பாஸ்தா ஜம்போ ஷெல்

தேதி: June 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. மாலினி </b> அவர்கள் வழங்கியுள்ள குறிப்பு இது. இத்தாலியன் பாஸ்தாவை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

பாஸ்தா Jumbo ஷெல் - 20
பாஸ்தா சாஸ் - ஒன்றரை கப்
பார்மஜான் சீஸ் - 1/2 கப்
பாஸ்தா ஷெல்லில் வைக்க தேவையானவை (Stuffing):
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
காரட் - ஒன்று
பச்சைப் பட்டாணி - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - சிறிது
கரம் மசாலா தூள் - சிறிது
ஆலிவ் ஆயில் - இரண்டு தேக்கரண்டி
முட்டை - 1
சீஸ் - அரை கப்


 

காரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து மசித்துக்கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
பாஸ்தாவை மூழ்கும்வரை தண்ணீர் விட்டு உப்பு போட்டு 8 நிமிடம் வேகவைக்கவும். பாஸ்தா வெந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, துருவின காரட், மசித்த கிழங்கு, பச்சை பட்டாணி, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் பாஸ்தா வேக வைத்த நீரை சிறிது சேர்க்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு ஒரு முட்டை, 1/2 சீஸ் போட்டு கிளறவும்.
தயாரித்து வைத்துள்ள stuffingயை ஒவ்வொரு பாஸ்தா ஷெல்லின் உள்ளேயும் வைக்கவும்.
பின்பு பேக்கிங் பாத்திரத்தில் பாஸ்தா சாஸ் ஒன்றரை கப் ஊற்றி வைக்கவும். ஸ்டஃப்பிங் செய்துவைத்துள்ள ஷெல்களை அதில் வரிசையாக அடுக்கவும்.
பிறகு அவற்றின் மீது சீஸ் துவி பத்து நிமிடம் பேக் செய்யவும். இப்பொழுது சூடான இத்தாலியன் பாஸ்தா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மாலினி ரொம்ப அருமைப்பா ரொம்ப கலர் புல்லா இருக்கு..பாஸ்தாவும் ஜம்போ சைசில்தான் இருக்கு மாலினினா யாரு நம்ம மாலி யா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மாலினி எப்படியிருக்கீங்கப்பா ? மகளும் நலமாப்பா? ஆஹா நல்ல கலர்புள்ளா ரெஸிப்பிப்பா! கட்டாயம் ட்ரை பண்ணி பார்கிரென்பா!

naturebeuaty

ஹாய் மர்ழியா, அஞ்சலி
ரொம்ப நன்றிபா ..அஞ்சலி ட்ரை பண்ணுங்க நல்ல இருக்கும் .மகள் நலம் , ரொம்ப சந்தோசம்பா

அம்மாம் மர்ழியா அதே மாலினி தான் :)

எப்படி இருக்கீங்க? பார்த்தவுடன் சாப்பிட தோணுது மாலினி. ரொம்ப கலர் புல்லா இருக்கு. மாலினி இது அவன் இல்லாம செய்ய முடியாதா? ஏன்னா என்கிட்ட அவன் இல்ல வேற எப்படி செய்யலாம் சொல்லுங்களேன். நன்றி மாலினி இப்படி ஒரு சூப்பர் ரெஸிபி கொடுத்ததுக்கு நீங்க சொன்ன பிறகு தான் செய்து பார்க்கனும்.

ஹாய் காயத்ரி ,
ஓவன் இல்லாமலும் செய்யலாம், சாஸ் 1/2 கப் அதிகமாக விட்டு 5 நிமிடம் குறைந்த தணலில் மூடி வைக்கவும் (சீஸ் கரைய)..
நன்றி காயத்ரி

மர்ழியா நீங்க என்னை நினைத்து கேட்டீங்களா? எனக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம். உங்க மெயில் ஐடிய வானதிகிட்ட இருந்து வாங்கிக்கவா?
மாலினி பாஸ்தா பாக்க நல்லா இருக்கு. நீங்க அறுசுவைக்கு புதுசா?

ஆமாம் நீஙக்னுதான் கேட்டேன்..பரவாஇல்லை மாலினி இப்பத்தில் இருந்து நீங்களும் என் பிரண்டுதான் ஓகே..மாலி தாராலமா ஐடி யை வாங்கிக்கங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா, மாலி
என்ன மர்ழியா இப்ப தான் எனக்கு புரியது, ஆனா உங்ககிட்ட நான் நிறைய பதிவுகளில் பேசியிருக்கேன்பா.. நீங்க என்னதான் மாலினு சொல்லரிங்கனு நினைத்தேன் ... :)
மாலி நான் ரொம்பநள இருக்கான்பா ...ஆனா இதுதான் என் முதல் recipe

ஆமாம் நான் பேசி இருக்கேன் வானதியைதான் இப்படி இதில் கொல்லுறென்னு நினைத்தேன் இப்பதான் தெரியுது மாலியையும்னு (இருவரும் மன்னிக்கவும்)
மாலினி நான் பேசி இருப்பது நியாபகம் இருக்கு மாலிதான் மாலினி ந்னு பெயரௌ மாற்றிட்டாங்களோன்னு நினைத்தேன் கேடி இல் இருந்து மாலின்னு மாற்றினாங்க இடையில் அதான் ரிட்டன் மாற்றிட்டாங்கன்னு குழம்பிட்டேன்..பராவாஇல்லை இப்ப சந்தெகம் தீர்ந்தது..ஆமா உங்க பாஸ்தா இந்தியால கிடைக்குமா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு