ஈசி சிக்கன் பிரியாணி

தேதி: June 28, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1 / 2
தக்காளி - 1 / 2
பூண்டு - 8 பல்
இஞ்சி - 2 அங்குலம்
புதினா தழை - ஒரு கை நிறைய
மல்லித்தழை - ஒரு கை நிறைய
சோம்பு - 1 / 2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 8 அல்லது 9 (தேவைக்கேற்ப)
சின்ன வெங்காயம் - 7 அல்லது 8
பிரியாணி அரிசி - 3 கால் படி
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்


 

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி, புதினா தழை, மல்லித்தழை, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் தேவையான அளவு ஆயில் ஊற்றி 1 பட்டை சேர்க்கவும். இதில் நறுக்கிய பெரிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் 2, சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இதில் அரைத்த விழுதை சேர்த்து 6 அல்லது 7 நிமிடங்கள் வதக்கவும். இதில் மூன்று சொம்பு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியைப் போட்டு குக்கரை மூடி வைக்கவும். வழக்கம் போல் மூன்று அல்லது நான்கு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஸ்டீம் போனவுடன் குக்கரைத் திறந்து கிளறி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றாகவும், எளிதாகவும் இருந்தது எங்களுக்கு ரொம்பபிடித்திருந்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்