சீரக கஞ்சி

தேதி: June 24, 2008

பரிமாறும் அளவு: 4 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - முக்கால் டம்ளர்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவியது - கால் கப்
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - ஒரு மேசை கரண்டி
தேங்காய் பால் - கால் கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி


 

சின்ன வெங்காயம் 6, சீரகம், தேங்காய் இவற்றை அரைத்து கொள்ள வேண்டும்.
அரிசியை களைந்து பத்து நிமிடம் ஊற வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் நான்கு டம்ளர் ஊற்றி மஞ்சள் பொடி, உப்பு, தனியாதூள், வெந்தயம் போட்டு கலக்கி குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கவும். தீயை சிம்மில் வித்து விடனும் இல்லை என்றால் தெரிக்கும்.
வெந்த கஞ்சியில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கடைசியில் ஒரு ஸ்பூன் நெய்யில் மீதி உள்ள நான்கு சின்ன வெங்காயத்தை நல்ல வதக்கி வெந்த கஞ்சியில் ஊற்றி இறக்கவும்.


இது வயிற்றுக்கு இதமானது உடல் சூட்டை தணிக்கும், பிள்ளை பெற்றவர்களுக்கு, அபார்ஷன் ஆனவர்களுக்கு, வயிற்று புண், அல்சர் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்தாகும், மதிய சாப்பாடு ரொம்ப ஹெவியாக இரவு லைட்டாக இந்த கஞ்சி குடித்து கூட நார்த்தங்காய் ஊறுகாய் (அ) கீரின் துவையல் சாப்பிடுங்கள்.
தேங்கயாய் பால் அதிகம் வேண்டாம் என்று நினைப்பவர்கள், டயட்டில் உள்ளவர்கள் கடைசியில் ஊற்ற வேண்டாம். அரைத்து ஊற்றியதே போதும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா இது குழந்தைகளுக்கு பிடிக்கும் டேஸ்டில் இருக்குமா..புழுங்கல் அரிசியில் செய்ய கூடாதா பச்ச்ரிசியில் தான் செய்யனுமா

புழுங்கல் அரிசி முழுசா நிற்கும் வேண்டுமானால் புழுங்கல் அரிசியை லேசா வருத்து நொய் போல் மிக்சியில் பொடிச்சி அப்பரம் செய்யலம்.ருசி அமோகம இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

குக்கரில் மூன்று விசில் விடுரோமே சாத அரிசிக்கு 1 விசில் தானே விடுறோம் அப்ப வேகுமில்லையா

இது நோன்பில் செய்யும் ஒரு வகை கஞ்சி நல்ல கொதித்ததும் அரிசியை போட்டு மூடி போட்டு ஹாக்கிங்ஸ் குக்கர் என்றல் தீயை குறைத்து வைத்து முன்றாவது விசில் அடிக்கும் போது அடுப்பை அனைட்து விடனும்
ஜலீலா

Jaleelakamal

ஓஹ் நம்ம ஜீரகக் கஞ்சி.அடப்பாவமே நான் மறந்துட்டேன்.கேரளா ஸ்பெஷல் தான் இதுன்னில்ல நெனச்சுட்டிருந்தேன்.