கொண்டைக்கடலை முட்டை

தேதி: June 23, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளை கொண்டைக்கடலை - 1 1/2 கப்
முட்டை - 2
வெங்காயம் - 1/2 கப் (மிகப்பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 கப் (மிகப்பொடியாக நறுக்கியது)
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 கீற்று (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு


 

கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து உப்புப்போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும், வெங்காயம், மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போடவும், கரம் மசாலத்தூள் போட்டு நன்றாக கிளறி தேவையான அளவு உப்பும் போட்டு (தக்காளி, வெங்காயத்திற்கு தேவையான உப்பு மட்டும் போடவும்) 1/4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் வற்றி கலவை குழைவாக இருக்கும்போது உடைத்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக கிளறிவிடவும், முட்டை நன்றாக கலந்து விடவும் திட்டு திட்டு ஆக இருக்ககூடாது.
கடைசியில் வேகவைத்து எடுத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து நன்றாக எல்லாமும் சேரும்மாறு கிளறி இறக்கவும். நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழையை தூவவும்.
இந்த கொண்டைக்கடலை முட்டையை சப்பாத்தி, பூரி, ப்ரெட் இவற்றுடன் தொட்டுக்கொள்ளலாம்.


இது ஒரு பாகிஸ்தான் ரெசிப்பி. கொண்டைக்கடலையில் உப்புப்போட்டு வேக வைத்துள்ளதால் உப்பு போடும் போது பார்த்து போடவும்.

மேலும் சில குறிப்புகள்