manjal kamalai

enathu pakkathu veetu kulanthaiku(age11/2) manjal kamalai. atharku enna seyavendu endu seekiram theriyapaduthungalen.

யாருக்குமெ மஞ்சல் காமாலைக்கு பத்ல் தெரியதா

anuchakko

எனக்கும் ஜான்டீஸ் பத்தி சரியா தெரியாது ஏன்னா என் உறவில் யாருக்கும் கேள்விப்ப்பட்டதில்லை.ஆனால் சின்ன வயதில் என் தோழிக்கு இருந்தது..அப்ப எனக்கு நியாபகம் இருக்கு எண்ணை பலகாரம்,நாம் வெஜ் காரம் எல்லாம் கொடுக்க மாட்டாங்க.
கரும்பு ஜூஸ் கொடுப்பாங்க,
மஞ்சள் காமாலை கவனிக்கனும்..முழுவதும் மாறியது என்று சொல்லி திரும்ப நாம் பழையபடி கவனிக்காம சாப்பிட கூடாது..லிவெரில் ஜான்டீஸ் பதுகியிருகும் என்பார்கள்.
மருத்துவர்களிடம் இது எந்த வகையான ஜான்டீஸ்,எதனால் வந்தது என்ன விதமான டயட் எடுக்கலாம் என்று கேளுங்கள்..இந்த வகையான நோய்கள் அதுவும் குழந்தைக்கு வந்தால் கட்டாயம் மருத்துவர் சொல்படி தான் கேட்க வேண்டும்

அதிக உடல் உஷ்ணத்தால் மஞ்சள்காமாலை வரும் என சொல்வார்கள். கோழிக்கறி கட்டாயமாக குணமான பிறகு கூட 1வருட காலத்திற்கு சாப்பிடக்கூடாது. கிவாநல்லி கீரையின் சாறு கொடுப்பார்கள். இப்போது அதில் தயாரித்த மாத்திரை, மருந்து கூட மெடிக்கல் சாப்பிலே கிடைக்கிறது.தளிகா சொல்வது போல் எண்ணையில் செய்தது சாப்பிடக்கூடது.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தங்கள் குழந்தை விரைவில் குண்மடைந்து விடுவான் பயப்படாதீங்க. எனக்கு இருந்தது சிறிய வயதில். மருத்துவரிடம் சென்றால் liv-52 தருவார்கள் கீழா நெல்லை அரைத்து பாலில் கலந்து அம்மா தருவார்கள். காலை மாலை இரு வேளையிலும். சென்னை என்றால் அம்சிக்கரை மார்க்கட்டில் கிடைக்கும். ஆனால் இலை பார்த்து வாங்க வேண்டும். சிலதில் தண்டின் மேல் பகுதியில் நெல்லி இருக்கும் அதை தர கூடாது.

இளநீர், சாத்துகுடி ஜுஸ், பச்சை திராட்சை தந்தார்கள். பழங்கள், காய்கறி சூப் (வெறும் காய்கறி தண்ணீரில் அவித்து, மிக குறைவாக உப்பு போட்டு தாருங்கள்.) வெண்ணை நீக்கிய மோர் சாதம், ஆவியில் அவித்த இட்லி, பூட்டு(தேங்காய் இல்லாமல்) இடியாப்பம், ஆப்பம்(தேங்காய் இல்லாமல்) தந்தார்கள் என் அம்மா. எல்லாவட்ரிலும் உப்பே போடவிலை. தொட்டு கொள்வதற்கு பால் சர்க்கரை தான்.

குழந்தைக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருந்துவரை அனுகுங்கள். எனக்கு அப்படி ஆகிவிட்டது.

மேலும் விபரங்களுக்கு இந்த லின்கை பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/6830

enna food sapdurathunala manjal kamalai varum,enna food ideams avoid pannanum

மஞ்சள் காமாலை மிக‌ மோசமான‌ ஒரு தொற்று நோய். தண்ணீர்,காற்று
அந்த‌ நோயாளிகள் பயன்படுத்திய‌ பொருள்கள் எதுவாக‌ இருந்தாலும் அதன்
மூலமாகப் பரவும், சிறு நீர் மஞ்சளாகும். மலம் வெள்ளையாகப் போகும்.
வயிறு கல் போல் இருக்கும். பசிக்காது. இது ஆரம்ப‌ நிலை. கண்கள் லேசான‌
மஞ்சள் நிறமாக‌ இருக்கும். சந்தேகம் தோன்றியவுடனே சிறுநீரில் சிறிது
வெள்ளை சோற்றைப் போட்டால் சோறு மஞ்சள் நிறமானால் காமாலை என்று
திட்டவட்டமாக‌ அறியலாம். நல்ல‌ உணவால் வருவதல்ல‌, வைரசால் அதன் தொற்றால் வருவது. இது சரியானால் குறைந்தது ஒரு ஆண்டாவது அசைவம்
அறவே தவிர்க்க‌ வேண்டும், எண்ணெய் வெண்ணெய் கொழுப்பு அறவே ஆகாது.
இது தன் கூடவே டைபாய்டு சுரத்தினை அழைத்து வரும். அதன் விளைவு
கல்லீரல் செயல் இழந்து போவதோடு இறுதியில் மரணத்தில் கொண்டு விடும்.
கல்லீரல் சுருங்குவதோடு அதை மீண்டும் எந்த‌ முறையாலும் சீர் செய்யவே
முடியாது. எனவே காமாலை என்று அறிந்தவுடனே உணவில் தான் மிகுந்த‌
கவனத்தோடு இருக்கவேண்டும். டைபாய்டுக்குப் பின்னும் சிலருக்கு காமாலை
வருவது உண்டு, இரண்டும் அண்ணன் தம்பி போல‌. நானே அனுபவித்துள்ளேன்.
கீழ்க்காய் நெல்லி, மஞ்சள் கரிசிலாங்கண்ணி இது இரண்டு தான் இதற்கு
மருந்து, (பெருஞ்சீரகம், காய்ந்த‌ திராட்சை இரண்டும் சேர்த்து காய்ச்சிய‌ சூஸ்)
கீழ்க்காய் நெல்லி செடியை கொண்டு வந்து கழுவி விட்டு அரைத்து மோரில்
கலந்து குடிக்கவேண்டும் வைத்தியர் சொல்கிறவரையில்.
மஞ்சள் கரிசிலாங்கண்ணிக் கீரையை சும்மாவே வாயில் போட்டு மென்று
தின்னலாம். கசக்காது, மெல்லும்போது சொரு சொரு என்று இருக்கும்.
நாளடைவில் பழகிவிடும். பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு போல் சாப்பிடலாம்.
உடம்பு நன்றான‌ பிறகு கூடுமான‌ வரையில் மூன்று மாதமாவது மஞ்சள் கரிசிலாங்கண்ணியை தினமும் காரம் புளிப்பு அதிகம் சேர்க்காமல் சாப்பிடவேண்டும். இரத்தத்தை சீர்செய்யும், உணவிற்கு தொட்டுக் கொள்ள‌
உப்பிட்ட‌ நாரத்தங்காயை நன்கு உப்பு போகக் கழுவி விட்டு இரண்டு புளியங்கொட்டை அளவு தான் ஒரு வேளைக்கு உண்ணலாம். மற்ற‌ ஊறுகாய்கள்
வாந்தியை உண்டாக்கும்.
மற்றபடி இட்லி, இடியாப்பம், புட்டு, புழுங்கல் அரிசிக் கஞ்சி, மற்றபடி
சோம்பை வறுத்து அதனோடு காய்ந்த‌ திராட்சை போட்டு கொதிக்க‌ வைத்த‌
சூஸ், காய்கறிகளை வேகவைத்து வடித்து எடுத்த‌ சூப் உப்பு காரம் இல்லாமல்
இவை தான் உணவு, மிளகாய் கூடாது , தக்காளி சேர்க்கும் போது கட்டாயம்
தோலை நீக்கிவிடவேண்டும்.
நோய் நீங்கினதற்கான‌ அறிகுறி நன்கு (அகோரப் பசி எடுக்கும்,) பசிஎடுக்கும்.
வயிறு கல்போல் இருந்தது நீங்கி நன்கு குழைந்து கொடுக்கும். மலம் வெண்மை
நிறம் மாறி சாதார்ண‌ மஞ்சள் நிறத்திற்கு வரும். சிறு நீரையும் சோறு போட்டு
பார்க்கவேண்டும். மஞ்சள் நிறம் ஆகக் கூடாது. வெண்மையாக‌இருக்கவேண்டும்.
நோய் நீங்கின‌ பின்னால் ஓராண்டு வரையில் வெளியே எங்கேயும் எதையும்
உண்ணக் கூடாது, முழு சைவமாக‌ இருத்தல் அவசியம். காலில் காலணி
இல்லாமல் நடத்தல் கூடாது, பிறர் உடையை நாமும், நம் உடையைப் பிறரும்
அணிவதை அறவே தவிர்த்தல் நல்லது.நீண்ட‌ பதிவு ஆகிவிட்டது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்