பட்ஜெட்

வீட்டு பட்ஜெடை எப்படி ஒழுங்கு படுத்துவது? ஒரு முறை படிப்பு செலவு முன் நிற்கிறது. மற்றொருமுறை மருத்துவ செலவு முன்னிலை வகிக்கிறது. எப்படி முறைப்படுத்துவது என்று கூறுங்கள் ப்ளீஸ். உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம். நன்றி.

மாஜி எங்க வீட்டில் ரொம்ப நாள் போராட்டத்துக்குபின் இப்போ கடந்த 1 வருடமாக எல்லாம் ஒழுக்கமா போறது.
ஒரு எக்செல் ஷீட் போட்டு வச்சிருக்கேன்.
முதலில் கிடைக்கும் சம்பளத்தின் 25% சேமிப்பு..அதிலுள்ள மீதி 75% தான் செலவுக்கு..
25%சேமிப்பு மீதமாகுவதைப் பொறுத்து கூடலாம்.
மீதமுள்ள 75%இல் மாதாமாதம் தவறாமல் வரக் கூடிய வீட்டு வாடகை,தண்ணீர்,கரென்ட்,ஃபோன் பில்,ஸ்கூல் ஃபீஸை கூட்டி வச்சு க்ழித்துக் கொள்ளனும்.
மீதி கிடைப்பதில் உணவுக்கு,வாரம் வெளியே போனால் வரும் செலவுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துக் கொள்ள வேண்டும்.
10 காசை செலவு ச்ர்ய்தாலும் அதை அன்றே எழுதி வைத்துப் பாருங்கள்..மாத இறுதியில் மீதம் சில்லரைகளாவது இருக்கும்...கணக்கில்லாவிட்டால் பாக்கெட் காலியாவதே தெரியாது..களைவது கூட அளந்து களையனும் என்பார்கள்..அது மாதிரி கணக்கு போடுங்கள்...எல்லா செலவும் போக அவசரத்துக்கு எடிர்பாராமல் வரும் செலவுக்கு என ஒரு தொகையை மாற்றி வைய்யுங்கள்...அது செலவாகாவிடால் சேமிப்பு.

நன்றாகவே சொன்னீர்கள் தளிகா அன்று உள்ள செலவை அன்றன்றைக்கு நோட் பண்ணி வைத்துக் கொண்டால்,மாத இறுதியில் எதை அவாஇட் பண்ணலாம் என்று கூட ஒரு முடிவிற்கு வருவதற்கு உதவியாக இருக்கும்.

தளிகா

நீங்க குழந்தை வளர்ப்பில்தான் புலி என்று நினைத்தேன். வீட்டு நிர்வாகத்திலும் புலியாய் இருக்கிறீர்கள்.
உங்களுடைய இந்த Budget ப்ராக்டீஸை நான் இந்த மாதத்தில் இருந்து follow பண்ணலாம்னு இருக்கேன். நன்றி

தளிகா பிடி பட்டத்தை. 'கருத்துக் களஞ்சியம்' என்ற பட்டத்தைப் பெற்று நலமுடன் வளமுடன் வாழ்வாயாக.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆமாம் மாஜி இதுகென்னே ஒரு நோட் போட்டுப்பேன் மாச செலவை அதோட எக்ஸ்டா செலவுன்னும் இப்படி போட்டால் செலவுக்கு ஈஸியா இருக்கும் நான் மாசம் பணம் வந்ததும் உடனே அந்த நோட்டை எடுத்து உட்கார்ந்து அதில் இருக்கும் எல்லாத்துக்கும் பணத்தை எடுத்து வைப்பேன் சொந்த வீடு என்பதால் வீட்டுக்கு மட்டும் கட் இப்படி சேகரித்தால் எக்ஸ்ரா செலவுக்கு சில மாசம் மிச்சமாகும் அது போல சில பணம் மிச்சமாகும் அது உண்டியலுக்கு போயிடும் அதோட கை செலவுக்குன்னு குறிப்பிட்ட பணம் வைத்துட்டு மீதியை நகை சீட்டு,வட்டி இல்லா பாலிசி இப்படி ஏதாவதில் எடுக்க முடியாத மாதுரி போட்டுடுவேன் (கையில் அல்லது பேங்கில் இருந்தால் கை நமக்கும் எடுத்து செலவு பண்ணனும்னு அதனால்தான் இப்படி ஹி ஹி)குறிப்பிட்ட காலத்தில் கைக்கு வரும் நல்லதுதானே!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

காலதாமதமாக நன்றியைத் தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். நான் இன்று தான் பதிவைப் பார்த்தேன். நன்றி அன்பு தெய்வங்களே

enrum inithe vaazhga

நா எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.ஐயோ பட்ஜெடான்னு நினைச்சா தான் போடுறது கஷ்டம்.இது ஒண்ணுமே இல்ல.பில்,லோன் வேற எதாவது கட்றது எல்லாத்தையும் ஒருத்தரே பண்ணுங்க.பேங்க்,கிரிடிட் கார்ட் இதுஎல்லாம் ஒருத்தர் பாத்துக்கோங்க.கணக்கும் ஈஸியா டேலி ஆகும் கன்ப்யுஸனும் வராது.கைல காசு இருந்தா செலவு ஆயிட்டே இருக்கும்.சோ பசங்க பேர்ல பாலிஸி,உங்களுக்கு பாலிஸி இது மதிரி ஒரு 10% போட்டுருங்க.10%நார்மல் சேவிங்ஸ்.இது எப்ப வேணும்னாலும் நாம எடுக்கிற மாதிரி இருக்கணும். இதுல கொஞ்சம் சேந்த உடனே எடுத்து பிக்ஸட்ல போட்ரலாம்.காசும் சேரும். ரிலாக்ஸாடா இருக்கலாம்.இது நா பாலோ பண்ற மெத்தட்.பிடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

தங்களுடைய கருத்துக்கு நன்றி. முயற்சிக்கிறேன்

enrum inithe vaazhga

வணக்கம் மாஜி,

நான் எங்கள் வீட்டு வழிமுறையை சொல்கிறேன். ஒவ்வொரு செலவுக்கும் தனித்தனியாக கவர் போட்டுக்கொள்கிறோம். உதாரணத்திற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை ஆகும் செலவை 6 ஆகப்பிரித்து தனி கவரில் வைத்துக் கொண்டே வருவோம். அதுபாட்டுக்கு சேர்ந்துக்கொண்டெ வரும்.இப்படி எல்லா செலவையும் திட்டமிட்டு விட்டால், நிம்மதியாக இருக்கலாம். மறக்காமல் எதிர்பாராத செலவுக்கும் ஒரு தொகையைஎடுத்து வையுங்கள். இதுதான் வரவு, இதற்குள் செலவு செய்யவேண்டும் என்ற மனக்கட்டுப்பாடு முக்கியம். 20 சதம் சேமிப்பும் அவசியம். வாழ்த்துக்கள்.

கடன் பிரச்சனை இருந்தல் எப்படி சேமிக்கமுடீஇம். வரும் சம்பலம் விடு கடனுக்கே சரியாக இருக்கும். சேமிப்பு என்பது கனஉ தான் என் குடும்பத்தில்.

மேலும் சில பதிவுகள்