உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

ஃப்ரைடு சப்பாத்தி



தேவையானப் பொருட்கள்

  • சப்பாத்தி - 6
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • ஸ்பிரிங் ஆனியன் - கால் கப்
  • பச்சை மிளகாய் - 2
  • துருவிய கேரட் - கால் கப்
  • துருவிய முள்ளங்கி - கால் கப்
  • நறுக்கின பீன்ஸ் - கால் கப்
  • தக்காளி - பாதி
  • முட்டை - ஒன்று
  • சிக்கன் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
step 1
சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
step 2
வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை போட்டு சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
step 3
அதன் பின்னர் மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
step 4
பிறகு நறுக்கின முள்ளங்கி, கேரட் மற்றும் வதக்கி எடுத்து வைத்திருக்கும் பீன்ஸை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
step 5
இந்த காய்கறி கலவையுடன் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
step 6
பின்னர் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 அல்லது 4 மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து கிளறி விடவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு கிளறவும்.
step 7
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு அதில் மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
step 8
சுவையான ஃப்ரைடு சப்பாத்தி ரெடி. இதனுடன் கோஸ், குடைமிளகாய் மற்றும் வேக வைத்த பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.
step 9
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் குறிப்பு இந்த ஃப்ரைடு சப்பாத்தி.
step 10


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
hey geetha
ஜூன் 30, 2008 - 1:03am - வழங்கியவர் coolfrend

it is a cool dish..kalakitinga ponga..yenga irukinga neenga..why dont u email me..let us be in touch..i may not check this site everyday