புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

தேதி: June 18, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புடலங்காய் - 2 கப் (பொடி கட்டங்களாக நறுக்கியது)
கடலைப்பருப்பு - 1/2 கப்
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/2 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - ஒரு பல்
தாளிக்க:
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
உப்பு - தேவைக்கேற்ப


 

முதலில் புடலங்காயின் உள்ளே சுத்தம் செய்து பின்னர் வெளிப்புறத்தை நன்றாக கழுவி விட்டு அதனை பொடி கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பை முக்கால் பதம் வேக வைக்கவும் (அதாவது பருப்பு சுண்டல் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்).
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் புடலங்காயை போட்டு வதக்கவும். முக்கால் பதம் வெந்த கடலைப்பருப்பையும் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு அதில் 1/2கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய்துருவல், சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், பூண்டு போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீர் வற்றி புடலங்காய், கடலைப்பருப்பு வெந்து வரும் போது அரைத்துவைத்துள்ள கலவையை போட்டு 2 நிமிடம் கிளறி, பச்சை வாசம் போகும் வரை வதக்கிவிட்டு இறக்கவும்.
ரசம் சாதத்துடன் இந்த புடலை, கடலைப்பருப்பு கூட்டை பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்