பதிர்பேணி

தேதி: July 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - ஒரு கப்
அரிசிமாவு - அரை கப்
நெய் - 3/4 கப்
ஆப்பச்சோடா - ஒரு துளி
சர்க்கரை - அரை கப்
எண்ணெய் - பொரித்தெடுக்க
உப்பு - தேவையான அளவு
ஏலக்காய் - 4


 

அரிசிமாவையும் அரை கப் நெய்யும் சேர்த்து கையால் இலகும் வரை கரைக்கவும்.
மைதா மாவுடன் உப்பு, சோடாப்பூ, மீதி நெய் சேர்த்து பிசறி சப்பாத்தி மாவு போல் பிசையவும். மைதாவை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மாவை பெரிய சப்பாத்தியாக இடவும். தின்னாகவும் ஒரே மாதிரியானதாகவும் 4 சப்பாத்தி தேய்த்து கொள்ளவும்.
ஒரு சப்பாத்தி மேல் அரிசிமாவு கலவை தடவி அடுத்து சப்பாத்தி வைத்து அரிசிமாவு கலவையை தடவவும்.
4 சப்பாத்தியையும் ஒன்றன் மேல் ஒன்றாக தடவி, சுருட்டவும். நன்கு சுருட்டியதை 2 இன்ச் நீளத்திற்கு கட் பண்ணிக் கொள்ளவும்.
கட் பண்ணிய பகுதி மேலாக வரும்படி வைத்து தட்டி மைதாவை தொட்டு சற்று கனமாக தேய்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தேய்த்ததை போட்டு மேலே எண்ணெய் தெளித்து வெந்ததும் எடுத்து விடவும்.
எண்ணெய் வேகும் சலசலப்பு அடங்கியிருந்தால் வெந்திருக்கும். வெந்ததை சாய்வாக அடுக்கி வைத்து வடிகட்டியில் எண்ணெயை வடித்து விடவும்.
சர்க்கரையை ஏலக்காயுடன் பொடித்து கொள்ளவும்.
எண்ணெய் முழுவதும் வடிந்தவுடன் சூடாக இருக்கும்போதே இருபுறமும் சர்க்கரையை தூவி ஏர்டைட் கண்டெய்னரில் உடையாமல் அடுக்கிவைத்து 7 லிருந்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.


லேயர் லேயராக இருக்கும். உடையாமல் அடுக்கி வைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்