ஸ்பெஷல் இறால் வறுவல்

தேதி: July 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

இறால் - 15
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 5 இலைகள்
எண்ணெய் பொரிக்க - அரை கப்


 

இறாலில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து அரை தேக்கரண்டி தண்ணீர் மட்டும் சேர்த்து கெட்டியாக கலந்து உப்பு பிடிக்க ஊறவிடவும்.
ஒரு மணிநேரம் ஊறியபின் ஒரு வாயகன்ற பானில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இறாலை மசாலாவோடு சேர்த்து ஒன்றுக்கொன்று ஒட்டாமல் ஒரு 8 இறால் வைத்து ஒரு புறம் சிவந்ததும் மறுபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும். மிகவும் சுவையான இறால் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.


காரம் சற்று கூடுதலாக இருந்தால் சுவை. தேவையில்லையென்றால் பச்சைமிளகாய் ஒன்று போட்டால் போதும்.

மேலும் சில குறிப்புகள்