மீன் குழம்பு |
|
|
அறுசுவையில் 400க்கும் அதிகமான சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலிலா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.
|
தேவையானப் பொருட்கள்
- மீன் - கால் கிலோ
- அரைக்க:
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பெரிய தக்காளி - மூன்று
- தாளிக்க:
- கடுகு - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- வெந்தயம் - கால் தேக்கரண்டி
- வெங்காயம் - ஒன்று
- பூண்டு - 3 பல்
- கறிவேப்பிலை - அரை கைபிடி அளவு
- தேங்காய் பால் - ஒரு சிறிய டம்ளர்
- எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
- புளி - 1 1/2 எலுமிச்சை அளவு
- சிறிய பச்சை மிளகாய் - மூன்று
- கொத்தமல்லி தழை - சிறிது
- மிளகாய் தூள் - இரன்டு தேக்கரண்டி
- தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - இரன்டு தேக்கரண்டி
|
மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
|
 |
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். நறுக்கின ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
|
 |
பூண்டை தோல் உரித்து விட்டு தட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்க தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
|
 |
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு பொரிய விடவும்.
|
 |
அதனுடன் நறுக்கின வெங்காயம், தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
|
 |
வெங்காயம், பூண்டு வதங்கியதும் வெங்காய, தக்காளி விழுதை ஊற்றி தீயை குறைத்து வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
|
 |
அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விட்டு மசாலா வாசனை போகும் வரை வதக்கி விடவும். அதனுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி கிளறி விடவும்.
|
 |
புளி வாசம் அடங்கியதும் மீன் துண்டுகள் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
|
 |
குழம்பு கொதித்து மேலே வரும் போது அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து விடவும்.
|
 |
சுவையான மீன் குழம்பு தயார். இது இஸ்லாமிய இல்லங்களில் விசேஷ நாட்களில் செய்யும் ஈஸியான மீன் குழம்பு.
|
 |
|
|
|
|
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
53 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 29 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -