எலுமிச்சம் பழ ரசம் - 2

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலுமிச்சம் பழம் - 2
ரசப்பொடி - ஒன்றரை தேக்கரண்டி
பருப்பு - கால் கப்
பெருங்காயம் - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழங்களை நறுக்கி சாறு பிழியவும்.
வேக வைத்த பருப்புடன் ரசப்பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கி, எலுமிச்சம் பழச் சாறு சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
அதில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு பச்சைமிளகாயை கீறிப்போட்டு லேசாக வதங்கியதும் இறக்கி ரசத்தில் கலந்து கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்