கேரட் ரசம் (குழந்தைகளுக்கு)

தேதி: June 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் சுமாரான அளவு - ஒன்று
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகு சீரகம் - தலா அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
நெய் அல்லது எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி


 

கேரட்டை வேகவைத்து நன்கு மசித்து வைக்கவும்.
மிளகு சீரகம் மற்றும் பருப்புகளை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும்.
புளியை ஊறவைத்து இரண்டு கோப்பை நீரில் அதை கரைத்து வடிகட்டவும்.
பின்பு அதில் மசித்த கேரட், தயாரித்து வைத்துள்ள பொடி, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, மற்றும் மஞ்சள்தூள், உப்புத்தூளைச் சேர்த்து கொதிக்கவிட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
பின்பு ஒரு சிறிய சட்டியில் நெய்யை ஊற்றி கடுகை பொரியவிட்டு பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை உடைக்காமல் முழுதாகவே போட்டு வறுத்து ரசத்தின் மீது கொட்டவும். சுவையான கேரட் ரசம் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா புது சுவை & மணமுடன் நன்றாக இருந்தது. நன்றி அக்கா.

நன்றி அரசி, இந்த ரசம் குழந்தைகள் முதல் பெரியவராலும் விரும்பப்படும் குறிப்பு. இதைச்செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மனமார்ந்த நன்றி.

என் மகனுக்கு உங்கள் கேரட் ரசம் மிகவும் பிடித்தது.சுவை நன்றாக இருந்தது. இனி வாரம் ஒரு நாள் தங்கள் ரசம் தான். நன்றி...
அன்புடன் ,
மீனா

அன்புடன் ,
மீனா

மனோகரி மேடம், உங்க கேரட் ரசம் அசத்தலா இருக்கு.சுவையோ சுவை. என் குழந்தைக்கு மிகவும் பிடிச்சிருக்கு.எங்க வீட்டில் அனைவரின் ஓட்டும் இதற்க்கு உண்டு. வாரத்தில் 2 முறையாவது இந்த ரசம் வைச்சிருவேன்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.