பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஜெயந்தி ஆன்டி,உங்களுடன் இன்றுதான் பேசுகிறேன். என் வயதில் உங்களுக்கு பையன் இருக்கிறாரா?என் அம்மா உம் என்னை பிறந்ததும் ரோஜா பூ போல் இருந்தாய் என்று சொல்லுவாங்க.கேட்கவே சந்தோசமாக இருக்கும்.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

I really enjoyed reading your experience. I love the way you write. Excellent. Take care.

ஆகா...

எத்தனைபேர் மிக அருமையாக தம் அனுபவங்களைப் பகிந்துள்ளார்கள். திவ்யா, அழகா ரசித்து ரசித்து பதில் எழுதுறீங்க, உங்கள் குட்டி வெளியே வந்ததும் எம்முடன் அனுபவத்தைப் பகிந்து கொள்ளுங்கள்.

ஜீவா, நாங்கள் கேட்டதால்தான் எனக்கு சீசர் செய்தார்கள் இல்லையெனில் நோமலாகவே பிறந்திருக்கும். டாக்டர்கள் வற்புறுத்தவில்லை.

ஆனால் யாரும் பயப்பட வேண்டாம், சிலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன், குத்தத் தொடங்கி நான்கு மணி நேரத்தில் குழந்தை கிடைத்துவிட்டது, காரால் இறங்கியதும் தான் கட்டிலில் படுத்ததும் பெற்றுக்கொண்டேன் இப்படி நிறைய இருக்கிறது. எனவே ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்தும் பிரசவ வலிகள் மாறுபடும். எனவே முதல் பிரசவத்திற்காகக் காத்திருப்பவர்கள்... அதுவும் ஒரு சுகமான வலிதான் தைரியமாக , சந்தோசமாக எதிர்கொள்ளுங்கள்.

தளிகா, சொல்ல மறந்துவிட்டேன், என்ன கை, கால் எல்லாம் எண்ணிப்பார்த்தீங்களா? எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கு.

சாரதா... எவ்வளவு தைரியமாக எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்கிறீங்கள்.

ஜெயந்திமாமி, உங்களைப்போல்தான் இங்கும் பெண்கள் வேலைக்குப் போகிறவர்கள் கடைசி நேரம் வரை காரோடிப் போகிறார்கள் வேலைக்கு, லீவுப்பிரச்சனைதான் எல்லாவற்றிற்கும் காரணம். ஆனால் அது உடம்பிற்கு நல்லதுதானே. ஏனையோரும் எழுதுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹஹஹா ஆமா அதிரா..என் கனவர் ப்ரெக்னன்டா இருக்கப்ப அப்பப்ப சொல்வார் அய்யோ பிள்ளை கறுப்போ காக்கையோ கை காலில் 10 விரல் இருக்கனும்.எல்லா அவையங்களும் நல்லா இருக்கனும்னு..அவர் சொல்ல சொல்லவே எனக்கு மனசுக்குள் பயம் அதிகரித்து விட்டது அதுக்கு தகுந்தா மாதிரி கடைசி இரண்டு முறை ஸ்கேன் பன்னினார்கள் முதுகில் என்னவோ காணவில்லை என்று..அது இன்னும் பயம் அதிகமாகிவிட்டது அதனால் முதலில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் பன்னினேன்.
ஆமா அதிரா எனக்கு சந்தேகம் உங்களவர் டாக்டர் தானே டாக்டரே சிசேரியனை விரும்பி கேட்டுக் கொன்டார் என்று கேட்டபொழுது மிகுந்த ஆச்சரியம்..எதுவாவது காரணம் இருக்கனுமே..மருத்துவ ரீதியாக இருந்தால் அதனை யோசிக்கலாமே என்று தான் கேட்கிறேன்.

ஹாய் திவ்யா, எப்படி இருக்கீங்க? நீங்க கேட்ட பிரசவ அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் இப்படி முன்னாடியே கேட்டு வெச்சுக்கறது ரொம்ப நல்லது. உங்களுக்கு நல்ல தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்கும். நானும் இப்படி எல்லார்க்கிட்டயும் ஓவ்வொரு ஸ்டெப்பா சொல்லுங்கன்னு கேட்டுட்டே இருந்தேன். நான் முதன் முதலில் பிரெக்னன்சி டெஸ்ட் வீட்டில் எடுத்துட்டு டாக்டர்கிட்ட செக்கப் பண்ண போனேன். அப்ப அங்கே இருந்த ஸ்டாஃப்ஸ் கிட்ட இங்கே ரூமெல்லாம் சுத்தமா இருக்குமா. நான் பாக்கணும்னு சொன்னேன். அதுக்கு அவங்க நீங்க ரூம் நம்பர் 206 ல தான் இருப்பீங்க. அதைமட்டும் காட்டறோம்னு சொன்னாங்க. அது எப்படி உங்களுக்கு தெரியும். எனக்கு இப்பதான் 45 டேஸே ஆகுது. எந்த ரூம்னு எப்படி தெரியும்னு கேட்டேன். அதுக்கு ஒரு லேடி, அதுதானே ஆபரேஷன் தியேட்டருக்கு பக்கத்து ரூம். அதனால உங்கள அங்கேதான் ஆபரேஷன் முடிஞ்சதும் கொண்டு போவாங்கன்னு சொன்னாங்க. அந்த லேடி சொல்லிட்டு இருக்கும்போதே பக்கத்தில் இருந்த லேடி கண்ணை காண்பிச்சு சொல்லாதேன்ற மாதிரி தலையை அசைச்சுது. எனக்கு ஒரே ஷாக். இத்தனைக்கும் டாக்டர் என் பெரியம்மாவின் கிளாஸ்மேட். பேமிலி பிரெண்ட் வேற. ஆனால் என் பெரியம்மா பெண்ணுக்கு இதே மாதிரி சிசேரியன் தான்னு முன்பே சொல்லி கடைசியில் சிசேரியன் தான் ஆச்சு. இதே என்னடா இது இப்படி சொல்றாங்கன்னு நினைச்சு குழப்பமா ஆயிடுச்சு. டாக்டர் கிட்ட என்னலாம் செய்யணும்னு கேட்டதுக்கு அவங்க என்னை பெட்டிலேயே இரு, எந்த வேலையும் செய்யாத, வீக்கா இருக்க, எக்ஸர்சைஸ் செய்யவே செய்யாதன்னு சொல்லிட்டாங்க. ஆரம்பித்திலிருந்தே ஒரே டாக்டர்கிட்ட காண்பிச்சதால வேற டாக்டர்கிட்டயும் போகல.

வீட்டுக்கு வந்ததும் ஒரே குழப்பம். ஆனாலும் சிசேரியன் இருக்கவே கூடாதுன்னு மட்டும் நினைச்சுட்டே இருந்தேன். சின்ன சின்னதா வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படியே 4 மாதத்திலிருந்து தினமும் பெல்விக் ப்ளோர் எக்சர்சைஸ் மட்டும் மெதுவா செய்ய ஆரம்பிச்சேன். வேற எக்சர்சைஸ் செய்யல. 8 மாதத்திலிருந்து ஸ்க்வாட்டிங் பொசிஷன் செய்தேன்.மற்ற நேரமெல்லாம் எது உண்மையான வலி, அந்த டைமிங்கை எப்படி சரியா தெரிஞ்சுக்கறது, எப்படி மூச்சு விடணும், எப்ப புஷ் பண்ணனும்னு தொடர்ந்து படிச்சு ஞாபகம் வெச்சுட்டு அதை பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன். 8 மாதம் வரை மாதம் ஒரு இன்சக்ஷன்னு ஆயில் இஞ்சக்ஷன் போட்டுட்டு இருந்தேன். அப்பதான் பேபிக்கு நல்லது, ஸ்ட்ராங்காக இருக்கும்னு சொன்னாங்க. அதை ஒரு வழியா போட்டு முடிச்சு 9 வது மாதம் வளைகாப்பையும் முடிச்சுட்டு, டாக்டர்கிட்ட என் கணவரை இப்ப நான் பார்த்தே ஆகணும், ஒரு வாரத்தில் திரும்பி வந்துடறேன்னு சொல்லி, கெஞ்சி ஒரு லெட்டரும் வாங்கிட்டு, டெலிவரி டேட்டுக்கு 4 வாரம் முன்னாடி பிளைட் பிடிச்சு, வயிரை துப்பட்டாவினால் முடிஞ்ச அளவு மறைச்சுட்டு மலேஷியா போயிட்டேன். அங்கேயே டெலிவரின்னு முடிவும் பண்ணேன். அதுக்கு முக்கிய காரணம் சிசேரியன் பயம், ஹாஸ்பிட்டல் சுத்தம் அப்புறம் எப்படி இருந்தாலும் என் கணவர் டெலிவரி பார்த்தால் நார்மல் டெலிவரியா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

எனக்கு ஜூலை 15 டெலிவரி டேட். காலண்டர் படி. ஆனால் ப்ரைம் (முதல்) பேபி பொதுவாக நாள் கழித்தே ( 5 முதல் 10 நாள் வரை) பிறக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். டெலிவரி வரை தினமும் வாக்கிங் தான். வேறு ஒரு எக்சர்சைஸும் செய்யல. ஆனால் இரவு சூடான தண்ணீரில் குளித்து விட்டு தூங்குவேன். எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரு வாரம் முன்னாடிதான் விசா கிடைத்து வந்தார்கள். வீட்டு சமையல் வேலை தவிர மற்ற வேலைகள் எதுவும் செய்யவில்லை. குழந்தை உண்டான மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் டாக்டர் செக்கப்புக்கு செல்லும்போது டாக்டரிடம் என்ன குழந்தை என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். அவரும் இந்த முறையும் பார்க்க முடியல, குழந்தை சுருண்டு படுத்து தொடையால் மறைச்சுட்டு இருக்குன்னு ஒவ்வொரு முறையும் சொல்வார். உடனே எல்லாரும் நிச்சயம் பெண் குழந்தைதான் என்று சொன்னார்கள். மலேஷியாவிலும் எத்தனையோ முறை நாங்கள் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு ஒரு டாக்டரிடம் ஸ்கேன் செய்தும் முடியவில்லை. அதனால் பெண் குழந்தைதான் என்று நினைத்து நானும் பிங்க் டவல் மற்றும் ஒரு செட் டிரஸ் வாங்கினேன். எங்கள் வீடுகளில் குழந்தை பிறக்கும்வரை குழந்தைக்கு எதுவும் வாங்கும் பழக்கம் இல்லை. ஆனால் மற்ற நாடுகளில் நாம் ஒரு பேபி செட் வாங்குவது அவசியம். எனவே சிறிய சைஸ் பேபி நாப்கின் பேக், லோஷன்,லிக்விட் சோப், பவுடர் செட் ஒன்று வாங்கி வைத்தேன். ஒரு பேகில் எனக்குத் தேவையான நைட்டி மற்றும் டிரஸ், சில பெரிய காட்டன் துப்பட்டாக்கள், நர்சிங் பேட்ஸ், டவல், குழந்தையின் கிட், பிரஸ்ட் பம்ப், ஒரு பீடிங் பாட்டில், பிளாஸ்க், ஒரு டிஷ்யூ பேக், டெலிவரி முடிந்து உபயோகிக்க சானிடரி நாப்கின் ( கடைகளில் மதர் சைஸ் என்று கேட்டால் கிடைக்கும். அதிக Flow விற்கு இதுவே நல்லது), கொஞ்சம் பெரிய கைக்குட்டை அளவில் இருக்கும் காட்டன் துணிகள் 15 போல வாங்கி இரண்டு முறை துவைத்து வைத்துக் கொண்டேன். குழந்தை பிறந்தவுடன் அதன் வாய் துடைக்க மற்றும் அவசரத்திற்கு துடைக்க என்று இந்த துணிகள் உதவும். புதிதாக வாங்கினால் ஈரத்தை உறிஞ்சாது. எனவே முன்பே 2 முறை துவைத்துக் கொள்வது நலம். குழந்தைக்கு வாங்கும் டிரஸ், துண்களையும் ஒரு முறை துவைத்து விடுவது நல்லது. பிறந்த குழந்தைகளுக்கு Wet Tissue சில சமயம் ஒத்துக்கொள்ளாது. என் குழந்தைக்கு வெட் டிஷ்யூ, நான் வாங்கிவைத்த Pampers இரண்டுமே அலர்ஜி ஏற்படுத்தி விட்டது. பிறகுதான் Huggies மாற்றினேன். எனவே முதலில் சிறிய அளவில் வாங்கி உபயோகித்து அலர்ஜி ஏற்படுத்தாவிட்டால் பிறகு பெரிய அளவுகளில் வாங்கிக் கொள்ளலாம்.

ஜூலை 15ந் தேதி ஆகியும் ஒரு வலியும் வரவில்லை. 17 ந்தேதி போல் மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்தபோது ஆண் குழந்தை என்று தெரிந்தது. குழந்தை மிகவும் உயரமான குழந்தை. ரொம்ப கஷ்டப்பட்டு தொடையை, காலைக் குறுக்கிட்டு உள்ளே இருக்குன்னாங்க. சிசேரியன் இருக்க நிறைய சான்ஸ் இருக்கிறது என்று இன்னொரு டாக்டர் சொன்னார். 20 ந்தேதி ஆகியும் வலி வரவில்லை. வலி வருகிறதா என்று இன்னும் ஒரு நாள் பார்த்துவிட்டு இண்ட்யூஸ் செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்கள். அப்போது என் கசினுடன் போனில் பேசினேன். அவள் சொன்னாள்,"அக்கா, வலி வந்து அட்மிட் ஆகும் நேரத்தில் இங்கே நம்ம ஊர் மாதிரி எனிமா கொடுக்க மாட்டார்கள். அதனால் முடிந்தவரை லிக்விட் அல்லது ஆகாரம் குறைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நிறைய லேடீஸ் புஷ் பண்ணுங்க என்று டாக்டர் சொல்லும்போது ஆக்சிடெண்ட் செய்து விடுவோம் என்று வெட்கப்பட்டுக்கொண்டு செய்ய மாட்டார்கள். நானும் அப்படியே வெட்கப்பட்டுட்டு டாக்டர்கிட்ட நல்லா திட்டு வாங்கினேன்னு சொன்னாள். அம்மாவிடன் கேட்டதுக்கு இதெல்லாம் உனக்கு தெரியும்னு நினைச்சேன். அவள் சொன்னது சரிதான். அதே போல என்னதான் புஷ் செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தாலும்( வலி அதிகமாக இருக்கும்போது அப்படி தோன்றும்) டாக்டர் சொல்லும்போதுதான் செய்ய வேண்டும். அவர் நிறுத்துன்னு சொன்னா நிறுத்திடணும். மீண்டும் சொல்லும்போது செய்யணும்னு சொன்னாங்க. நானும் ஞாபகம் வெச்சுக்கிட்டேன்.

அந்த வாரமே என் கணவரிடம் நான் ஒரு டெலிவரியை நேரில் பார்த்தே ஆக வேண்டும் ரொம்ப நச்சரித்து, அவரும் ஒரு நாள் லேபர் வார்டுக்கு கூட்டிட்டுப் போனார். ஒரு 20 வயசுப் பொண்ணு மாதிரி ஒருத்தி ரொம்ப கூலா படுத்துட்டு இருந்தாள். நானும் என்னடா இவ அழவே மாட்டேங்கறாளேன்னு பார்த்துட்டே இருக்கேன். நர்ஸ்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பேபி பொறந்துடும்னு சொல்லிட்டு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. பத்தாததுக்கு என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணாள். நேரம் ஆக ஆக எனக்கு பயமா ஆயிடுச்சு. நான் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டேன். ஏன் இவ அழவே இல்லைன்னு கேட்டா இது அவளுக்கு 9 வது குழந்தை. அதான் அழலன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் நான் அங்கே நிக்கவே இல்லை. வீட்டுக்கு வந்துட்டேன். இன்னைக்கு அவளை நினைச்சாலும் எனக்கு சிரிப்பா வரும்.

22 ந்தேதி மதியம் இண்ட்யூஸ் செய்து விட்டார்கள். அப்போதிருந்து எதுவும் சாப்பிடவில்லை. தண்ணீர் மட்டும் அவ்வப்போது சிப் செய்துக் கொண்டேன். அதுவும் ரொம்பவும் கொஞ்சமாக அரை வாய் அளவுதான் தந்தார்கள். 23 ந்தேதி காலை 3.30 மணி வரை பார்த்துவிட்டு , அதுவரைக்கும் சரியான டைலேஷன் இல்லாவிட்டால் சிசேரியன் எடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். நர்ஸ் எனது கால்விரல்களில் இருந்த நெயில் பாலீஷை ரிமூவ் பண்ண ஆரம்பித்தார்கள். சிசேரியனுக்கு கொண்டு செல்வதாக இருந்தால் அனஸ்தீஷியா கொடுக்கும்போது விரல் நகங்களில் நெயில் பாலீஷ் இருக்கக்கூடாதாம். நான் போட்டிருந்த நெயில் பாலீஷை அவரால் ஸ்ப்ரிட் கொண்டு அழிக்க முடியவில்லை. எனக்கு சிசேரியன்தானா , இவ்வளவு ப்ராக்டிஸ் செஞ்சும் ஒரு ப்ரயோஜனமும் இல்லையா என்று இருந்தது. சிறிது நேரம் கழித்து வலி கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது. தாங்கிக் கொள்ளும் அளவுதான் இருந்தது. அதுவுமில்லாம வலி முதலில் ஆரம்பிக்கும்போது அதிக இடைவெளி விட்டுதான் வரும். அப்போது ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மீண்டும் வலி வரும் என்று முன்கூட்டியே தாங்கிக் கொள்ள மனதை ரெடி செய்து கொள்வது நல்லது. அந்த வலி கடுமையான பீரியட்ஸ் வலியைப் போன்று இருந்தது. வலி வரும் இடைவெளி குறையும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் புஷ் செய்ய வேண்டும் (உள்ளிருந்து தள்ளுவது போன்ற உணர்வு) என்ற உணர்வு வர ஆரம்பிக்கும். அப்படி தோன்றும்போது மூச்சை உள்ளிழுத்து வாய் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை வெளியேற்றினால் தள்ள வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்தலாம். நம்மால் இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது, என்னதான் மூச்சை உள்ளிழுத்து நிறுத்தினாலும் உள்ளிருந்து தள்ளுவது போன்று தோன்றினால் டாக்டரிடன் சொல்லலாம். 4 மணிக்கு மேல் இன்னும் கொஞ்ச நேரத்தில் டெலிவரி ஆகிவிடும் என்று எனக்கே தெரிந்தது.

ஜூலை 23ந்தேதி காலை 5.30 மணிக்கு என் பையன் பிறந்தான். அப்போது அதே சமயத்தில் அங்கே 7 குழந்தைகள் பிறந்தது. இவன் தான் அதுவரை அந்த ஹாஸ்பிட்டலில் பிறந்த குழந்தைகளிலேயே உயரமான குழந்தை. அப்போது பிறந்த குழந்தைகளில் ஒரே ஆண் குழந்தை. பிறந்தவுடனேயே ஒரே கத்தல். என்னிடம் காண்பித்து என்ன பேபின்னு சொல்லுங்கன்னு நர்ஸ் கேட்டாங்க. அதான் ஏற்கனவே தெரியுமேன்னு சொன்னேன். இல்லை, நீங்க பார்த்து கன்பர்ம் பண்ணி சொன்னப்பிறகுதான் நாங்க குளிக்க எடுத்துட்டுப் போவோம், நல்லா உங்க குழந்தையை பாருங்கன்னு சொன்னாங்க. பார்த்தேன். என் கண்ணிற்கு ரொம்ப நிறம் கம்மியா தெரிஞ்சான். என்னடா இது, நாமதான் குடும்பத்திலேயே கலர் கம்மின்னா என் பையனும் என்னை மாதிரியே பொறந்திருக்கானேன்னு நினைச்சிட்டு இருந்தேன். குழந்தை பிறந்த மறு நிமிடம் என் கணவரை காணவில்லை. பையனைக் குளிப்பாட்டறதைப் பாக்க ஓடியாச்சு. என்னை இன்னொரு டாக்டர்கிட்ட ஒப்படைச்சுட்டு, அவர் குழந்தையை என் அம்மாக்கிட்ட காட்ட போயிட்டார். மறுபடியும் அரை மணி நேரம் கழிச்சு தூக்கிட்டு வந்தார். என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல. அவ்வளவு ரோஸ் கலரா இருந்தான். இன்னைக்கு வரைக்கும் என் வீட்டில் என்னை ஓட்டுவாங்க. உனக்கு இத்தனை நிறமா ஒரு பையனான்னு. அவன் மத்த குழந்தைங்க மாதிரி இல்லாம கண்ணை நல்லா திறந்துட்டு, ஏற்கனவே வயத்துலேயே நல்லா வளர்ந்த மாதிரி 6 மாச குழந்தை மாதிரி இருந்தான். இப்பவும் அந்த ஒவ்வொரு நிமிஷமும் நல்லா ஞாபகம் இருக்கு. அவனையும் என்னையும் உடனே எங்க ரூமுக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க. என் அம்மாவுக்கு அவனைப் பாக்க பாக்க அதிசயம். சிறு வயதில் இறந்துப் போன என் அண்ணனின் பிறந்த நாள் அன்றுதான் நான் கர்ப்பம் என்று தெரியவந்தது. அதேபோல என் மகன் அவனை அப்படியே அச்சில் வார்த்ததுபோல பிறந்திருக்கிறான் என்று என் அப்பா சொன்னார்கள். இன்றும் அவனை அம்மா என் மகன் உனக்கு பிறந்திருக்கிறான், ஒழுங்கா பார்த்துக்கோ என்றுதான் சொல்வார்கள்.

தளிகா சொன்னதுபோல் அந்த கடைசி நிமிடங்கள்தான் வலியே தெரியாத நிமிடங்கள். நாம் நன்றாக ஒத்துழைத்தால் நிச்சயம் பிரசவம் என்பது எளிதாக இருக்கும். சிலர் வலி தாங்க முடியாமல் எபிடியூரல் எடுத்துக் கொள்வார்கள். டெலிவரிக்கு பின்பு அதனால் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனை தவிர்ப்பது நல்லது. எபிசியாட்டமி என்பது முதல் பிரசவத்தில் எல்லாருக்கும் பொதுவாக செய்யப்படுவதுதான். குழந்தை பெரிதாக இருந்தால் Vagina வில் சேதம் ஏற்படாமல் இருக்க அப்போது வஜினாவில் சைடில் கட் செய்வார்கள். குழந்தை பிறக்கும்போது அங்கே ஒரு வித numbness (மரத்துப்போன உணர்வு) இருப்பதால் அங்கே கட் செய்வது வலிக்காது. பிறகு குழந்தை பிறந்ததும் லோக்கல் அனஸ்தீஷியா கொடுத்து தையல் போட்டு விடுவார்கள். இப்போதெல்லாம் தையல் போடும் நூல் தானாகவே சேர்ந்துவிடுதைப் போன்று போடுகிறார்கள். முன்பெல்லாம் அந்த தையலைப் பிரிக்க டெலிவரி முடிந்து சில வாரம் கழித்து டாக்டரை பார்க்க வேண்டியிருக்கும். இப்போது தேவையில்லை. டெலிவரி முடிந்தப் பிறகு நல்ல நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் சாப்பிடுவது அவசியம். டெலிவரிக்கு முன்பும், பின்பும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குழந்தைக்கு பால் தரும்போது முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும். அதனை தவிர்க்க கீரை, பேரிச்சை சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றை சாப்பிட்டவுடம் பால் அருந்த வேண்டும். இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்.

திவ்யா, நல்லபடியாக தைரியமாக பிரசவத்தை எதிர்நோக்குங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக இதனையெல்லாம் சொல்ல வேண்டும் என்றே நேரம் கிடைக்காவிட்டாலும் எப்படியோ சமாளித்து டைப் அடித்துவிட்டேன். உங்க குட்டிப் பாப்பா பிறந்தவுடன் தெரியப்படுத்துங்கள். ஜெயந்தி மேடம் உங்க அன்பான விசாரிப்புக்கு உடனடியா பதில் எழுத முடியாததுக்கு மன்னிச்சுக்குங்க. தளிகா, பிரதிபாலா எப்படியாவது இந்த வாரக் கடைசியிலாவது உங்களுக்கு மெயில் அனுப்பனும். திட்டாதீங்க.

யூ ஆர் ரியலி க்ரேட் ..ரொம்ப தெளிவாக முழுவதும் எப்படி சொல்ல முடிஞ்சதுன்னு யோசிக்கிறேன்.
ஆமாம் திவ்யா அதை சொல்ல மறந்து விடேன்..ஷகீலா இதைப் படிப்பதாக இருந்தால் கட்டாயம் அந்த வேலையை செய்யுங்க...குழந்தைக்கான க்லோத் டயஒஅர் துணிகள் நல்ல காட்டனில் வெள்ளை வெளேர் என கிடைக்கிறது...அது நல்ல ஈரத்தை உறிஞ்சும்..குழந்தையை குளிக்க வைத்த பின் அதில் துடைக்கவும் செய்யலாம் அந்தளவுக்கு சாஃப்டாகவும் சுத்தமாகவும் இருக்கும்.வேற எல்லாத்துக்கும் யூஸ் பன்னலாம்.
நான் அதில் 3 துணியை குழந்தையை குளித்த பின் துடைக்க வேண்டி ஃபேப்ரிக் பெயின்டால் அதன் மூலையில் மார்க் பன்னினேன்.
மற்ற துணியில் 4 துணியை முகம் ,கக்கி வைத்தால் துடைக்க தனியாக மாரக் பன்னினேன்..மீத துணியை சும்மா வைத்திருந்தேன்..அது மிகவும் உபயோகமாக இருந்தது..
ஆமாம் தேவா சொன்னது போல் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.நம்ம ஊரில் பல ஹாஸ்பிடலிலும் டெலிவரி ஆகியபின் 3 அல்லது 4 நாட்களில் மோஷன் போனால் மட்டுமே டிஸ்சார்ஜ் பன்னுவார்கள்..எனக்கு சிரிப்பே தாங்கலை அதை கேட்டுட்டு.
பெரும்பாலனவர்கள் ஸ்டிச்செஸ் இருப்பதால் வலிக்குமேன்னு பயந்தே அடக்கி வச்சுட்டு பின்னாடி கஷ்டப்படுவார்கள்...பயப்படாமல் எரிச்சலை தாங்கிக் கொண்டு ஒழுங்காக அப்பபா டாஇலெடுக்கு போனால் நல்லது..முதல் 2 நாளிலேயே டென்ஷன் ஒழியும்.
என் கைனகாலஜிஸ்ட் சொன்னார் ஸ்டிசெஸ் இருந்தால் சிறுநீர் கழிக்கும்பொழுது நல்ல எரியும் அதனால் சுடுநீரில் டெட்டால் கலந்து வாஷ் பன்னினால் எளிதில் காயம் ஆறும் எரிச்சல் மாறிவிடுமென்று..அது ரொம்பவும் உபயோகமாக இருந்தது.
அது மாதிரி டெலிவெரி ஆகி முதல் சில நாட்களுக்கு மனுஷனை குளிக்க விடாமல் பாடுபடுத்துவார்கள்..என் அம்மா 2 நாளைக்கு குளிக்காதே என்றார் சரி என்று தலையாட்டி விட்டு டெலிவெரி ஆகி 4 மணிநேரத்தில் மெல்ல உள்ள போய் நல்ல மேல் கழுகிட்டு தலைக்கு தண்ணி ஊற்றாமல் ஈர டவலால் துடைத்து எடுத்தேன்..அப்பபா பிரசவமானபின் இருந்த களைப்பு எல்லாமே பறந்து ஓடி விட்டது.

kr,ஸாதிகா,அதிரா,ஜெயந்தி மாமி,தேவா,சாரதா அனைவருக்கும் என் நன்றிகள்.எத்தனை பொறுமையா, தெளிவா ரசனையோடு எல்லாரும் எழுதியிருக்கீங்க.உங்க வேலைகளுக்கிடையில் நேரத்தை ஒதுக்கி பெரிய பதிவுகள் போட்டிருக்கீங்க.தோழிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

சாரதா உங்க பதிவை படிக்கும் போது நிறைய நம்பிக்கையும்,தைரியமும் வருது.உங்க பிரச்சனை நான் புதிதாக கேள்விப்படுவது.நீங்க ஒரு சூப்பர் மம்மி.உங்க குழந்தையோட பெயர் அருமையா இருக்கு."அமிர்தவர்ஷினி"னு சொல்லும் போதே மனசு நிறையுது.

ரூபி,நான் நிறைய வெப்சைட்டில் பேர்த் ஸ்டோரீஸ் படித்தேன்.அதனால தான் யாருடையதோ படிக்கும் போதே சந்தோஷமா இருக்கே, நம்ம தோழிகளுடையது தெரிந்து கொள்வது நிச்சயம் நல்ல அனுபவமாக, உபயோகமாக இருக்கும்னு தான் இந்த திரெட் தொடங்கினேன்.தோழிகளின் பதிவுகளால் இந்த திரெட் நல்லா அழகா மின்னுது.எபிசியோடமி தான் எனக்கும் பயம் ரூபி. அதை தவிர்க்க விரும்புகிறேன்.மற்றபடி ஓரளவு தயாராகவே இருக்கிறேன்.அதுவும் தோழிகளின் பதிவுகளை படிக்கும் போது நல்ல தைரியமும், நம்பிக்கையும் உண்டாகிறது.அடுத்த செக்கப்ல IV பத்தி டாக்டர்கிட்ட கேட்கனும்.

ஜெயந்தி மாமி நீங்க 2 நாள் முன்னாடி வரை வேலைக்கு போனீங்களா?கிரேட் மாமி. எங்க அம்மா வெளிய விடவே மாட்டேங்கறாங்க.அப்படியும் திட்டு வாங்கிட்டாவது அங்க,இங்கனு போயிட்டு வந்துருவேன்.யாராவது துணைக்கு வரும் போதே பயந்துக்கறாங்க.பாத்ரூம் போகும் போது கவனமா இருக்கனும்னு சொல்வாங்க.சிரமப்பட்டு போகக் கூடாதுனு சொல்வாங்க.

அதிரா நிச்சயமாக என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

தேவா 45 நாள்லயே உங்களுக்கு சி ஸெக்ஸன்னு சொன்னது ரொம்ப ஆச்சிரியமா இருக்கு.9 வது மாதம் நீங்க விமான பயணம் செய்ததும் வியப்பா தான் இருக்கு.பெல்விக் ப்ளோர்,ஸ்க்வாட்டிங்,கீகல் எக்சர்சைஸ் செய்யறேன்.வாக்கிங் போறேன்.நார்மல் டெலிவரி ஆக ஏதேதோ செய்துகிட்டுருக்கேன்.ஹாஸ்பிடல்க்கு என்னென்ன தேவைனு நீங்களும்,தளிகாவும் சொல்லியிருப்பது ரொம்ப உதவியா இருக்கும்.புஷ் பண்ணுவது குறித்து உங்க அறிவுரையை மனதில் வைத்து கொள்கிறேன்.நீங்க பிரசவத்தை நேரில் பார்க்க போன அனுபவத்தை நினைக்க நினைக்க சிரிப்பாக வருது.உபயோகமான டிப்ஸ் நிறைய குடுத்துருக்கீங்க.

நன்கு ரசிக்கும் விதத்தில் எல்லோரும் அழகாக, தெளிவாக,அனுபவித்து எழுதியிருக்கீங்க.என்னுடைய நம்பிக்கை அதிகமாயிருக்கு.உங்க பதிவுகளை படிப்பது எனக்கும் ஒரு சிறந்த அனுபவம் தான்.

ஜீவா உங்க வாழ்த்துக்கு நன்றி.மருத்துவரிடம் சென்று வந்து விரைவில் எங்களுக்கு இனிய செய்தி சொல்லுங்கள்.
புதுமலர் பூஜா உங்களை அருசுவை வரவேற்க்கிறது.வந்து ஜமாய்ங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

டியர் மாமி

உங்களுக்கு திவ்யா தான் முதல் தோழியா. அப்ப நாங்களாம்.

போங்க மாமி உங்க பேச்சு டூ க் கா.

சாரதா,மாமி பாவம்.அவங்களை கோவிச்சுகாதீங்க.ஜெயந்தி மாமி முதலில் எனக்கு தான் பதிவு போட்டாங்க.அதை தான் அப்படி சொல்லியிருக்காங்க.அவங்க எல்லாருக்குமே நல்ல சிநேகிதி.அதனால சமர்த்தா பழம் விட்டுருங்க.இல்லாட்டி பூச்சாண்டி வந்து கண்ணை குத்திரும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

டியர் திவ்யா

தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட்ஸ்.

எப்போ உங்களுக்கு டெலிவரி டேட். எல்லாரும் இப்படிதான் அதை செய்யாதே, இப்படி உக்காராதே, வெயிட் தூக்காதே ந்னு ஏகப்பட்ட அட்வைஸ் பண்றாங்க.அவங்களுக்கு நம்ம மேல இருக்குற அக்கறை.

நான் கூட இப்படிதான் இருந்தேன். எனக்கு 7 மாதம் இருக்கும் போது (நான் அப்போது ட்ரையினில் தான் ஆபிஸுக்கு போய் வந்திருந்தேன்) ஒரு நாள் ட்ரையினில் ஒரு 25, 26 வயது பெண் நிறை மாத வயிறு போல் இருந்தது. தலையில் ஒரு கொய்யாப்பழ கூடை. அந்த கூடையை கம்பார்ட்மென்டில் விற்று விக்க வரும் போது யாரோட ஹெல்ப்பும் இல்லாம அவங்கலே முட்டி சப்போர்ட் குடுத்து இறக்கராங்க. அவஙக விக்கறது மணியாகிரது என்று பர பர என்று நடப்பது, கத்துவது என்று எல்லாமே எனக்கு ஆச்சர்யம். என்னடா நாம பூச்சி , பூச்சி ந்னு நம்ம உடம்பை பார்த்துக்கறோம். இவங்க அசால்ட்டா இருக்குறாங்கலே.

நான் அவங்களிடம் கேக்கவே செய்துவிட்டேன். என்னம்மா இது எத்தனையாவது மாதம் என்று. அவங்க சொன்னாங்க இது 9ஆவ்து மாதம், நான் இப்படி கூடை தூக்கலேன்னா எனக்கும் என் வயித்துல இருக்கறதுக்கும் யாரு சோறு போடுவா ந்னு.
எனக்கு சே என்று ஆகி விட்டது.

உன்மையை சொல்லப் போனா நமக்கெல்லாம் கடவுள் புண்ணியத்தில் நல்ல சுற்றங்கள், தாங்கிப் பிடிக்க கணவர், எல்லா வசதியும் இருக்கிறது.

இப்படி ஏதும் அமையாதவங்க எத்தனையோ பேர்கள், குழந்தை பெற்று கொள்ளவில்லையா.
உண்மையில் அவங்க தான் ரியலி ப்ரேவ் மம்மீஸ். நாமெல்லாம் கொஞச டம்மீஸ் (சாரி சும்மா எதுகை, மோனை க்காக எழுதினேன். யாரும் தப்பா எடுத்துக்காதீங்க)

மேலும் சில பதிவுகள்