கேரட் ஊறுகாய்

தேதி: June 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - ஒன்று
மாங்காய் - பாதி
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காய பொடி - ஒரு துண்டு (அ) கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வினிகர் - மூன்று மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

கேரட் ஒரு சென்டி மீட்டர் அளவில் நறுக்கி கொள்ளுங்கள், மாங்காயை மீடியமாக நறுக்கி கொள்ளுங்கள். பச்சை மிளகாய் மீடியமாக நறுக்கி கொள்ளுங்கள்.
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
நல்லெண்ணெயை சூடுப்படுத்தி அதில் பெருங்காய பொடி, வெந்தய பொடி, மிளகாய் தூள், சீரக தூள், தனியாதூள் எல்லாம் போட்டு மாங்காய், கேரட், பச்சை மிளகாய் அனைத்தும் போட்டு நன்கு வதக்கி சிறிது நேரம் வேக விட்டு இறக்கவும்.
ஆறியதும் அதில் மூன்று மேசைக்கரண்டி வினிகர் ஊற்ற வேண்டும்.


இது நான் சுவைத்ததை வைத்து கொடுத்துள்ளேன் செய்து பாருங்கள்.
அந்த கேரட்டும் பச்சை மிளகாயும் வினிகரில் ஊறியதும் ஆகா சூப்பர்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா அக்கா உங்களுடைய குறிப்பில் கேரட் ஊறுகாய் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"