பட்டர் சிக்கன்

தேதி: June 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ (எலும்பில்லாதது என்றால் மிகவும் நன்று)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
முந்திரிப்பருப்பு - 10
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
உருக்கிய பட்டர் - அரை கப்


 

முதலில் சிக்கனை துண்டுகளாக்கி அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் கலந்து 2 மணிநேரம் ஊறவிடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி பட்டர் சேர்த்து அதில் ஊறவைத்த சிக்கனை கொட்டி கிளறி தீயை மிதமாக வைத்து மூடிவைக்கவும். 15 நிமிடத்தில் தண்ணீர் வெளியேறி இருக்கும்.
பிறகு தீயை கூட்டி மேலும் தண்ணீரை முழுவதும் வற்ற வைத்து எடுக்கவும். வெங்காயத்தை நான்காக நறுக்கி ஒரு அப்பளம் சுட்டெடுக்கும் கம்பியில் நான்கு துண்டுகளையும் வரிசையாக குத்தி அடுப்பில் காட்டி தீயில் சுட்டெடுக்கவும்.
இதுப்போல் இரண்டு வெங்காயத்தையும் சுட்டெடுத்து ஆறியதும் அரைத்து வைக்கவும். தக்காளியையும் அதே போல் முழுவதுமாக குத்தி சுட்டு தோல் உரித்து ஆறவிடவும்.
முந்திரிப்பருப்பை ஊறவைத்து அதனை ஆறிய தக்காளியோடு அரைத்து வைக்கவும்.
மீதமுள்ள பட்டரை காயவைத்து அதில் சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை மாறும் வரை வதக்கவும். பின் வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி முந்திரி விழுதும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பும் சேர்த்து வதக்கி வெந்த சிக்கனையும் சேர்த்து 1/2 கப் தண்ணீரும் சேர்த்து சிக்கன் வேகும் வரை சுமார் 15 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையாக பட்டர் சிக்கன் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

தளி இந்த ரெஸிபி கொஞ்சம் டிபெரெண்ட் ஆனால் கை வசம் சிக்கன் இல்லை இந்த வாரம் புல்லா வெஜ் தான்.
ஆனால் இதே முறையில் இன்று பட்டர் பண்ணீர் மட்டர் மசாலா செய்து விட்டு வந்தேன் இரவு பரோட்டாவிற்கு, சாப்பிட்டு பார்த்து சொல்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

தளிகா நேற்றி இரவு சப்பாத்திக்கு செய்தேன்,வெரி டேஸ்டி,நைட் டைம் என்பதால் கொஞ்சமா செய்தேன்,அவருகிட்ட திட்ட வாங்க முடியல,நல்லா சமைச்சா கொஞ்சமா தான் சமைப்பீயான்னு,நாளைக்கும் இதே செய்து தரேன் என்று சொல்லி இருக்கேன்,மீண்டும் செய்வேன்,ரெம்ப நல்லா இருந்தது
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி ரேனு இன்னைக்கு பின்னூட்டம் பார்ப்பதற்காகவே மகளுக்கு ஸ்வீட் செய்து கொடுத்துட்டு வந்து உக்காந்திருக்கேன்..ரொம்ப சந்தோஷம்