டிரை பேபி ஆலு

தேதி: June 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன உருளைக்கிழங்கு (பேபி பொட்டேட்டோ) - கால் கிலோ
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
சோள மாவு - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாபொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, அரிசி மாவு, சோளமாவு, உப்பு, மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி, தயிர் ஆகியவற்றை பிசறி உருளைக்கிழங்கை போட்டு ஊறவைத்து, 1/2 மணி நேரம் கழித்து ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை போட்டு பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்