கோவா ப்ரை

தேதி: July 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோவா (கபேஜ்) - 300 கிராம்
மிளகாய் வற்றல் - 3
நறுக்கின வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை டம்ளர்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் அல்லது கறித் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

கோஸை மெல்லியதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு போட்டு தாளித்து அதில் நறுக்கின வெங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கின கோஸை போட்டு அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்து 2 அல்லது 3 நிமிடம் கழித்து வெந்ததும் திறக்கவும்.
கோஸ் வெந்ததும் மூடியை திறந்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
அதன் பின்னர் 3 அல்லது 4 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும். அடிப்பிடிக்க விடாமல் இடையில் ஒரு முறை கிளறி விடவும்.
சுவையான கோவா ப்ரை தயார். இதை சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
கூட்டாஞ்சோறில் உள்ள சகோதரி நர்மதா அவர்களின் குறிப்பை பார்த்து சில மாற்றங்களுடன் இந்த செய்முறையை <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இங்கே வழங்கியுள்ளார்.

இந்த கோவா ப்ரை செய்யும் போது தீயை குறைவாக வைத்தே செய்ய வேண்டும். இதே முறையில், வாழைப்பூ, வெங்காயத்தண்டு போன்றவற்றையும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஐ அதிரா உங்க குட்டீஸ்களா..ரெண்டும் நல்ல வால் பசங்க மாதிரி தான் இருக்காங்க விளம்பரத்தில் வர்ர மாதிரி.கேபேஜ் குறிப்பை இன்னும் பார்க்கலை நேரா கீழ உள்ள படத்தை தான் பார்த்தேன்

அதிரா பசங்க துறுதுறுப்பாக இருக்காங்க. அம்மா மாதிரியா, அப்பா மாதிரியா? உங்களை பற்றி கற்பனை பண்ணலாம் இல்லையா அதனால் தான் கேட்கிறேன்.

எப்படி அதிரா உங்கள் கோஸ் பச்சை நிறமாக இருக்கு. நான் வாங்கினால் உள்ளே ஒரு வெளிர் மஞ்சளாக இருக்கும். உங்கள் வீட்டு தோட்டத்தில் விளைந்ததா?

அதிரா குட்டீஸ் இருவரும் ஸூப்பர். யார் சாயல் அப்பா, அம்மா மாதிரியா.

எனக்கும் வந்துவிட்டது,
என்ன என்று யோசிக்கிறீங்களா? அதுதான் படம் போடும் துணிவு. தளிகா பார்த்தீங்களா? இப்ப புரியும் நான்படும் பாடு... அப்பப்பா இப்ப விடுமுறை வேறு.

வித்தியா, சாரதா.... படத்தைப் பார்த்து என்னைக் கற்பனை பண்ணி வையுங்க.... பின்னர் என் திருமுகம் காட்டுகிறேன்... அப்போ தெரியும் யார் சாயல் என்று.

வித்தியா என் தோட்டத்தில் விளைந்ததா? ஹ....ஹ....ஹா.... ஒரே சிரிப்பாக இருக்கு, இந்த ஊருக்கு சரியான கஸ்டம், ஒரே குளிர்... நட்டிருக்கிறேன் மெதுவாக வருகிறது. கபேஜ் என்று சொல்கிறபோது நிறைய வகைகள் இருக்கிறதே... முட்டைக்கோவா என்று சொல்வோம் அதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். அது பெரும்பாலும் நான் வாங்குவதில்லை, ஏனெனில் விறைத்ததுபோல் இருக்கும். இது சுவீட் ஹார்ட் என கிடைக்கிறது சரியான பெயர் மறந்துவிட்டேன், அடுத்தமுறை வாங்குகிறபோது சொல்கிறேன், கடலைச் சுருள் மாதிரி நீளமாக இருக்கும் வெளியே பச்சை உள்ளே மஞ்சள் அதில்தான் செய்தேன் அல்லது கோவா இலை எனக் கிடைக்கிறதே பெரிய பெரிய இலையாக அதிலும் செய்வேன். சுருள் கோவா, சிவப்புக் கோவா இப்படி நிறைய வகைகள் இருக்கிறதே. இனிப் போனால் சுப்பமார்கட்டில் பாருங்கள். ஆரம்பத்தில் நானும் இப்படிக் கவனிப்பதில்லை, பின்னர் அக்கா, அண்ணி சொல்லித்தான் தேடிப் பிடித்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஸ்னேகிதிகளே.. நலம்தானே?
அறுசுவையில் உள்நுழைவில் ஏற்பட்ட பிரச்சினையால் என்னால் உங்கள் அனைவரிடமும் அளாவளவ முடியாமல் போய் விட்டது.
நீங்கள் அரட்டையில் பங்கு கொள்வதை எட்டி இருந்து ரசிப்பதுடன் சரி.இன்றுதான் அட்மின் தம்பி சரி செய்துவிட்டார்.
என் மகனுக்குகாய்ச்சல் சரியாகி,பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டான்.அல்ஹம்துலில
்லாஹ்.
டைபாய்டுக்கு டயட் கேட்டதும் டயட் முறைகளையும்,விசாரிப்புகளையும்,
பிரார்த்தனைகளையும் தந்து என்னை நெகிழவைத்த என் அருமை சகோதரிகள் ஜலீலாபானு, வித்யாசரவணன்,கதீஜா,மர்ழியா அனைவருக்கும் எனது அன்பையும் நன்றியையும் சமர்பிக்கின்றேன்.
அன்புடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

இரண்டு குட்டன்களும் 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' என்பது போல் எவ்வளவு சமர்த்தாக, பதவிசாக படுத்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள்.

சும்மா கலாய்ச்சேன். இந்த வாலுங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? கண்ணில் தெரியுது சுட்டித்தனம்.
ஒருத்தன் சொன்னானாம். 'கூரை மேல் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறானே அவன் தான் என் பிள்ளைகளிலேயே சாது' என்றானாம். சாதுப்பிள்ளையே இப்படி என்றால் வால்பிள்ளைகள்?. கற்பனை செய்து பாருங்கள்.
அப்படியே ரெண்டு வாலுக்கும் சுத்திப்போட்டு விடுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அதிரா உங்க கோவா ஃப்ரை பார்க்க நல்ல பச்சை நிறமாக உள்ளது. இந்தியாவில் கிடைக்கும் கபேஜ் வைத்து செய்யலாமா. உங்க பதில் கிடைத்தவுடன் செய்ய
விரும்புகிறேன். உங்க பசங்க இருவரும் சூப்பர்.ஜெயந்தி
மாமி சொன்னது போல் சுத்திப்போட்டு விடுங்கள்.

ஜெயந்திமாமி, மொழி, சாதிகா அக்கா,

ஜெயந்திமாமி... நீங்க சொன்ன பொன்மொழியை நினைத்துச் சிரிக்கிறேன்.... உண்மைதான் கொள்ளிக்கட்டையுடன் இருப்பதுதான் சாதுஎன்றால் மற்றதெல்லாம் எப்படி இருக்கும்....

மொழி,
இதே முறையில் எந்த இலை வகை வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். முக்கியமாக வறைக்கு இலை வெட்டுகிறபோது மிக மெல்லியதாக வெட்டுங்கள். நீண்ட நேரம் மூடி அவிய விட வேண்டாம், ஒரு கொதி வரும் வரை மூடித் திறந்துவிடவும். எது கிடைத்தாலும் வாங்கிச் செய்யுங்கள் நல்ல சுவை கிடைக்கும்.

சாதிகா அக்கா,
உங்கள் மகனுக்கு இப்போ சுகமா? சந்தோசம் ஆனால் சுகமாகிவிட்டதென்று கண்டபடி விட வேண்டாம், கொஞ்சநாட்களுக்கு குளிப்பு, உணவு இவற்றில் கவனமாக இருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கம்பு தோசை எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்கமளியுங்கள் மாமி. உங்களுக்கு தெரியவில்லையெனில் யாரிடமாவது கேட்டு தெரிவிக்கவும்.

valthukkaludan

valthukkaludan

எத்தனை வகை இந்த முட்டை கோஸில், நான் முட்டை கோஸ் தான் வாங்குவேன். இங்கும் லிட்டில் ஹாட்ஸ் கிடைக்கிறது, அது ரோமன் லெட்டியூஸ் என்று இருக்கிறது, அதைத்தான் சொல்லுகிறீர்களா?

வித்தியா,
அதுவல்ல, நீங்கள் சொல்வது ஒருவகை லெற்ரியூஸ். அது சூடு பட்டதும் தண்ணியாகிவிடும். இது கபேஜ் வகைதான். கொஞ்சம் நீளமாக இருக்கும். எனக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை. சுவீட் கார்ட் என்றுதான் ஞாபகம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்