சர்பத் சிரப்(நன்னாரி)

தேதி: June 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சர்க்கரை - 3 ஆழாக்கு (600 கிராம்)
நன்னாரி எசன்ஸ் - 1/8 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு பின்ச் அளவு


 

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 2 கிளாஸ் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கொதிக்கவிடவும். கரைந்த பிறகு 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிடவும்.
நல்ல குளிர்ந்தவுடன் ஒரு சொட்டு எசன்ஸ், அஜினோமோட்டோ உப்பு போட்டு கலக்கி, ஈரமில்லாத பாட்டிலில் ஊற்றி வைத்தால் தேவையான நேரத்தில் 1/4 கிளாஸ் சிரப் விட்டு பாதி எலுமிச்சை பிழிந்து, 3/4 பங்கு தண்ணீர் விட்டு 3 ஐஸ் கட்டிகள் போட்டு கலக்கினால் சுவையான சர்பத் தயார்.


வெளிநாட்டில் இருப்பவர்கள் நன்னாரி பாட்டில் வாங்கமுடியாது. எசன்ஸ் வைத்து கொண்டால் நிறைய நாட்களுக்கு பயன்படுத்தலாம். நன்னாரி எசன்ஸ் விடாமல் ரோஸ் எசன்ஸ் விட்டால் ரோஸ் மில்க் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்