வேங்கரிசி மாவு (சத்து மாவு)

தேதி: July 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 2 ஆழாக்கு


 

கொதிக்கும் தண்ணீரில் அரிசியை கழுவிப்போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டியில் வடித்து விடவும். அரிசியை ஆறவிட்டு காயப்போடவும்.
கடாயை சூடாக்கி கைப்பிடியளவு அரிசியை போட்டு பொரிந்ததும் தட்டில் கொட்டி ஆறவிடவும். இதேபோல் எல்லாவற்றையும் பொரிக்கவும்.
மிஷினில் கொடுத்து அரைக்கவும். மிக்ஸியிலும் சிறிது சிறிதாக போட்டு அரைக்கலாம்.
இதில் தேவையானதை எடுத்து சீனி போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
நெய் போட்டு பிசறி சாப்பிடலாம். மிக்ஸியில் சீனியை தூளாக்கி மாவில் சேர்த்து அப்படியேவும் சாப்பிடலாம்.


குழந்தைக்கும் மாவில் வெந்நீர் விட்டு பிசைந்து ஊட்டலாம். எங்க செட்டிநாட்டு ஏரியாவில் அரிசியை பொரிக்கடலை கடையில் கொடுத்தால் பொரித்து கொடுப்பார்கள். அது மிகவும் சுவையானதாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் வேங்கரிசி மாவு[சத்துமாவு] மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"