பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

புது மலர் பூஜா, வாம்மா மின்னல் அருசுவைக்கு

அன்பு தோழி

ரொம்ப நன்றி. ஆம்மாடி எத்தனை தலைப்புகள்.... எத்தனை படிவங்கள் ......

எனக்கு எங்க தொடங்க... புறியல :-(

எல்லாமே ரொம்ப நல்ல தலைப்புகள். தமிழ்ல இவ்வளவு அருமையான தளம்.

அன்புடன்
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

சாரதா, அது என்னம்மா மின்னல்?புரியவில்லையே?
விளக்கம் ப்ளீஸ்...
---ஸாதிகா

arusuvai is a wonderful website

சாரதா, அது என்னம்மா மின்னல்?புரியவில்லையே?
விளக்கம் ப்ளீஸ்...
---ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஜெயந்தி மாமி

நன்றி. நான் சிங்கபூரில் வசிக்கிறேன். சென்னையில் இருப்பது போன்ற உணர்வு தான்.

அருசுவையில் தமிழில் படிக்க எழுத ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

அன்பு திவ்யா,

அருசுவையில் நான் படித்த முதல் படிவம், நீங்கள் தொடங்கிய பிரசவ அனுபவங்கள் தான்.

ஆஹா எத்தனை அனுபவங்கள்.

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

ஆஹா சாரதா

ரொம்ப அமர்களமான வரவேற்பு. பயமா இருக்கு :-(

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

சாரதா நீங்க சொல்வது உண்மைதான்.நானும் நீங்க சொன்ன மாதிரி நிறைய பிரேவ் மம்மிஸ் பார்த்திருக் கேன்.நமக்காக நம் உறவுகள் நம்மை தாங்கி கொள்வது சுகமான விஷயம்.அப்படி ஆதரவு இல்லாதவங்க சிலர் கூட பிரச்சனைகளை அழகா போராடி வெற்றி அடையறாங்க.

ஸதிகா நீங்க சென்னையா?அப்ப சென்னை வந்தா நிறைய அருசுவை தோழிகளை பார்க்கலாம்.எனக்கு இந்த மாதம் 28 தேதி EDD.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

நலமா? முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். சுக பிரசவம் ஆக நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். திவ்யா தாய்மை அடைவது தனி சுகம் தான். அதை அனுபவியுங்கள். இப்பொழுது ஆன்லைன் இருக்கிறீர்களா? என்னால் அறுசுவைக்கு வரமுடியவில்லை. உங்களிடம் அரட்டை அடிக்க ஆசையாக இருக்கிறது

தோழிகள் அனைவரும் நலமா? என்னை மறந்து விடாதீர்கள்.

ஜானகி

ஒரு அரசன் வேட்டையாடச் சென்றபோது காட்டில் வேடுவச்சி தனக்குத்தானே பிரசவம் பார்த்து உடனே குழந்தையையும் எடுத்துக் கொண்டு எழுந்து செல்வதைப் பார்த்தானாம்.
அரண்மனைக்கு வந்ததும் கர்ப்பிணியான தன் மனைவிக்கு எந்த மருத்துவ வசதியும் தேவை இல்லை என்று சொல்லி விட்டானாம். நீயும் அதுபோல் வேலை செய், சாதாரண உணவு போதும் என்று சொல்லி விட்டானாம்.
அரசி தெனாலிராமனைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னாளாம்.
மறுநாள் தெனாலிராமன் அரசன் ஆசை ஆசையாக ஏற்படுத்தி இருந்த ரோஜாத்தோட்டத்தின் வேலைக்காரர்களை அனுப்பிவிட்டானாம். ரோஜாச் செடிகள் வாட ஆரம்பித்தனவாம். அரசர் இதைப் பார்த்து கோபத்தில் குதிக்க ஆரம்பித்தாராம். அப்போது கூட இருந்த தெனாலி ராமன், அரசரிடம் காட்டில் ரோஜாச் செடிகளுக்கு யார் தண்ணீர் விடுகிறார்கள். அங்கு மலரும் ரோஜாக்கள் நம் தோட்டத்துப் பூக்களை விட பெரிதாக மலருகிறதே. அதனால்தான் தோட்டக்காரர்களை அனுப்பி விட்டேன் என்றானாம். அரசரும் தன் தவறை உணர்ந்தானாம்.

சாரதா சொன்னது போல் நிறைய பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

சாரதா நான் முதன் முதலில் அறுசுவைக்கு வந்தபோது கதைத்தது திவ்யாவுடனும், ஹேமாவுடனும்தான். அதைத்தான் சொன்னேன்.
ஒவ்வொரு கணமும் கடவுளுக்கு நன்றி சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்