புளி இல்லா குழம்பு

தேதி: June 23, 2008

பரிமாறும் அளவு: 4 persons

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வறுத்து அரைக்க:
மிளகு - 1/2 தே .க
ஜீரகம் - 1 தே.க
அரிசி - 1/2 தே.க
கா.மிளகாய் - 4
தேங்காய் - 3 தே.க
வேக வைத்த து.பருப்பு - 1 கப்
குழம்பில் முருங்கைக்கீரை (அ)முருங்கைக்காய் (அ) கத்திரிகாய் சேர்க்கலாம்


 

செய்முறை

வறுக்க வேண்டியவற்றை வறுத்து தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.பின்னர் காயை சேர்த்து வதக்கவும்.பின்னர் தண்ணீர் சேர்த்து காயை வேக விடவும்.

காய் வேந்த பின் பருப்புடன் அரைத்த விழுது சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.சுவையான குழம்பு தயார்


இதில் முருங்கைகீரை சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

என்ன லக்ஷ்மி ஸ்ரீ நீங்க தெலுங்கா

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றி.புளி சேர்க்காது குழம்பு செய்வது பற்றி சொல்லி தந்ததுற்கு.Take time to laugh.It is the music of the soul.

மிக்க நன்றி ஜலீலா அக்கா,நான் தமிழ் பொண்ணு தான்.பதிலுக்கு நன்றி.
lakshmi sri sundar

lakshmi sri sundar

Hi.. This is Deepa from Singapore.. It s great to see your recepie, please tell me should i add Chilli powder to this or not??

Thanks in advance..

Deepa

Deep

lakshmi sri sundar
thanks deepa.sorry i m logging in after a long time.no need to add chilli powder as we grind chillies and peper together.best regards

lakshmi sri sundar