பீர்க்கங்காய் கூட்டு

தேதி: June 24, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பீர்க்கங்காய் - 1(சுமாரானது)
வெங்காயம் - பாதி(பெரியது)
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தாளிப்புக்கு
தேங்காய் பால் - கால் கப்
இரால் 5 வரட்டியது
சிறு பருப்பு - 2 மேசைக்கரண்டி


 

முதலில் பீர்க்கங்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.பின் சிறியதாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிது தாளிப்புக்கு எடுத்து வைக்கவும்.

சிறு பருப்பை வறுத்து வைக்கவும்.

பின் பீர்க்கங்காயில் வெங்காயம்,சிறு பருப்பு,மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு,வரட்டிய இரால்,தேங்காய் பால் சேர்த்து வைக்கவும்.

பின் சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,கருவேப்பிலை போட்டு தாளித்து, பீர்க்கங்காய் கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வேகவிடவும்.

நன்கு வெந்து தண்ணீர் முழுவது வற்றி கூட்டு போல் ஆனதும் இறக்கி விடவும்.


இது வெள்ளை சாதம்,மீன் குழம்பு உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்