    5 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
  • Hi santho
    8 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
  • நன்றி வத்சலா
    8 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
  • மேனகா
    12 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
 

தக்காளி குருமா



தேவையான பொருட்கள்

  • தக்காளி- ஐந்து அல்லது ஆறு (சுமாரான அளவு)
  • பெரிய வெங்காயம்- இரண்டு(சுமாரான அளவு)
  • ஃபுரோசன் பச்சைபட்டாணி-இரண்டு மேசைக்கரண்டி
  • நசுக்கிய இஞ்சி-ஒரு அங்குலத்துண்டு
  • நசுக்கிய பூண்டு- இரண்டு பற்கள்
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து
  • கொத்தமல்லி- ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய்-கால்க் கோப்பை
  • பட்டை,கிராம்பு,ஏலம்,பிரிஞ்சி இலை-தலா இரண்டு
  • உப்புத்தூள்- இரண்டு தேக்கரண்டி
  • அரைக்க:
  • =========
  • தேங்காபூ- ஒரு கோப்பை
  • கசகசா- இரண்டு தேக்கரண்டி
  • சோம்பு-இரண்டு தேக்கரண்டி
  • மிளகு-ஒரு தேக்கரண்டி
  • பச்சைமிளகாய்- நான்கு
  • மிளகாய்த்தூள்-ஒருதேக்கரண்டி
  • தனியாத்தூள்-இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சத்தூள்-கால் தேக்கரண்டி

செய்முறை

  • தக்காளியை சுடுநீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகவிட்டு அதன் தோலை நீக்கி, நன்கு கரைத்து வைக்கவும்.
  • மிக்ஸியில் அரைக்கத் தேவையான பொருட்களைப் போட்டு மைய்ய அரைத்து தக்காளி கரைசலில் சேர்த்து, இரண்டு கோப்பை நீரையும் ஊற்றி கலக்கி வைக்கவும்.
  • இஞ்சிப் பூண்டை நசுக்கிவைக்கவும்,வெங்காயத்தை சற்று பெரியத் துண்டுகளாக்கவும்.
  • சட்டியில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் தக்காளி கரைசலை ஊற்றி உப்பைப் போட்டு நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
  • குருமா கொதித்து கெட்டிபதம் வந்தவுடன் பட்டாணி மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும்.
  • இந்த சுவையான குருமா இட்லி, தோசை,சப்பாத்தி ஆகியவற்றுக்கு நல்லபொருத்தமாக இருக்கும்.

குறிப்பு:

இதற்கு நன்கு பழுத்த தக்காளியாக தேர்வுச் செய்வது அதிக சுவையைக் கூட்டும். தேங்காப்பூ உலர்ந்தாக இருந்தால் அரைக் கோப்பை போதுமானது. பொதுவாக கசகசா எளிதில் அரைபடாது ஆகவே அதை சுடுநீரில் ஊறவைத்தோ அல்லது லேசாக வறுத்த பின்பு அரைத்தால் நன்கு மைய்ய அரைபடும். அல்லது காஃபி கிரைன்டரில் போட்டு பொடித்த பின்பும் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம். கசகசா கிடைக்காத பட்சத்தில் அதற்கு பதிலாக இந்த குறிப்பிற்க்கு முந்திரி பருப்பு ஆறு, அல்லது ஒரு மேசைக்கரண்டி உடைத்தகடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வழங்கியவர்

மனோகரி

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

6 நபர்களுக்கு 20-30நிமிடங்கள் 20 நிமிடங்கள்
  random food image


comments
மனோகரி மேடம்
செப்டம்பர் 10, 2008 - 9:42am - வழங்கியவர் mozhi

தக்காளி குருமா செய்தேனா வீட்டில் எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. நன்றி மேடம். இட்லி கூட சாப்பிட்டோம் தக்காளி குருமாவ. கசகசா சேர்க்கல முந்திரி தான் வச்சி அரைச்சேன் சூப்பர் டேஸ்ட்.

தக்காளி குருமா
செப்டம்பர் 12, 2008 - 3:43am - வழங்கியவர் Manohari

ஹலோ மொழி ரொம்ப சந்தோசமாய் உள்ளது. இந்த குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.