பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

இவ்ளோ நாள் எனக்கு அறுசுவை ஓபன் (எப்படியும் பதில் போட்டுருப்பீங்களே படிக்கணும்னு) ஆகாம தவிச்சி போயிட்டேன்... வெளிய போயும் செக் பண்ண முடியல...

நன்றி ரூபி ...உங்கள் எபிசியாடமி பற்றிய பதிவை இப்பதான் பார்த்தேன்...

ரேனுகா,
உங்க அட்வஸ்க்கு ரொம்ப நன்றி ரேணு.

உங்க அனுபவத்த படிக்கும்போதே நினைச்சேன்.. இதுக்காகவே இந்த ஹாஸ்பிடல்ல இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு.. பின்னாடியே நீங்க அத சொல்லியிருக்கீங்க...

மேனகா உங்க அனுபவத்தையும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிபா... எனக்கு இங்க எல்லாருமே பக்கத்துல இருக்காங்க... என் ஹஸ் டெலிவரி சமயத்தில (நார்மல் டெலிவரின்னா ) பக்கத்துல இருக்கலாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க... உங்க அனுபவம் லாம் படிச்சப்பறம் நிறையவே தைரியம் வந்தாச்சு..

உமா உங்களுக்க்கும் சுகப்பிரசவம் ஆகி நல்லபடியா குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்..

சரி சுகன்யா/தளிகா நானும் அதைத்தான் செய்யப்போறேன்... என்ன இப்போ வந்துட்டா பாப்பா பிறந்தப்பறம் நிறைய லீவ் போட்டுக்கலாம்னு ஒரு ஆசை.. ஆனா வயிறு இப்பவே ரொம்ப பெரிசாயிட்ட மாதிரி இருக்கு.. அதுவுமில்லாம அசைவும் ஜாஸ்தியா இருக்கு.. அதனால இன்னம் 2 நாள்தான் ஆஃபிஸ் வரலாம்னு இருக்கேன்..அப்புறம் லீவ்தான்...

நன்றி தாமரை. புது த்ரெட் ஓபன் பண்ணி உங்க அனுபவத்தையும் எழுதுங்க... நாங்களும் அத Continue பண்றோம் எங்க பிரசவத்துக்கப்பறம்...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

Today i read your delivery experience. I enjoyed more. Your way of writing is very nice.

have a nice day!!!!
LakshmiRaj

have a nice day!!!
LakshmiRaj

மிக்க நன்றி லக்ஷ்மி...உண்மையில் ரொம்ப மகிழ்ந்து விட்டேன்.என்னுடைய எழுத்தை கூட தயங்காமல் வந்து உக்கூவித்தபொழுது சந்தோஷம் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது

இந்த பதிவு கொஞ்சம் இல்லை ரொம்பவே லேட் இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்துக்கனும்னு தோன்றி எழுதுறேன்.

கர்பமானது தெரிந்தவுடன் என் கணவர் ஆஸ்பத்திரி என்று கூட பாராமல் கட்டிபிடித்த நான் நாணி கோண இன்றும் நேற்று நடந்தது போல் உள்ளது. பிறகு என்ன கவனிபோ கவனிப்பு தான். பழங்கள் சாபிடுவதேன்றால் எனக்கு வேபங்காய கசக்கும். என் கணவரும் நானும் ஒரே ஆபிசில் தான் வேலை பார்த்தோம் ஆனால் வேறு வேறு பிரிவு. தினமும் ஒரு டாபாவில் பழங்களை வெட்டி போட்டு கொடுத்துவிடுவார். பிரேக் நேரத்தில் வந்து செக் பண்ணுவார் அதாவது நான் சாபிடுகிறேனா அல்லது தோழிகளுக்கு கொடுகிறேனா என்று....காரில் தான் ஆபிஸ் செல்லுவோம்.....வேகம்னா அப்படி ஒரு ரேஸ் ட்ரிவிங்.....இரண்டாவது ஸ்கானில் குழந்தை கை கால் அசைப்பதை பார்த்த பின்பு தான் அவர் கொஞ்சம் மெதுவாக ஓட்ட கற்றுக்கொண்டார். எங்களுக்கு குழந்தை உண்டான நாளில்ருந்து அது பெண் கொழந்தை தான் என்று தோன்றியது.
இப்படியாக ஆபிபிசும் வீடுமாக என் நேரம் போக.....என் கணவர் தீடீர்ன்று ஒரு குண்டை போட்டார்....எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்துள்ளது அன்று இன்னும் இரண்டு மூன்று மாதத்துக்குள் போக வேண்டும் என்றும் சொன்னார். எனக்கு தலையே சுற்றியது. அவருடன் போகவா இல்லை எங்கயே இருக்கவா என்று ஒரே கொழப்பம். எனக்கு அவரும் என்னுடன் பிரசவ நேரத்தில் கூட இருக்கவேண்டும் என்று ஒரே ஆசை. பிறகு பல போராட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் சமாதானதிருக்கு பிறகு அவர் மட்டும் போகட்டும் நான் இந்தியாவிலே குழந்தை பெற முடிவெடுத்தேன். (எடுக்க வைத்தார்கள்).மேடேர்நிட்டி லீவ் போட்டு அவசர அவசரமாக வளயகாப்பு நடத்தி என்னை என் தாய் வீட்டில் விட்டார்கள். அவரும் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. அதற்க்கு முன் என்னுடன் ஒரு வாரம் தங்கிஇருந்தார். ஏர்போர்டில் ஒப்பாரி மட்டும் தான் வைக்கவில்லை.
தினம் சாட்டிங் தான். நள்ளிரவு இரண்டு மூன்று மணி வரை....காலை எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன்பு தான் கண்முழிப்பேன். பல் கூட தேய்க்காமல் சாட் செய்வேன். அப்பா அம்மா ரொம்பவே கொபித்துகொல்வார்கள். டாக்டர் என் குழந்தை ப்ரீச் பொசிஷனில் இருக்கறது நீங்கள் கட்டாயம் யோகா பண்ண வேண்டும் என்றார். நானும் நாள் தவறாமல் யோகவிருக்கு சென்றேன். அங்கு வரும் கர்பிணி பெண்களுடன் அரட்டை அடித்து கொண்டே நேரம் போகும். தினமும் 45 நிமிடம் மொட்டை மாடியில் நடை பயிற்சி.
இங்கு ஆஸ்பத்ரியில் "Parent craft class" என்று ஒன்று நடத்தினார்கள் அதில் கர்பிணி பெண்கள் சாப்பிட கூடிய உணவு, குழந்தையின் வளர்ச்சி, எப்படி கரு தரிகிறோம், எவாறு குழந்தை பிறகும் என்று சொன்னார்கள். ஒன்று இரண்டு குழந்தை பிறக்கும் வீடியோ கூட காண்பித்தார்கள். எவ்வுளவு தான் பிரசவம், வலி என்று அதை பற்றி நன்றாக தெரிந்தாலும் முதல் பிரசவம் என்றால் எல்லோரும் திக்கு முக்காட தான் செய்வார்கள். அப்படி தான் நானும் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தேன்.
குறிபிட்ட டெலிவரி நாள் முடிந்த நிலையில் எனக்கு வலி வரவில்லை....டாக்டர் ஒரு வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார்....இந்நிலையில் ஒரு நாள் காலையில் கொஞ்சமாய் இரத்த போக்கு உடனே கிளம்பு ஆஸ்பத்ரிக்கு அங்கு பொய் நான் டாக்டரிடம் கூறினேன் நான் நினைக்கிறன் நான் லபோரில் இருக்கிறேன் என்று...என்னனு கொஞ்சம் பாருங்களேன் என்றேன் (கொஞ்சம் ஓவர்) .....அவரும் சரி வா என்று என்னை கூடி சென்று "external" பார்த்து விட்டு செர்விக்ஸ் இன்னும் ஓபன் ஆகவில்லை என்றார் இருந்தாலும் என்னை படுக்க வைத்து ஏதோ மானிடர் பண்ணி கிராப் போட்டு ஒரு மணிநேரத்திற்கு பிறகு போக சொன்னார்கள். போகும் முன் டாக்டர் சொன்னார் நீ நடந்து வந்த அழகுலே தெரியும் நீ லபோரில் இல்லை என்று மீண்டும் வலி வந்தால் ஒரு மாத்தறை பெயர் சொல்லி (அது பையின் கில்லெர்) போட்டுக்கோ அப்பாவும் வலி சரியாக வில்லை என்றால் எங்கே வா என்றார்.

ஒருவழியாக வீட்டுக்கு வந்தேன். அன்று இரவே வலி

வந்தது தாங்கிகொண்டேன். பிறகு என் அப்பாவை அந்த மாத்திரையை வாங்கி வர சொன்னேன். மாத்திரை போட்ட பிறகும் வலி சரியாகவில்லை. அம்மா சரி வா ஆஸ்பத்திரி போகலாம் என்றார்கள் நான் வர மாட்டேன் என்னை காலையில் திட்டி விட்டார்கள் என்னால் எப்பொழுது முடியாதோ அப்போ போலாம் என்றேன். இரவு முழுதும் வலி இருந்து கொண்டே இருந்தது. பிராணயாம பண்ணி கொண்டே இருந்தேன். அம்மா என் இடுப்புக்கு ஒத்தடம் அப்போஅப்போ கொடுத்தார். காலை ஆறு மணி அளவில் சொன்னேன் சரி எதற்கு மேல் பொறுக்க முடியாது போகலாம் என்றேன். அம்மா என்னை ஸ்டூல் பாஸ் பண்ணிட்டு வர சொன்னார். அம்மா ஆஸ்பத்ரிக்கு கிளம்பும் போது சொன்னார்கள் வலி என்று அழாதே, கடவுளை பிரார்த்தனை பண்ணு என்றார். நீ அம்மா அம்மா என்று சொன்னால் உன் குழந்தையும் அம்மா அம்மா என்று உள்ளே இருந்து வர மறுக்கும். ஆகையால் கடவுளை மட்டும் கும்பிடு என்றார்.

சரி என்று எல்லாம் முடிந்து எழறரை வாக்கில் லபோர் வார்டில் அனுமதிகபட்டேன். உள்ளே கர்பகரக்ஷாம்பிகை படம்...கண்களில் ஒத்திகொண்டேன். அப்போவே ஆறு செண்டிமேடேர் ஓபன் ஆகி இருந்தது. டாக்டர் வந்தார் அவரிடன் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் என்றேன் (இப்போ தான் தெரிகிறது எவ்வுளவு அபத்தமான கேள்வி) அவரும் இன்னும் கொஞ்ச நேரம் என்றார். இரவு தூங்கதனால் தூக்கம் சொக்கியது...கன்னசர்ந்த போது நர்ஸ் கிண்டல் பண்ணினார். வலி தாங்கிமுடியவில்லை என்ற போது "squatting position" ட்ரை பண்ண சொன்னார்கள். அது அதை விட கொடுமையை இருந்தது. திரும்பவும் படுத்து கொண்டேன். பிறகு புஷ் புஷ் என்றார்கள் நானும் புஷ் பண்ணினேன். குழந்தையின் தலை தெரிகிறது இப்போது தொடர்ந்து புஷ் பண்ண வேண்டும் என்றார்கள். என்னால் முடியவில்லை ஏனென்றால் லபோர் வார்டில் வாயடித்து என் சத்தெல்லாம் பொய் விட்டது.....டாக்டரிடம் சொன்னேன் என்னால் இனிமேல் முடியாது போர்செப்ஸ் போட்டு கொழந்தையை வெளியே எடுங்கள் என்றேன்....அவரும் நீ நல்ல தான் செய்கிறாய் எதற்கு அதெல்லாம்....உன் குழந்தையை தொட்டு பாரு என்றார்.....ஒரு விரலால் தலையை தொட்டேன்....ஆசை பற்றி கொண்டது....அடுத்த தடவை புஷ் சொன்னபோது பல்லை கடித்து கொண்டு ஒரே மூச்சாக புஷ் செய்தேன்......வீல் என்று ஒரு அலறல்....கண்களில் நீர் தானாக வழிந்தது.

குழந்தை பிங்காக இருந்தது. நினைத்து போல் பெண் குழந்தை. பெண் குழந்தை பெயர் மட்டும் தான் முனதாகவே செலக்ட் பண்ணி வைத்திருந்தோம். அவளை துடைக்கும் போது அவள் பெயர் சொல்லி கூப்பிட்டேன்....கண்களை முழித்து திரும்பி திரும்பி பார்த்தாள். சரி அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்று மனசுக்குள் பூரிப்பு. பெரிய டாக்டர் வந்தார் அவருடன் ஒரே அரட்டை அடித்தேன் (என்னால் சும்மா இருக்கவே முடியாது......கொஞ்சம் நேரம் சும்மா இருந்தால் வாயில் ஓட்டடடை பிடுத்து விடும் என்று தோன தொணத்து கொண்டே இருப்பேன்...பாவம் என்னவர்). பிறகு என் கணவரிடம் போனில் அரட்டை. ரூமில் கொண்டு விட்ட கொஞ்ச நேரத்தில் எழுந்து நடமாட ஆரம்பித்தேன். அம்மா சொன்னார்கள் உன்னால் முடிந்தாலும் படுத்தே இரு கண் பட்டுவிடும் என்று நாமெல்லாம் எங்கே நாகரீகம் என்ற பேச்சில் பெரியவர்கள் எது மாதிரி ஏதாவது சொன்னால் கேட்பதே இல்லையே......குழந்தை வந்தது முதல் தூங்கிட்டே இருந்தாள். ஆகையால் பால் கொடுக்கவே இல்லை. (இந்த தப்பை நீங்கள் பண்ணாதீர்கள்......குழந்தை பிறந்ததும் அவர்களை நம் வயற்று பகுதியில் போடுவார்களாம் அவர்களாகவே ஏறி மார்புக்கு செல்வார்கள்.....இது இயற்கை. அல்லது குழந்தை பிறந்த ஒரு மணி நேரதிற்குல்லாவது அவர்களுக்கு கட்டாயம் பால் ஊட்டவேண்டும்). பிறகு எனக்கு பால் சொரப்பு கம்மியாக இருந்ததால் ஆயுர்வேதா மாத்திரை கொடுத்தார்கள்.....ஒரு வாரத்தில் நன்றாக பால் சோர்ந்தது...ஆனால் என் குழந்தைக்கு தான் குடிக்க தெரியலை. அவளின் ஈர் மிகவும் கூர்மையாக இருந்தது. அதனால் நன்றாக கடித்தாள். ஒரு சில நேரம் ரத்தம் கூட வரும். குழந்தை பிறந்து பத்தவாது நாள் எனக்கு பால் கட்டி கொண்டது....எங்களால் எடுக்க முடியலை.....ஆஸ்பத்ரியில் நர்ஸ் தான் பல கஷ்டங்களுக்கு பிறகு எடுத்துவிட்டாள். அப்பாட இனி ஒன்றும் இல்லை என்று வீடிற்கு வந்தோம். ஓரிரு வாரத்திற்கு பிறகு வலது மார்பில் ஒரே வலி என்னால் பால் கொடுக்கவே முடியவில்லை. குழந்தை வாய் வைத்தாலே அலறுவேன். பிறகு நானே மார்பகத்தை சோதித்து பார்த்தேன்...பார்த்த ஒரு ஆப்பிள் சைசில் உள்ளே கட்டி மாதிரி இருந்தது. அன்றே டாக்டரிடம் சென்றோம். அவர்கள் பால் கட்டி உள்ளது என்று சொன்னார்கள். என் அம்மா இல்லை அங்கு ஏதோ கட்டி போல் உள்ளது என்றார்கள். டாக்டரும் பரிசோதித்துவிட்டு இது "mastitis" போல உள்ளது என்று எனக்கு "antibiotics" தந்தார்கள். வீடிற்கு வந்து ஒரே அழுகை தான். நெட்டில் படித்தேன் எதற்கு முதலில் மாதிரி கொடுப்பார்களாம் சரி ஆகாவிட்டால் தான் "I & D" பண்ணுவார்களாம். ஒரு வாரம் பார்த்தேன் சரி ஆகவில்லை. டாக்டரிடம் நானே ச்நேட்று எனக்கு "I &D" பன்னுகோ என்றேன். ஒருவழியாக அதுவும் முடிந்தது. டாக்டர் சொன்னார் இனி சீழ் கட்டி கொள்ளாமல் பார்த்துகோங்க. எது உங்கள் குழந்தை வாயிலிருக்கும் பாக்டீரியா உங்கள் மார்புக்குள் சென்று உள்ளிருக்கும் பாலை சீழாக மாற்றி விட்டது என்றார். காயம் ஆறும் வரை நீங்கள் பாலை எடுத்து விட்டு கொண்டே இருக்க வேண்டும் என்றார். நான் என் சாப்பட்டு அளவை குறைத்தேன்......அதிகம் பால் சொறந்தால் எடுக்க கஷ்டமாக இருக்கும் என்று.....பிறகு காயம் சரி ஆனது........ஆனால் உணவின் அளவை குறைத்ததால் பால் சுரப்பு ரொம்பவே கம்மி ஆனது. பிறகு பால் சுரக்க அதை எதை தின்னு நன்றாக கொழுத்து போனேன். அதை பற்றி கவலை இல்லை. எனக்கு என் குழந்தை தான் முக்கியம். அப்படி மாட்டு தீனி தினதால் என் குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேலும் பால் கொடுத்தேன்.

நாம் எந்த அளவுக்கு கற்பத்திற்கு தயார் ஆகிரோமோ அதே அளவுக்கு "breastfeeding" பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும். பால் தரும்போது நிப்பிளில் வலி அல்லது புன்னு மாதிரி இருந்தால் உடனே "nipple cream" தட்வுங்கோ. அதுவும் இல்லையா இருக்கவே இருக்கிறது நம்ப தேங்காய் எண்ணெய். ரொம்ப கடிகக்கிர்களா......."nipple shield" உஸ் பண்ணுங்கோ.

அறுசுவையில் நான் எழுது நீளமான பதிவு இது தான். இப்பொழுது இரண்டாவது இந்நிங்க்ச்க்கு தயார் ஆகிவிட்டேன். அதை பற்றி புது பதிவை போடுகிறேன்.

வர்டா......

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் தோழிகளே,
நான் இயற்கையிலேயே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். T V யில் படம் பார்க்கும் போது யாரவது injection கையில் எடுத்தாலே கண்ணை மூடி கொள்வேன்.
எனக்கு இங்கு தோழிகள் ஒவ்வொருவரின் பிரசவ அனுபவங்களை படிக்கும் போது எனக்குள் தோன்றும் பயத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.
எப்படியாவது இன்னும் 6 மாதங்களுக்குள் மனதளவில் பிரசவத்திற்கு என்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொருவரின் அனுபங்களும் உண்மையில் கண்களில் நீரை வரவழைக்கிறது.
நன்றி தோழிகளே,
மகாசங்கர்

ஹாய் எல்லோருடைய அனுபவங்களையும் படிச்சேன். மனசுக்கு தைரியமா இருக்கு.
எனக்கு இன்னையோட 8 மாதம் முடிகிறது. நவம்பர் 21 நான் தலைக்கு குளிச்ச நாள். அடுத்த மாதம் ஆகஸ்டு 27 எனக்கு டியு டேட் கொடுத்து இருக்காங்க. எனக்கு போன வாரம் ஞாயிற்றுக்கிழமையில இருந்து வயிறு இறங்கின மாதிரி இருக்கு. அடிவயிறுக்கு மேல வெயிட்டா இருக்க மாதிரியே இருக்கு. படுக்கும் போதும் எழும்பும் போதும் கீழே வலிக்குது. சில நேரம் முச்சு திணரலா இருக்கு.

வீட்டுல சமையல் செய்ய சிரமமா இருக்கு. நோன்பு நேரமா இருக்கறதால எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை. நான் பிரசவத்துக்கு எப்படி தயாரா இருக்கனும். என்ன சாப்பிடனும், எப்படி நடந்துக்கனும், நெட்ல தேடி குழந்தைக்கும் எனக்கும் என்னென்ன வாங்கி வைக்கனும்னு ஒரு லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன். இந்த வாரத்தில வாங்கிடுவேன். மேற்கொண்டு நான் ஏதாவது வாங்கனுமா. உங்க அனுபவங்களை பார்த்து ஒரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மேலும் நான் என்ன பண்ணனும், நடந்துக்கனும்னு சொன்னிங்கன்னா எனக்கு உதவியா இருக்கும்.....

Love is Life Beautiful

வணக்கம் தோழிகளே ! இங்கு வந்து தங்களின் பிரசவம் எனும் பொன்னான நேரத்தின் அனுபவங்களை கூறுங்கள் .என்னை போன்று பிரசவத்தை ஏதிர் நோக்க உள்ள தோழிகளுக்கு உதவியாகவும் ,தைரியமாகவும் இருக்கம்.
நீங்கள் செய்த தவறுகள் மற்றும் சரியானவை இரண்டையும் கூறுங்கள்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்