பிரெட் புட்டு

தேதி: June 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

பிரெட் - 12
முந்திரி - 10
திராட்சை - 15
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
சீனி - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்


 

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிரெட்டின் ஓரத்தில் உள்ள பகுதியை வெட்டி எடுத்து விடவும். பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொலபொலவென்று பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அதனுடன் பொடி செய்து வைத்திருக்கும் பிரட்டை போட்டு ஒன்றாக கிளறி விடவும்.
அதன் பின்னர் பிரெட்டுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பிறகு சீனியை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு உடனே இறக்கி விடவும். விருப்பட்டால் இறக்கும் பொழுது மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கலாம். சீனி கரையும் முன் இறக்கி விட வேண்டும்.
இந்த பிரெட் புட்டு எளிதில் செய்ய கூடிய மாலை நேர சிற்றுண்டி. இதனை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. ஜீவா சிவகுரு </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான மாலைநேர உணவுதான். பிரட் ஒருவரும் சாப்பிடாமல் பழுதடையும் நேரம் இப்படி செய்தால் எல்லோரும் விரும்பி உண்பர். நல்ல குறிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ப்ரட் புட்டு ரொம்ப நல்லா இருந்தது.நான் எப்பவும் ப்ரட் பாக்கெட்டில் முதல் மற்றும் கடைசி ப்ரடை வேஸ்ட் பன்னுவேன்.இதை பார்த்தவுடன் சரி செய்து பார்க்கலாம் என்று அந்த இரண்டு துண்டு ப்ரடுகளையும் செய்தேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.ரொம்ப நன்றி.இனி ஒவ்வொரு பாக்கெட் வாங்கும் பொழுதும் செய்வேன்
அன்புடன் பிரதீபா

ஹாய் ஜீவா ரொம்ப அருமை.
நானும் பிரெட் ரெஸிபி வரத்தில் முன்று முறை செய்வேன் ஆனால் கடைசி பிரெட் முதல் பிரெட் வேஸ்ட் ஆகும்.
டிரை பண்ணி பார்க்கிறேன்.
பசங்க ஒகே சொல்லிட்டா ஜோர் தான் ஏனா புட்டு என்றால் ரொம்ப பிடிக்கும்.வாரம் ஒரு முறை சனிகிழமை எங்க வீட்டில் புட்டு தான். மாவு தீர்ந்து விட்டால் இனிப்பு உருண்டை சோறு (அ) அக்கார வடிசல்
ஜலீலா

Jaleelakamal

பிரட் அல்வா தவிர அதிகம் நெய் சேர்க்காமல் ஸ்வீட்டா பிரட்டில் என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். இந்த குறிப்பை எங்களுக்காக செய்து காண்பித்ததற்கு ரொம்ப நன்றி. பார்க்கவே நல்லா இருக்கு. சுவையும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

புட்டு மிகவும் அருமை.செய்வதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.இந்த குறிப்புக்கு நன்றி.

best regards,
anu.

Be the best of what you are and the Best will come to you :)

Be the best of what you are and the Best will come to you :)

ஹாய் ஜீவா,இரண்டு வாரமா வீக் எண்ட்டில் பிரெட் புட்டு செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.முதலில் கோதுமை பிரெட்டில் செஞ்சேன். பிறகு குட்டி பன்னை( லன்ச் ரோல்)பிய்த்துப்போட்டு மிக்சியில் அடிச்சு செஞ்சு பார்த்தேன். அதுவும் நல்லா வந்தது. இந்த குறிப்பு எனக்குப் பிடிச்ச ஈசியான ரெசிப்பியில் ஒண்ணாயிடுச்சு. ரொம்ப நன்றி.

ஹாய் ஜீவா ,மிகவும் அருமை ,நேற்றூ மாலை செய்தேன்,என் ஹஸ்பண்ட் விரும்பி சாப்பிட்டார்.தாங்ஸ் ஜீவா

அண்ணா நான் அனுப்பியிருந்த படம் கிடைத்ததா?தப்பா அனுப்பிடேனோ??எனக்கு எங்க கேக்கனும்னு தெரில அதன் இதுல கேட்ருக்கேன்...

அம்மு.

உங்க இந்த குறிப்பு நன்றாக இருந்தது என் பொண்ணு விரும்பி சாப்ட்டிட்டாள்..ஏலக்காய் பவுடருக்கு பதில் எசன்ஸ் சேர்த்து செய்தேன்..நன்றி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு