பாலக் பனீர்

தேதி: June 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பேபி ஸ்பினாச் - ஒரு கட்டு
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - கால் பாகம்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பொரித்த பனீர் - 8 அல்லது 10 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஸோர் கிரீம் - ஒரு மேசைக்கரண்டி


 

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கின தக்காளியை போட்டு அதனுடன் வேக வைத்த கீரையை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்திருக்கும் கீரை தக்காளி விழுதை ஊற்றி உப்பு போட்டு 15 நிமிடம் வேக விடவும்.
பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு ஸோர் கிரீம் சேர்த்து பரிமாறவும்.
பாலக் பனீர் தயார். இதை சப்பாத்தி, நாண், தந்தூரி ரொட்டியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இந்த குறிப்பை அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. நித்யா கோபி </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் இதை செய்து பார்த்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

PANEER ENRAL ENNA? INGU CANADAVIL VERU PEYARAHA IRUKKALAM AANAL ENAKKU THERIYATHU. THAYAVU SEITHU YAARUM SOLLA MUDIYUMA?

GOWRI.J

பன்னீர் என்பது பாலாடைகட்டியை குறிக்கும். இது இந்தியன் சூப்பர் மார்கெட்களில் கிடைக்கும்

Its an excellent site to all house wives

nandrey chevir
naan france-il vacikeren.ingu spinach enbatharku enna peyar.ingu epinard endra oru keerai irukirathu.athai payanpaduthalama.thayavu seithu solla mudiyumma.please....

nandrey chivir

அன்பு அவந்திகா
ஆங்கிலத்தில்spinach

பிரெஞ்சில்epinard

தமிழில் கீரை
நீங்கள் இருக்கும் நாட்டில் அரைத்தது போலவே சிறிய சிறிய பெட்டிகளாக இருக்கிறது

மொத்தத்தில் எல்லாம் ஒன்றுதான் படத்தைப்பாருங்கோ அதேதான் est-ce que tu comprends ce que je dis?

nandrey chivir
thozi surejini-ku enn manamarntha naandri.enn kulanthai-ku udanmbu sariellamal ponathal ungal pathilai udanai parkamudiyamal ponaatharku enathu varuthathai therivithu kolkiren. ungal anbana pathiluku nandri.mendum oru murai ungaluku naandri kuri kolkiren.arusuvai vazka!valarca!

nandrey chivir

இன்னைக்கு எங்க வீட்டீல் பாலக் பனீர்தான். ரொம்பா ஈசியா இருக்கு.

The food which makes you hungry shortly is the suitable food for you.