அகத்திக்கீரை பொரியல்

தேதி: June 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

அகத்திக்கீரை - ஒரு கட்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் சில் - 2
பச்சைமிளகாய் - 3
பூண்டு - 2 பல்
வெங்காயம் - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேங்காய், சீரகம், பச்சைமிளகாயை அரைத்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து தட்டிய பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு கீரையை தண்டிலிருந்து உருவி கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு வேக விடவும். கடைசியில் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.


எந்த கீரை சமைத்தாலும் உப்பு கடைசியில் தான் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் கீரை கடுத்து விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அகத்திக்கீரை பொரியல் பொரியல் செய்தேன் சுவையாக இருந்தது.மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"