பச்சரிசி இட்லி

தேதி: June 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 2 ஆழாக்கு
அவல் - 1/2 ஆழாக்கு
உளுந்து - 4 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
பச்சைமிளகாய் - 4
பால் - 50 கிராம்
தயிர் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு


 

பச்சரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊறவைக்கவும்.
தனித்தனியாக அரிசியுடன் தேங்காய் சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து ஒன்றாக உப்பு போட்டு கலக்கவும்.
அவலை 1/2 மணி நேரம் ஊறவைத்து மாவுடன் சேர்த்து தயிர், பால் சேர்த்து கரைத்து புளிக்கவைக்கவும்.
கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு மாவில் கொட்டி இட்லியாக ஊற்றி வேகவிடவும்.


விரத நாட்களில் புழுங்கலரிசியில் செய்யாமல் பச்சரிசியில் இதுபோல் இட்லி செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்