பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

இரு பதிவு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இப்பலாம் சுத்தமா டைமே கிடைப்பது இல்லை..எப்படி இருகீங்க திவ்யா வயிற்றுகுள்ளே இருக்கும் பேபி என்ன சொல்லுது என்னை தேடுதா ;-)

உங்களுக்காகவே பதிவு போட்டுடனும்னு வந்துட்டேன்

என் கதை இதோ:

எனக்கு கல்யாணம் முன்பிலிருந்தே குட்டீஸ்னா அவ்லோ உயிர் அவங்களுக்கு மேக்கப் செய்யவே பாக்ஸ் பாக்ஸா வைத்து இருப்பேன் அதுகேத்தார்போல என் அக்காக்கு பொன்னு பிறந்தா சொல்லவே வேனாம் நான் செம குசி ஆகிட்டேன் எப்பபார் அவளை கவனிப்பாதே என் வேலை என் கல்யாணம் முன் வரை அவளை நாந்தான் வளர்த்தேன் படிப்பில் இருந்து எல்லாமே என்னிடம்தான் இருப்பா (எங்க ஊரில் பெண்ணுக்கு பெண் வீட்டாரே ஒரு வீட்டை கொடுக்கனும் நான் மட்டும் என்ன விதி விளக்கா?அதுபோல எனக்கு ஒரு வீட்டை தந்தாங்க) என் கண்மனியை பிரிந்தேன் ரொம்ப துவண்டு போனேன் அப்பதான் எனக்குள் ஒரு உயிரை இறைவன் தந்தான் (அல்ஹம்துலில்லாஹ்)ரொம்ப ஹேப்பியானேன் வீட்டை பெருக்குவது கஸ்டமாகிட்டு குனியாதே அப்படி இப்படின்னு அட்வைஸ் வேலைக்கும் ஆள் கிடைக்கல சரின்னு நின்னுட்டே பெருக்குறாப்ல வெலக்குமாறை வன்fகினேன் நின்னுட்டே பெருக்கிப்பேன்..அதோட வாசிங் மிசின் என் வீட்டில் மாடியில்தான் வைத்து இருந்தோம் தனி ரூமில் அதை கீழே மாற்றி வீட்டிலேயே காய போடுறாப்ல வலி செய்தேன்.. மறுநாளைக்கு சமைக்கும் தேவையான பொருட்களை சாயங்காலம்,நைட்டில் சும்மா டிவியை பார்த்துட்டே ரெடி பண்ணி பிரிஜில் வைத்துடுவேன் மறுநாள சமைக்கும் வேலை மட்டுமே..வீட்டை துடைக்க பெரிய மாபை தேடி பிடிசு வாங்கிட்டேன் குனியாம இருக்கனும்னு அதை வைத்து தினம் துடைப்பேன் என் அம்மா தோட்டத்தை,வீட்டைப்பெருக்க பேசுவாங்க தூசி வரும்னு எனக்கு சைனஸ் பிராப்லம் வேற அதோட குழந்தைக்கு தூசி போகும்னு.. அம்மா தினம் கொஞ்ச நேரமாவது வெளியே போவாங்க அப்ப மூக்கில் துணியை கட்டிட்டு தோட்டத்தை பெருக்குசுவேன்,பாத்ரூமையும் கிளீனிங் அப்படிதான் குறிப்பிட்ட மாசம் ஆனதும் வயிற்றில் இருக்கும் என் பிள்ளையுடன் பேசுவேன் அவலும் அதுக்கு ஏற்றார்போல அசைவு கொடுப்பா சந்தோசமா இருக்கும்..எங்க ஊரில் குழந்தை பேருக்கு சரியான மருத்துவ வசதி இல்லை நான் ஊரில் பிரசவம் பார்க விரும்பல இருப்பினும் ஒரு அவசரம்னா தூரத்து இடத்துக்கு போக முடியாதுன்னு பக்கத்து ஊரில் (திருசெந்தூர்)இருக்கும் டாக்டரிடம் அடிக்கடி செக்கப்க்கு மட்டும் செல்வேன் டெலிவரிக்கு திருநெல்வேலி க்கு செல்லலாம்னு பிலேன்

6 வது 7 வது மாசத்திலேயே எனக்கு என் பொண்ணுக்கு தேவையான எல்லாவற்றையும் நானே எடுத்து வைத்தேன் குழந்தைக்கு தேவையான எல்லா டிரசையும்,தொட்டி த்துணிகள்,அணியாடை துணிகளைலாம் தண்னீரில் நன்கு அலசி டெட்டால் போட்டு காய வைத்து நீட்டா மடித்து வைத்துட்டேன் A TO Z எல்லாமே ரெடி பண்ண்யாச்சு குழந்தை மட்டுமே பெற்றுக்கனும்..

8 மாசம் ஆனது எனக்கு பேபி தலை மேலேதான் இருக்காம் அதனால ஆப்ரேஷந்தான்னு சொல்லிட்டாங்க சரின்னு திருநெல்வேலி டாக்டரிடம் சென்றோம் அவங்க பேசினாங்க தண்ணீ கம்மியா இருக்கு என்னமா நீ இப்படி அசால்டா இருந்து இருகே ஒரு 6 மாசத்திலாவது வந்தால் உங்களுக்கு தண்ணீ அளவை கூட்டி நார்மல் டெலிவரியா ஆக்கி இருபேன் இப்ப ஒன்னும் செய்ய முடியாது இனி இருக்குற தண்ணீர் வற்றாம பார்த்துகனும் அதோட உனக்கு சுத்தமா உடம்பில் சத்து இல்லை நிறைய சத்தும் சேர்கனும்னு சொல்லிட்டாங்க அதுதான் முடியும்னு சொல்லிட்டாங்க அதுக்காக 2,3 டிரிப் போடனும்னு எழுதி கொடுத்தாங்க ஊரிலேயே இதை போட்டுகலாம் அக்டோபர் 5 ஆம் தேதிக்கு வாங்கன்னு சொல்லிட்டாங்க சரின்னு ஊர் வந்து டிரிப் போட்டுட்டே இருந்தேன் அப்பப்பா அந்த டிரிப்பை போட்டாலே கொஞ்ச நேரத்தில் கையெல்லாம் வீங்க வலி பயங்கரமா எடுக்கும் எனக்கு தாங்க முடியாமல் அழுது முடிப்பேன்..அதை இப்ப நினைத்தாலு அந்த வேதனை என் மனசை வாட்டும்..அதோட என்னவர் வேற ஆப்பில் அது இதுன்னு மூச்சு விடாம சாப்ட சொல்லுவார் :-D இப்படிலாம் சாப்ட முடியாதுன்னு சொன்னா அவ்லோதான் கண்ஸீவா இருக்குறப்ப ஒழுங்கா சாப்டா இப்ப ஏன் இப்படி ஆக போகுது அப்படி இப்படின்னு அட்வைஸ் எனக்கு குமட்டும் அய்யோ வாமிட் வேற ரொம்பவே கஸ்டம் அபட்டேன் 8 மாசத்துக்கு பின்..பிறகு நோம்பு (விரதம் வரும் நாள் நெருங்கியது) அம்மா சொன்னாங்க நோம்பு வந்தா பயணம் செய்வது கஸ்டம் (ஏன்னா டாக்டர் என்னை அழைத்து இருக்கும் டைம் சரியா நோம்பின் முதல் நாள்)சோ இப்ப ஒரு முறை பார்த்துட்டு வந்துடலாம்னு சொன்னாங்க..சரின்னு கிளம்ப ரெடியானோம் அப்ப குழந்தை பிறந்ததும் நர்சுக்கு தேவையான குழந்தையின் டிரஸ்,பேபி சோப்,துவட்ட மெல்லிய டவல்,கை குளோஸ்,சாக்ஸ்,டயாப்பர்,ஒரு சின்ன அனியாடை துணி,, எனக்கு ஒரு நைட்டி இவகளை தனியாக சின்ன கவரில் போட்டு ரெடியா எடுத்துட்டேன் அதோட ஹாஸ்பிடலில் டாக்ரட் இருக்க சொல்லிடா ரிட்டன் ஊர் வரவா முடியும் சோ ஏற்கனவே எடுத்து வைத்த சாமான்களைலாம் எடுத்து காரில் எடுத்து அங்கு சென்றோம்..நான் போன டம் டாக்டர் இல்லை என்வே வார்ட் எடுத்து அஙு இருந்தோம் மறு நாள் டாக்டர் வந்தார் ஸ்கேன் போட்டு தண்ணீரெல்லாம் வற்றிட்டு வருது சோ 4 நாளுக்குள் ஆப்ரேஷன் செய்யனும்னு சொன்னாங்க எனக்கு ஒரே அழுகை என் குழந்தைக்கு ஏதும் ஆகிட கூடாதேன்னு அப்ப இருந்த 4 நாளில் இன்னும் அதிகமான டிரிப் எனக்கு வேதனை தாஅக்க முடியல அப்ப கூட வலியை விட என் குழந்தை நல்லா இருக்கனுமேன்னு வேதனைதான் முதல் பிரசவம் என்பதான் என்னனவோ பயமெல்லாம் லாஸ்ட் டைம் ஆப்ரேஷன் ஒருநாள் முன்பு என்னை பார்க்க என் மாமி வீட்டில் இருந்து எல்லோரும் வந்தாங்க ஒரே லூட்டிதான் வார்டில் அவங்களோட டைம் போச்சு மறுநாள் காலை 7.30 (முதல் நோம்பு அன்று 5.10.2005) க்கு ஆப்ரேஷன் நைட் தூக்கமே இல்லை பயம் ஒரு பக்கம் நாம புலைப்போமான்னு ஓதிட்டே இருந்தேன் சுப்ஹ் ஆனதும் தொழுது துஆ செய்தேன் பின் ஈஸிஜி எடுக்க ஆள் வந்தாங்க அப்பவும் அப்புறம் என்னை அழைத்து வர ஆள் அனுப்பினாங்க நான் நடக்கும் ஒவ்வொறு நடையும் ஏதோ மரணத்தை நெறுங்குவது போல பீளிங் அதுக்குமேல என் செல்ல பொண்ணு நல்ல படியா ஒரு குறையிம் இல்லாமல் பிறக்கனும்னு பயம் நடை தடுமாறியது லாஸ்ட் டைமில் பீபி பிராப்லம் வந்தா ஆப்ரேஷன் செய்ய முடியாதே அப்புறம் சுத்தமா தணீர் இல்லைனா என் குழந்தையின் கதி இப்படிலாம் பல எண்ணம் மனதில் ஓடிட்டே இருந்தது எல்லோரும் வந்தாங்க என்னோட அப்ப ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அடி எடுத்து வைத்தேன் நர்ஸிடன் பின் டிரஸ் மாற்றும் ரூமில் எனக்கு ஒரு உடை கொடுத்தாங்க அதை போட்டு கொண்டேன் அப்ப நர்ஸ் இப்ப வாரேன்னு போயிட்டாங்க என்னை அந்த ரூமில் உட்கார வைத்துட்டு ஓதிட்டே இருந்தேன் அப்ப ஆப்ரேஷன் தியேட்டரில் வேறொரு ஆப்ரேஷன் நடந்துட்டு இருந்தது போல அந்த பொண்னை என் பக்கத்தில் போட்டாங்க பாருங்க எனக்கு தலை சுற்றிட்டு அந்த பொண்ணுக்கு கர்பதடை ஆப்ரேஷனாம் அயோ அவங்களை பார்த்ததும் நான் எத்தென்னே முடிவு பண்ணிட்டேன் ஆப்ரேஷன் ரூமில் இருந்து எல்லாத்தையும் கிளீன் செதுட்டு இருந்தாங்க பிளட் நிறைய மயக்கம் வந்துட்டு இதோட நம்ம கதி முடிஞ்சதுன்னே முடிவு செய்துட்டேன் அந்த டைம் டாக்டர் வந்தாங்க என்னிடம் என்னமா மர்ழியா எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு கத்தினாங்களே ஒரு கத்து நர்சை பார்த்து முட்டாள் முட்டாள் இப்படியா பேஷண்டை விட்டுட்டு போவான்னு இன்னும் பயம் ஒழிஞ்சோம்னு ஆனா அந்த டைம் நம்ம உயிர் பெரிசா தெரியல என் குழந்தையை நல்லபடியாக தா அல்லாஹ்ன்னே வேண்டிட்டே தியேட்டருக்குள் போனேன் எதையும் பார்கல பயத்தில் கத்திலாம் இருக்குமேன்னு நேரா பெட்டை பார்த்து நடந்ததில் வயரில் தடுக்கி விழ பார்த்து தப்பித்தேன் அதோட போய் அதில் படுத்தேன் எனக்கு யாரெல்லாம் துஆ கேட்க சொன்னாங்களோ அவங்களுகெல்லாம் துஆ செய்தேன் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு,என் குடும்பத்துக்குன்னு எல்லோருக்கும் வேண்டியபின் என் குழட்ந்ஹைக்கும் வேண்டினேன் குறைவில்லாத செல்வத்தை தான்னு அதோட நான் பிழைப்பேன்னு நினைக்கல குளோரோபாம் கொடுத்தாங்க பின் சுவர்கத்தைதா ந்னு கேட்டுட்டு கலிமா ஓதிட்டே கண்ணை மூடினேன் அதோட போச்சு என் நினைவு அய்யோ கை வலிக்குது மற்றது பிறகு..

அன்புடன்,

மர்ழியாநூஹூ

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் திவ்யா

சில தினங்களாகவே இந்த கேள்விக்கு பதிவு போட வேண்டும் என்று நினைத்து இருந்தேன். இதோ இப்போது அதற்கான நேரம் போலும்.......ஒவ்வொருவருக்கும் பிரசவ அனுபவம் என்பது தனித்தனியே.,தோழிகள் அனைவரின் பதிவில் இருந்து தெரிந்து கொண்டது..

என் கதை
எனக்கு திருமணம் ஆனது ஜனவரியில் சில மாதம் இடைவெளிவிட்டு மே மாதம் நான் கர்ப்பமாகினேன்..மிகவும் சந்தோஷம் என்னவருக்கு,என்வீட்டில் மற்றும் எனது மாமியார் வீட்டிலும்.செக்கப்செய்ய 50ஆவது நாள் ஒரு மொழி பெயர்ப்பவரையும் கூட்டி கொண்டு (சைனீஸ் மொழிபெயர்ப்பவரை) ஒரு மில்டிரி ஹாஸ்பிட்டலுக்கு போய் செக்கப்செய்து கன்பார்ம் செய்தோம்.பிறகு 12ஆவது வாரம் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். 60ஆவது நாள் தாண்டியதுமே ஒரே வாமிட் எனக்கு கிச்சனுக்குள் சென்றாலே பிடிக்காது அதுவும் சம்மர் ஆரம்பிக்கும் டைம்வேற கிளைமேட் வேற ஒத்துக்காம மத்தியானத்திற்கு மேல் நைட் 10 மணிவரை வாமிட் அதன் பிறகு தூக்கம் காலையில் \ரெஸ்ட் மறுபடியும் மத்தியானம் ஸ்டார் ஆக்ஷ்சன் போல இப்படியே கழிந்தது .ஒரு 8ஆவது வாரம் இருக்கும் எனக்கு ஒரே சிகப்புகலர் வாந்தி பாத்ரூம் டாய்லட் சிங் வெள்ளைகலர் அதில் சிகப்பு கலர் பளீர் என்று இருந்தது என்னது இது தக்காளியா வெளியே வருது என்று எனது கணவர் சொன்னார் நானும் ஆமாம் பார்த்தீங்களா? என்றேன் சில நிமிடத்தில் நான் சொன்னேன் 2நாளாக நாம் தக்காளிவைத்து சமைக்கவில்லையே என்று அப்புறம் தான் தெரியும் இது தக்காளி அல்ல இரத்தவாந்தி என்று 2 நாள் இரத்தவாந்தி என்னாள் இதற்கு மேல் வாந்தி எடுக்கமுடியாது என்றவுடன் மறுநாள் அந்த ஹாஸ்பிட்டலுக்கு போனோம் அங்கே டாக்டார் பார்த்துவிட்டு இட் டீஸ் நார்மல் என்றார் கூலாக எனக்கு அப்படியே தூக்கிவார்ரி போட்டுவிட்டது. என்னது இப்படி சொல்லுகிறாங்க என்று அப்படி வாந்தி வந்தா வாந்தி எடுத்துமுடிந்த பின்பு பால் காய்ச்சி கொடுங்க என்று அதன் பிறகு 10ஆவ்து வாரம் ஒரு வயறு வலி தாங்கி கொள்ளவே முடியவில்லை அப்படி 2 தினம் அதன் பிறகு 12ஆவது வாரமும் வந்தது ஸ்கேனிங் பண்ணிப்பார்ப்போம் என்று ஸ்கேனிங் பார்க்கிறாங்க அவர்களுக்குள்ளே ஏதேதோ பேசிகொள்கிறாங்க எனக்கும் எனது கணவருக்கும் ஒன்றும் புரியவில்லை.பிறகு டாக்டர் பார்த்து குழந்தை வளர்ச்சி சரியாகவில்லை அதனால் அடுத்தவாரமும் வாங்க வந்து செக்கப் செய்து கொண்டு பதில் கூறுகிறேன் என்றார்கள் அடுத்த திங்கள் வரை வெயிட் செய்ய வேண்டுமே என்று இருந்தேன் ஒவ்வொருநாளாக எண்ணினேன்.வெள்ளிக்கிழமை இரவு ஒரு 8 மணி இருக்கும் எனக்கு இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது உடனே டாக்டரிடம் போனால் அவங்க நாளை காலையில் தான் டாக்டர் இருப்பாங்க வாங்க என்று சொல்லிவிட்டாங்க.மறுநாள் காலை 7 மணிக்கு ஹாஸ்பிட்டலுக்கு போய் மறுமுறையும் ஸ்கேனிங் பார்த்த போது கரு கலைந்து விட்டது அதனால் டி.என்.சி பண்ணவேண்டும் என்று கூறினாங்க பாருங்க நான் ஒரே அழுகை இப்போது நினைத்தாலும் அந்த நாள்13 ஆகஸ்ட் 2005 என்னால் மறக்கமுடியவில்லை டாக்டர் கேட்கிறாங்க சைனீஸில் எதற்கு இவங்க இப்படி அழுகிறாங்க அவங்களை கன்டிரோல் பண்ண சொல்லுங்க என்று எனது மனதின் நிலையை யாரிடம் சொல்ல.......ஏன் என்றால் இங்கே நாகரீக வளர்ச்சி முற்றி திருமணம் ஆகும் முன்பு டி.என்.சி செய்து கொள்ள்கிறாங்க.நான் டி.என்.சி பண்ணிய நேரம் என்னுடன் 7பேர் திருமணம் ஆகாதவங்க நானும் மற்றும் ஒரு லேடியும் மட்டும் திருமணம் ஆனவங்க.எனக்கு டி.என்.சி செய்ய 30 நிமிடம் ஆனது மற்றவர்கள் எல்லாருக்கும் 10நிமிடம் கழித்து அழகா ஒரு ஹாண் பேக்கை தூக்கி கையில் மாட்டிக்கொண்டு வீறு நடை போட்டு கொண்டு செல்கின்றனர்.நான் மட்டும்2பக்கம் துணையுடன் ஒரு நார்த் இந்தியன் முஸ்ஸீம் பாபி வீட்டிற்கு சென்றேன் அவங்க என்னை ஒரு மாதம் காலம் அம்மா பார்ப்பது போல் பார்த்துக்கொண்டாங்க. அதில் என் உடம்பு ஏறியது இன்னமும் இறங்க மாட்டேங்குது.................. இந்த கதையை படித்து திவ்யா பயப்பட கூடாது இனிமேல் கதை ஜாலியாக போகும்

அதன் பிறகு கிட்டதட்ட 9 மாதம் கழித்து அதே போலாவே 2006மே மாதம் மறுமுறையிம் கன்சீவ் ஆனேன்.இந்த முறை யாரிடமும் நாங்க சொல்லிக்கொள்ளவில்லை.வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றேன் 45 ஆவது நாள் ஒரு சைனீஸ் டாக்டர் ஆனால் ஆங்கிலம் பேசுவாங்க அவங்க கிட்ட செக்கப்போனேன் செக் செய்ய்து விட்டு கரு நல்ல படியாக ஃபாம் ஆகி இருக்கு கருப்பையினுள் இருக்கிறது என்று ஸ்கேன்னிங் செய்து காண்பித்தார்கள்.ஓ.கே என்று ஆனது அப்போது அந்த டாக்டர் சொன்னாங்க நீங்க இருக்கும் இடத்தில் இருந்து இங்கே வருவது மிகவும் தொலைவு அதனால் பக்கத்தில் ஒரு ஆஸ்பத்திரி இருக்கு அங்கே போங்க என்று ஒரு விலாசத்தை தந்தாங்க.

60ஆவது நாள் அந்த ஆஸ்பத்திரிக்கு போனோம் அது அரசு மருத்துவமனை [நம்ம ஊர் அரசு மருத்துவமனை மாதிரி நினைக்காதீங்க]நல்ல நவீன முறையில் இருந்தது தாய் மற்றும் குழந்தைகளுக்கான மருந்துவமனை.அந்த டாக்டரை எனக்கு நன்றாக பிடித்து இருந்தது அவங்க பெயர் டாக்டர் "சூ" கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் அவங்க கிட்டேயும் எனது பழைய ரிப்போர்ட்டு கொடுத்தேன் பார்த்து விட்டு பயப்பட வேண்டாம் என்று கூறிவிட்டாங்க.மறுபடியும் என்னை 12வாரம் வாங்க என்று சொல்லி அனுப்பி விட்டாங்க..நான் டாக்டர் வாமிட்டுக்கு மெடிசின் கொடுங்களே என்று கேட்டேன் அவங்க இல்லைம்மா இங்கே நாங்க வாமிட்டுக்கு மெடிசின் கொடுப்பது இல்லை என்று சொல்லிவிடாங்க.நானும் சரி என்று சொல்லி விட்டு வந்து விட்டேன் அதே போல 8 ஆவது வாரம் முதல் இரத்தவாந்தி எனக்கு மனதின் உள்ளே தோன்றியதை என்னவரிடம் சொன்னேன் பாருங்க போன தடவை மாதிரியே மே மாதம் குழந்தை உண்டாகி விட்டேன்,மறுபடியும் டாக்டர் 12 வாரம் தான் வர சொல்லியிருக்கிறாங்க,இப்போது இரத்தவாந்தி வேற எனக்கு பயமாக இருக்கு என்று அவர் அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்றார்.வாமிட் இந்த முறை காத்தால இருந்தே இருக்கும் அதனால் எனது கணவர் ஒரு வாளியை பெட்ரூம்மில் வைத்துவிட்டர், காலை டிபன், மத்தியம் லஞ்சு எல்லாம் செய்து டேபிளில் எடுத்துவைத்து விட்டு செல்வார்..(என் கணவர் நன்றாக சமைப்பார்)
எனக்கு சாப்பிட பிடிக்காது ஆனால் பாபி வீட்டிற்கு சென்றால் நன்றாக சாப்பிடுவேன் அது எப்படி என்றே தெரியாது ,பிஸா கட்டுக்கு சென்றல் ஒரு வெடுவெடுவேன்,

இப்படி ஒரு வழியாக 12ஆவது வாரம் வந்தது டாக்டர் சொன்னாங்க 2 மூன்று டெஸ்ட் எடுத்துவிட்டு நாளைகாலையில் வந்து ஸ்கேன்னிங் பார்க்கவேண்டும் என்றார் ஓ.கே என்று அடுத்த நாள் ஆனது (என்ன கேள்வி வருமோ எக்ஸமுக்கு என்ற நிலையில் இருப்பது போல இருக்கிறேன்)என்னவர் அப்படிதான் கூட மொழிபெயப்பவரும் ஸ்கேன்னிங் செய்து ஒவ்வொன்றாக் சொல்ல எனக்கு டிரான்ச்லேட் ஆக்கினாள் மொழிபெயப்பவர் குழந்தையின் பாமேர்ஷன் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொன்னாங்க.ஹார்ட் பீட் சத்தம் கேட்டேன் மிகவும் சந்தோஷம்.அப்பாபா அந்த நாளை மற்க்க முடியவில்லை.அதன் பிறகு டாக்டர் சொன்னார் எல்லாமும் சரியாக இருக்கிறது ஒரு வாரத்திற்கு ஒரு மெடிசின் தாரேன் அதை உங்கள் ஆசனவாய் வைத்துவிட்டு இரவு தூங்குங்க ஏன் என்றால் அதில் ஒரு சின்ன இன்பெக்ஷ்ன் என்று மற்றபடி நீங்க நாளைக்கும் வாங்க ஒரு பிளட் செக்கப் செய்யவேண்டும் என்று பாஸ்டிங்க் பிளட்டு வேண்டும் அதனால் சாப்பிடாமல் வாங்க என்று சொன்னாங்க ஓ.கே என்று காலையில் எழும்ப மணி 8 விரைவாக ஓடினோம் 9 மணி ஆஸ்பத்திரியில் போய் என்னவர் என்னை 4ஆவது மாடிக்கு அனுப்பி விட்டு அவர் பணம் கட்டி ரசீது வாங்க கீழே சென்றார் நான் அந்த படிகட்டின் வாசலினுள் நின்றுகொண்டே வாசலைப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் சற்று நேரத்திற்குள் எனக்கு காலில் இருந்து ஏதோ விறுவிறுப்பாக வயிற்றுனுள் பிடித்து நெஞ்சுப்பகுதிக்கு வருகிறது யாரையாவது கூப்பிடு என்று சொல்கிறது எனது மூளைப்பகுதி நான் எனது வலது கரத்தை ஒரு சைனீஸை நோக்கி நீட்டுகிறேன் இடது கரத்தில் ரசீது பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது ஒருசில விநாடிக்கு பின்னர் நான் ஒரு பெஞ்சில் படுத்து இருக்கிறேன் ஒரு நர்ஸ் என்னை சோதனை செய்கிறார். அப்போது தான் எனக்கு புரிந்தது நான் கீழே விழுந்து விட்டேன்நான் பேபி பேபி என்று எனது வலது கரத்தால் வயிற்றினை தடவிக்கொண்டே, சொன்னேன் அதற்க்குள் எனது கணவர் வந்து விட்டார் அவர் வந்தததும் அவருக்கு நல்ல் டோஸ் விட்டார் அந்த நர்ஸ் இனி வரும் போது யாரையாவது கூட்டிகொண்டுவரவேண்டும் இவளை தனியாகவிட கூடாது என்று.என்ன தான் இருந்தாலும் எனது மனதிற்குள் என் பேபிக்கு என்ன ஆச்சோ என்றே பயம் பிளட் செக்கப் செய்து விட்டு உடனே டக்டரிடம் நான் போய் ஆக்ஷன் மூலம் நான் கீழே விழுந்து விட்டேன் என்று சொன்னேன் அவ இட்ஸ் ஓ.கே என்றாள் எனக்கு என்னடா இவங்க இப்படியே கூல் ஆக இருக்கிறாங்க என்று பிறகு சில மெடிசினை தந்து இதனை சாப்பிடுங்க அடுத்தமாதம் வாங்க என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அடுத்த நாள் காலையில் நான் யுரின் போன போது இரத்தம் கசிந்தது அப்படா நான் சத்தம் போட்டு எனது கணவரை கூப்பிட்டு விவரத்தை சொன்னேன் உடனே ஹாஸ்பிட்டலுக்கு போனோம் டாக்டர் செக்கப் செய்து விட்டு சொனார் நோ ப்ராபளம் என்று உட்காரவைத்து எனக்கு கொஞ்சம் அட்வைஸ் செய்தாங்க இது ஓல்ட் பிளட் சொ உங்க பேபி சேப் அதுபோல் உங்க பேபி வயிற்றுனுள் 7 லேயருக்குள்தான் இருக்கு அது இப்பதான் உருவாகி வருகிறது அதன்னால் நீங்க கீழே விழுந்ததில் ஒன்றும் ஆகாது உங்க பேபிக்கு ஆனால் இதன் பிறகு நீங்க கீழே விழாமல் பார்த்துக்கொள்ளவும் என்றார் அப்போது தான் ஒரு சமாதனம் ஆகியது.என் வீட்டுக்காரர் இவளை எப்போது ஊருக்கு அனுப்ப டைம் சரியாகா இருக்கும் என்றார் நெக்ஸ் மந்த் 15ம் தெதி மேல் அனுப்புங்க என்றார் பாவம் என் டார்ச்சர் தாங்கிகொள்ள முடியவில்லை

அப்படி நான் செப் மாதம் 10ஆம் தேதி வந்தேன் இந்தியாவிற்கு , 3 மாதம் மாமியார் வீடு அங்கே 5ஆவது மாதம் ஒரு ஸ்கேன் பார்த்தேன் எல்லாம் நன்றாக உள்ளது என்றார் டாக்டர் அதன் பிறகு தான் அப்படா என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது நான் கீழே விழுந்தது பிரச்ச்னை இல்லை என்று உறுதி ஆகியது அதன் பிறகு என் வீட்டிற்கு போனேன் 7 மாதம் சீமந்தம் முடிந்து, எல்லாம் நார்மல் உங்களுக்கு நார்மல் தான் அதனால் பயப்படவேண்டாம் என்று கூறினார் மிகவும் சந்தோஷம் நமக்கு நார்மல் தான் சிறந்தது என்று எல்லா வேலையும் செய்தேன் என் குழந்தை வயிற்றுக்குள் செய்யும் சேட்டைகள் எல்லாம் நான் மட்டும் தனியே ரசித்தேன் எனது கணவருக்கு போனில் சொல்லுவேன்.சில வேளை எங்க அப்பாவிடம் பாருங்க அப்பா என் வாண்டு முட்டுது என்று வயிற்றை காண்பிப்பேன் ஒரு ஆசையில் இப்போது நினைத்தால் அய்யோ அப்பாவிடம் இதை எல்லாம் பேசினோம் என்று இருக்கிறது

ஒரு வழியாக டாக்டர் உங்களுக்கு மார்ச் 1வாரம் தேதி என்றார். என் வயிரை பார்த்தால் 8 ஆவது மாதம் நிறை மாதம் போல இருக்கும் எல்லாரும் பெண் குழந்தை தான் உனக்கு என்றார்கள் அப்போது ஒரு ஸ்கேனிங் எடுக்க சொன்னாங்க அதில் எனக்கு தண்ணீர் அதிகம் என்றனர் உடனே சுகர் செக்கப் செய்யசொன்னார் அதில் எல்லாம் நார்மல் என்றவுடந்தான் நிம்மதி எனக்கு, எனது தங்கை திருமணம் பிப்ரவரி 9ஆம் தேதி2007 அதனால் எனது கணவர் அதை ஒட்டி வந்தால் திருமணம் மற்றும் பிரசவத்திற்கு துணையாக இருக்கலாம் என்று வந்தார்.திருமணநாளின் முன் தினம் நானும் எனது கணவருமாக சென்று எனக்கு செக்கப் எல்லாம் செய்துவிட்டு வந்தோம் எல்லாம் நார்மல் அடுத்த வாரம் வாங்க இனிமேல் எல்லா வாரமும் வரவேண்டும் என்று சொன்னாங்க

அடுத்த நாள் திருமணம் அன்று நிறைய சொந்த பந்தங்கள்,பிரண்ட்ஸ் என்று எல்லாருடனும் போய் போய் பேசினேன் எல்லாரையும் பார்த்தமகிழ்ச்சி அந்த நேரம் சில மனதை கஷ்டபடுத்துவது போல வார்த்தைகள் எனது கனவரின் சைடில் இருந்து, சரி விடு என்று மேடை மீது ஏறி திருமணம் பார்க்கிறேன் தாஇகட்டு முடிந்த பின்னர் இனிமேல் உட்காருவோம் என்று திரும்பி ஏதோ ஒரு ஒயரில் கால்வைத்தேன் எனது சப்பலில் ஈரம் இருந்தது அதன் மூலம் கரண்டு பாஸ்ஸாகி நான் ஆடுகிறேன் எங்க அம்மா என்னை பிடிக்க வந்தாங்க அவங்களுக்கு அந்த ஷாக் பரவியது போட்டோமேன் ஓடிப்ப்ப்ய் கரண்டு மெயினை ஆப்செய்தார்.உடனே சிறிது உட்கார்ந்து குழந்தைக்கு ஹார்ட்பீட் கேட்கிறதா என்று கைவைத்து பார்த்தேன் ஒர்ன்றும் பிராபளம் இல்லை என்று அன்று நன்றாக ரெஸ்ட் எடுக்கிறேன் என்று தூங்கிவிட்டேன்.10ஆம் தேதியும் நன்றாக ரெஸ்ட் எடுக்கவேண்டும் போலாவே இருந்தது ஆனல் என் குழந்தை மூவ்மெண்டு படுவேகமாகவே இருந்தாது.எனக்கு ஷாக் அடித்தது யாருக்கும் அதிகம் தெஇர்யாது 10ஆம் தேதியும் எனது கணவர் சைடுல் இருந்து பிரசர் என்னல தாங்கிகொள்ளவே முடியவில்லை அதன் விளைவு 11ஆம் தேதி காலையில் எனக்கு சில அறிகுறி ஏற்பட்டது அதனால் டாக்டரை பார்த்தோம் செக்கப் செய்துவிட்டு அட்மிட் செய்யசொல்லிவிட்டாங்க 2 நாள் இங்கே ரெஸ்ட் எடுங்க என்று, வீட்டிலே கல்யாண வீட்டிற்கு வந்தவங்க,பாவம் அம்மாவிற்கு 2 பெண்ணும் முக்கியம் நான் அம்மா வீட்டில் பாருங்க என்று, நான் தினமும் சாமி கும்பிடுவேன் அதில் எப்போதும் ஆண் குழந்தை என்றாலும் பெண் குழந்தை கொடுத்தாலும் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே வணக்குவேன்.எங்க வீட்டுகார்ருடைய குடும்பத்தில் பெண்குழந்தை எதிர் பார்த்தனர்

சரி என்று நானும்,என்னவரும், அக்கா ,சித்தி என்று ஹாஸ்பிட்டலில் என்னை மட்டும் ஐ.சி.யுவில் வைத்து இருந்தாங்க.இரவு எனக்கு ஆப்பிரேஷனுக்கு ரெடிசெய்ய தாயர் நிலை படுத்துபவர் போல் தயார் படுத்தினாங்க.நான் கேட்டேன் எதற்கு என்னை தயார் படுத்திதீங்க என்று அதற்கு அவங்க டாக்டர் சொன்னாங்க என்று ஒரு மெடிசினை தந்தாங்க, யூரினோ, மோசனோ எழும்ப வேண்டாம் எங்களை கூப்பிடுங்க நாங்க வந்து பெட் பென் வைக்கிறோம் என்றன்ர் அப்போது தான் எனது உடல் நிலை ப்பற்றி ஏதொ குழந்தை விரைவில் வரும் என்று உள்ளோட்டம் தோன்றியது.

அப்படி காலையில் நர்ஸ் என்னை எழுப்பி பல் துவக்கி விட்டாள்,முகம் கழுவிவிட்டு போனப்போது எனக்கு 1 பாத்துர்ரும் வருந்து என்றேன் அப்படிய என்று அவள் கேட்பதற்குள் என்குழந்தை மிதிக்கும் உணர்வு ஒரு சில விநாடிக்குள் ஒரே தண்ணீராக என்னை சுற்றி நான் 1 பாத்ரூம் போய்விட்டென் என்றேன் அவங்க சரி படுங்க என்று என்னை படுக்கவைத்துவிட்டு ட்யூட்டு டாக்டர் செக் ச்ய்துவிட்டு லேபர் ரூமில் காலை 6.30க்கு போனேன் ஜாலியாக பேசிக்கொண்டே இருந்தாங்க பைன் இஞஞ்சன் போட்டு ஆகிவிட்டது வலி சிறிது தான் வருது ஆனால் தண்ணீர் போக ஆரம்பித்தாகிவிட்டது நானும் டிரைபண்ணுகிறேன் சிறிது நேரத்தில் தூங்கி போய்விட்டேன் என்னை நர்ஸ் தட்டி எழுப்பி மஹா குழந்தை பிறக்க வந்து தூங்கி கொண்ன்டுயிருக்கிறாய் என்றார் எல்லாரும் சிர்க்கின்றனர் நானும் தான் மணி 1 மதியம் டாக்டர் வந்து பார்த்துவிட்டு குழந்தை சரியான் பொஷிஷனில் இருக்கு ஆன்னல் தண்ணீர் குறைந்து போகிவிட்டதும்மா அவங்க ட்ரை பண்ணினாங்க எனது குழந்தையின் உச்சி பகுதி மட்டுமே தெரிகிறது பிடிக்க வசதியில்லை அதன்ன்ல் ஆபிரேஷன் தான் ஒரு வழி எங்களுக்கு 2 உயிரும் முக்கியம் ம்மா அதனால் சைன் போடுன்க்க என்று சொன்னங்க அதன் பிறகு ஆபிரேஷன் தியேடருக்கு கொண்டு போனாங்க நடத்தியே என்னால் நக்க கூட முடியவில்லை அவ்வள்வு தளர்ந்துவிட்டென் நார்மலுக்கு டிரை பண்ணி,திரும்பி படுக்க சொன்னாங்க முதுகில் ஊசி போட்டாங்க ஒரு எறும்பு கடித்தது பொல்ல இருந்தாது கண்னை ஒரு கருப்பு கலரில் துணிப்பொல் கட்டினாங்க 1முதல் 5 எண்ணுவதற்குள் நான் மயக்கம் உற்றேன் என்னை குலுக்கியது போல ஒரு உணர்வு எனக்கு நியாபகம் வருது டாக்டார் முதுகில் அடிங்கம்மா என்றாவுடன் என் குழந்தை அழும் சத்தம் கேகிறது என்னுள்ளே இது உனது மகன் என்று சொல்லுது.நானே டாக்டர் எனக்கு என்ன குழந்தை என்று கேடேன் .பார்த்துவிட்டு சோலுங்கம்மா என்று நர்ஸ்சிடம் கேட்டங்க மெல் பேபிம்மா என்றாஆர்கள் அதன் பிறகு குட்டி மஹா தான் சரியான் சைனீஸ் குட்டி போல இருக்கிறான் என்று சொன்னாங்க. என்னை ஐ.சி.உ. பிரிவுக்கு மற்றி 1 மணிநெரம் கழித்து எனது மகணை கொண்டுவந்தாங்க எனது கணவரும் வந்தார் கூட குழந்தையை பார்த்தேன் பாத்ஹ்து விட்டு அழுதேன் அஹா நனும் அம்மாவா?அந்த நேரம் என் கைகள் நடுங்கியது பார்க்கும் போது நல்ல கலராக,மூக்கு சப்பையாக கண்கள் சுருங்கி சைனீஸ் மாதிரியே தோன்றினார்.என்கள் அன்பு செல்லவம் யுவி குட்டி அவன் பெயர் யுவன் ராஜ், இப்போது என் பெண்டை எடுக்குது.நானும் அவங்க அப்பவும் அவன் சேடைகள் பார்த்து ரசிக்கிறோம், ஆனால் என்ன அவனி 15 நாளில் பார்த்துவிட்டு வந்தவர் அவனுக்கு ஒருவயது ஆன பின்னர் தான் வந்து பார்த்தார். அதனால் அவனினி அந்த பருவத்தை அவர் மிஸ் ஹ்ய்து விட்டென் என்பார் அடிக்கடி ஆக மொத்தம் அவன் அவங்க அப்ப சொன்னது போல் 20 நாட்கள் முன்பாக அவரை பார்க்க ஓடோடி வந்து விட்டன்.இதோடு நிறுத்துகிறோம் எனது கதையை.

திவ்யா நன்றாக் கடவுளிடம் பிராத்தனி செய்கிறேன் உங்களூக்கு நார்மல் வேண்டி நீங்கலூம் பிராத்தை செய்யுங்க ஓ. கே வா..ந்ன்றாக உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

என்னோட கதையையும் கேளுங்க.திரும்ண்மாகி 1 1/2 வருடமாக எனக்கு குழந்தையில்லை. கேட்பவர்களுக்கு பதில் சொல்லி முடியாது.எனக்கும், என் கணவரின் தங்கைக்கும் ஒரே நாளில்தான் திரும்ணம் நடந்தது. அவள் உண்டாகி விட்டாள். அவளை கவனிக்கும் பொறுப்பும் என்னை சேர்ந்து விட்டது. இந்நிலையில் என் கண்வருக்கு துபாயில் வேலை கிடைத்து இங்கு வந்து விட்டார். ஓரே அழுகைதான் எனக்கு, நான் நெல்லையில் இருந்தேன். அம்மா வீடூ சென்னையில். குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கலாம் என்று முடிவெடுத்து சிட்டியில் பெரிய டாக்டரிடம் போனேன். நிரைய டெஸ்ட்,ஸ்கேன் செய்து பாலிஸிஸ்டிக் ஓவெரி என்றார்கள். நீ ஒழுங்கா மாத்திரை சாப்பிடு கணவர் வரும் வரை என்றார்கள்.அல்லாஹ்வின் நம்பிக்கை கொண்டு ஜனவரியில் ஆரமித்தேன்.நான் ரொம்ப பீல் பண்ணியதால் மே மாதம் ஒருமுரை என் கண்வர் (10 நாள்) வந்தார். ஆனால் நான் கன்சிவ் ஆகவில்லை. முயற்சியை விடவில்லை ட்ரீட்மெண்டை தொடர்தேன். டிச்ம்பரில் ஹ்ப்பி வந்தார். க்ருத்தரிக்க மாத்திரை கொடுத்தார் டாக்டர். அல்ஹம்துலில்லாஹ் ஜந்-31 டெஸ்ட் செய்து குழந்தை என்று உறுதிபடுத்தினார்கள். எங்கள் இருவராலும் நம்ப முடியாத சந்தோஷ்ம். அன்று இரவே அவர் துபாய் கிளம்பிட்டார். என்னால அந்த பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் அழுதேன். ஆனால் குழந்தைய நினைத்து தேற்றிக் கொள்வேன்.60 நாளில் ஸ்கேன் செய்தார்கள். செக்கப் போகும் போது டாக்டர் குழந்தை அசைவைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ஒரே சந்தோஷம். தினமும் கண்வ்ருக்கு போன் போட்டு எல்லாத்தையும் சொல்லுவேன். டாக்டர் என்னை எப்பவுமே ரெஸ்டுதான் எடுக்க் சொல்லுவார்கள் ஏனெனில் எனக்கு அடிவயிற்றில் எப்பவுமே வலியிருக்கும். ஆனாலும் நான் ரெஸ்ட் எடுக்க மாட்டேன். மதியம் மட்டும் தூங்குவேன். வீடு பெருக்குவது, சமைப்பது, வாக்கிங் போன்ற வேலைகளை செய்வேன்.வயிற்றில் கை வைத்துக் கொண்டு குழ்ந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். ஆறு மாதத்திலிருந்து குழ்ந்தையின் அசைவை நல்ல உணர்ந்தேன். 9 மாதம் டாக்டர் டெஸ்ட் செய்து விட்டு உனக்கு நார்மல் டெலிவரி ஆகாது என்று கூறி விட்டார்கள். நீ எந்த வேலையும் செய்ய கூடாது செய்தால் உனக்கு ப்ளீடிங் ஆக வாய்ப்பு இருக்கு என்று சொன்னார்கள்.அம்மாவுக்கு ஒரே கவலை. ஆனாலும் நான் ஒரு இடத்தில் இருக்க மாட்டேன். மாடிக்கு ஏறுவேன். வீட்டை சுத்தி சுத்தி வருவேன். (திவ்யா முக்கியமான விஷயம் வயிற்றை முன்னாடி தள்ளி நடக்கக் கூடாது.நாம நார்மலா எப்படி நடப்போமோ அப்படித்தான் பிள்ளை பெரும் வரை நடக்கனும். முதுகை பெண்ட் பண்ணி நடக்க கூடாது. இது நார்மல் டெலிவரிக்கு வழி வகுக்கும்) அக்டோப்ர்-1 டேட் கொடுத்தார்க்ள். செப்-19 குழ்ந்தை வலப்பக்கம் (மார்புக்கு கீழ்) நின்று விட்டது போல் உணர்வு. உடனே டாக்டரிம் சென்று விட்டேன். அவர் பயப்பட தேவையில்லை, இனிமேல் குழந்தை சுத்திட்டே இருக்காது.இனி துடிப்பு மட்டும்தான் தெரீயும்,டெஸ்ட் செய்து பார்த்ததால் ப்ளீடிங் ஆகும் பயப்பட வேண்டாம் என்றார். வீட்டிற்கு வந்தேன். லைட்டா ப்ளீடிங் ஆனது. மறுநாள் இரவு முதல் லைட்டா வலியெடுக்க் ஆரபித்தது. செப் - 21 காலை 5 மணிக்கே ஹாஸ்பிட்டல் போய் விட்டேன். டாக்டர் டெஸ்ட் செய்து விட்டு, இந்த வலிக்கெல்லாம் நீ குழந்தை பெற மாட்டாய் நல்ல வலி வரனும் என்று மெக்கால்விட் ஊசி போட்டார்கள். வலியே போய் விட்டது போல் இருந்தது.இனிமா கொடுத்து வயிற்றை க்ளீன் செய்தார்கள். மதியம் 3 மணிக்கு வந்து டெஸ்ட் செய்தார்கள். ஸ்கேன் பண்ணினார்கள். பெல்விக்போன் கொஞ்சம் விரிவடைந்து இருக்கு என்றார்கள். உடனே கையில் இன்புலாம் மாட்டி ஒரு ஊசி போட்டு, நாக்குக் அடியில் ஒரு மாத்திரை வைத்தார்கள். எங்கிருந்துதான் அப்படி ஒரு வலி வந்ததோ தெரியவில்லை. மீண்டும் ஒரு மாத்திரை வைத்தார்கள் வலி விட்டு, விட்டு வர ஆரமித்தது, பனிக்குடம் உடைந்து ப்ளீடிங் ஆனது வலி தாங்க குனிந்து கட்டில் கம்பியை பிடித்தேன். அம்மாவின் கையைப் பிடித்து கொண்டு அழுதேன், கத்தவில்லை. அம்மா அல்லாஹ்விடம் துவா செய்து கொண்டு இருந்தார்கள். நர்ஸ் லேபர்வார்டுக்கு அழைத்து சென்றார். வலிவந்து போகும் போது அப்படியே தூக்கம் வந்தது, தூங்கலாம் என்று நினைக்கும் போதே அடுத்த வலி வந்துவிடும், லேபர்வார்டில் எனக்கு முன்னாடியே இன்னோரு பெண், அவள் வலியில் அதிகமாக கத்தினாள்,ஏசப்பா என்னைக் காப்பாற்று என்று, அவருக்கு 2-வது குழந்தையாம், அவர் போட்ட சத்தத்தில் எனக்கு சப்தநாடியும் ஒடிங்கி விட்டது. முதலில் அவருக்கு பெண் பிள்ளை பிறந்து விட்டது. பிறகு எனக்கு ட்ரிப்ஸ் போட்டார்கள், வலி ஜாஸ்தியானது, வேத்னையுடன் நர்ஸை கூப்பிட்டேன். டாக்டரும் வந்தார்கள் உடனே பிறந்து விட்டாள் என் செல்வ மகள் அfப்ரா.அவளுடைய அழுகை சப்தம்....அப்பப்பா... வலி எங்கே போச்சுனே தெரியல. இப்போ நினைத்தாலும் உடம்பு புல்லரித்து விடும். முதல் டெலிவரி என்பதால் எபிசியாட்டமி நேர்ந்தது. தையல் கொஞ்சம் ஜாஸ்திதான். நர்ஸ் என்னிடம் குழந்தையைக் காட்டினார். ரோஜாப்பூ மாதிரி இருந்தா... 2 விரல வாயில் விட்டுக் கொண்டு லேபர்வார்டை கொட்டக் கொட்ட பார்த்து கொண்டிருந்தா...எனக்கு சிரிப்பு வந்திட்டு.இன்புலாம கையவிட்டு எடுக்கல தளிகா மாதிரியே நானும் ரொம்ப அவஸ்தபட்டேன்.நர்ஸ் என் வெதனைய பார்த்து எடுத்து விட்டாள், ஊசியை 2 கையிலும் நரம்புத் தேடி போட்டு விட்டு போவார். ஆனால் இது வலிக்கல. 2 நாள் கழித்து பேபியை குளிக்க வைத்தார்கள். அவள் அப்பா அனுப்பிய பிங்க் நிற டிரஸில் மிகவும் அழகாயிருந்தா.ரொம்ப லக்கி பிறந்து 4 மாதத்திலேயே தூபாய் வந்திட்டோம். அம்மாவையும், அப்பவையும் சேர்த்து வச்ச பெருமை அவளையே சேரும். திவ்யா ரொம்ப தைரியமா இருங்க. தாங்க கூடிய வலிதான். எல்லா பொண்ணும் மாதிரிதான் நாமும். நம்ம மட்டும் என்ன அதிசயமானு நினைங்க (நான் அப்படித்தான் நினைப்பேன்) .தைரியமா இருக்கும். ஆல் த பெஸ்ட்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உங்க கதையை படித்துக் கொண்டிருக்கும் போதே என் கண்கள் என்னையறியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. உண்மையாகவே உங்களுடய உணர்வு அப்போ எப்படி இருக்கும்னு என்னால உணர முடியுது மஹா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படி இருக்கீங்க? முதலில் கை வலிக்க இவ்வளவு பெரிய பதிவு கொடுத்ததுக்கு (அதிலும் வேலை பளுவிற்கு நடுவில்) நன்றி. உங்க அனுபவத்தை அதிலும் ஆபரேஷன் அன்று உங்க மனநிலையை அழகா வெளிபடுத்தி இருக்கீங்க. குழந்தை அசையும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு.இது ஒரு உன்னதமான அனுபவம்.குழந்தை எப்ப பிறக்கும், கொஞ்சி மகிழலாம்னு ஆசையா இருக்கு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

எப்படிங்க இவ்வளவு தெளிவா இவ்வளளளளளளளளளளாளவு பெரிய பதிவு பொறுமையா டைப் செய்து பதிவு செய்தீங்க?.உங்க அனுபவத்தை சொன்னதுக்கு,உங்க பொறுமைக்கு,அன்பிற்க்கு ரொம்ப நன்றிங்க.உங்க அனுபவமும் என்னுடையதும் ஒன்றுதான்.எனக்கும் முதல் முறை கன்சீவ் ஆகி அந்த சந்தோஷம் 2 வாரம் கூட நீடிக்கலை.கரு கலைந்து விட்டதுனு சொல்லி டி.என்.சி. பண்ணிட்டாங்க.அன்று மனதில் உண்டான வலி, அழுகை என்றும் மறக்காது.அந்த வேதனைல இருந்து மீள ரொம்ப கஷ்ட்டப்பட்டேன்.இறைவன் ஆசிர்வாத்தால் இன்று மகிழ்ச்சியாக என் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் எத்தனை விதமான அனுபவங்கள்.அப்பப்பா... படிக்க படிக்க தைரியமும்,தெளிவும் உண்டாகுது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

உங்க குழந்தை எப்படி இருக்கா?பெண் குழந்தைனா நம்ம சந்தோஷம் அதிகமயிடும் இல்ல.ஏன்னா நிறைய அழகழகா டிரஸ் பண்ணலாம்.அழகுபடுத்தி பார்க்கலாம்.குழந்தை பிறந்ததும் வாயில் விரல் வைத்து கொட்ட கொட்ட பார்த்துட்ருந்தாளா? நினைச்சு பார்க்கவே சந்தோஷமா இருக்கு.சிரிப்பா வருது.உங்க வார்த்தைகள் ரொம்ப தைரியத்தை தருது.நீங்க சொல்வது உண்மைதான்.நாம்ப என்ன அதிசயமா?எல்லா பெண்களும் எப்படியோ அப்படிதான் நாமும்.
அருசுவைக்கு வந்த பின் தனிமை பிரச்சனை நிச்சயமா உங்களுக்கு வராது.இங்க நிறைய தோழிகள் கிடைப்பாங்க.அதோடு உங்க குட்டி பாப்பா உங்களை எப்பவும் பிஸியா வச்சுப்பா.சந்தோஷமா இருங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அழகாக எழுதியிருக்கீங்க..ரொம்ப ரசிச்சு ருசிச்சு ஒரு த்ரில் இருக்கும் எல்லாம் என நினைத்தேன் ஆனால் என் கதையில் எல்லாம் ஒரு கனவு போல நடந்து விட்டது.
இப்ப மணி ராத்திரி 3 ஆச்சு.மகளுக்கு நல்ல ஜூரம் திடீரென தூக்கத்தில் எழுந்து எனக்கும் அவ அப்பாவிற்கும் வந்து கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு சுருண்டு படுத்துக் கொண்டாள்..அது எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..அதனால் தூக்கம் வராமல் எழுந்து வந்து விட்டேன்.
அதான் திவ்யா சொல்ல வந்தேன் அதிரா அம்மா சொன்னது போல இப்ப திவ்யாக்கு இப்படி குழந்தை வந்தபிறகு இனி அதுக்கு பசிக்குதா பசி அடங்குச்சா,அது ஏன் அழுகுது அதன் பின் எப்ப திட உணவு கொடுக்கலாம்னு ஆசை..பின்ன கொஞ்ச நாள் சாப்பிடும் நல்ல..பின்ன உட்காரும் சேட்டை செய்யும் பல்லு முளைக்கும் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் நாம வருந்துவோம்..திரும்ப நல்ல சாப்பிடும் மெல்ல எழும் தட்டு தடுமாறி விழுந்து விழுந்து நடக்க பழகும்.பின் 1 வயது முடிந்ததும் மெல்ல ஆலே மாறிவிடும்..தான் யார் தனக்கென்ன தேவையென்பதை புரிந்து கொள்ளும்...அதனால் வாயால் சொல்ல தெரியாமல் அடம் பிடிக்கும்.அப்படியே நம்ம கதை தொடரும்..அப்பப்ப சந்தோஷம் அதுகளுக்கு உடம்புக்கு ஒன்னுன்னா நமக்கு தூக்கமும் போகும்...ஆனால் உடம்பு சரியாகி 1 வாரம் கழித்து மெல்ல எழுந்து நின்று சிரித்து விட்டு துள்ளி ஓடும் பழையது போல்..அப்ப தோனும் வாழ்கையில் இதுவல்லவா சந்தோஷம் வேறெதும் இல்லைன்னி...அந்த மாதிரி என் மகள் துள்ளனுமேன்னு தான் நேற்றெல்லாம் மனசில் இப்ப அதுக்கு தான் காத்திரிப்பு.
திவ்யா ரெண்டு நாளா உன்னைக் காணாட்டி உடனே ஓஹ் குழந்தை வந்துடுச்சு போலன்னு நெனைப்பேன் .

ஹாய் திவ்யா

நான் எனது அனுபவத்தை சிம்மிபிள எழுதவேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் அது கதைப்போல் என் உள்ளத்தில் இருந்து வெளியே ஆறு போல வந்து விட்டது.என்னை பொருத்த வரையில் என் யுவன் கடவுள் கொடுத்த வரம் தான்.நாம் தாய்மை அடைந்து பிள்ளைகள பெறுகின்ற நேரம் வரையில் ஏதேனும் ஒரு சில நிமிடமாவது நம்து அம்மாவைப்பற்றி முழுமையாக உணர்வோம் நாம் எத்தனையோ முறை அம்மாவிடம் சண்டை போட்டுள்ளேன்,திட்டுவேன், ஆனால் நாம் குழந்தை உண்டான நேரம் முதல் நம்மளையும் நம்ம அம்மா இப்படிதான் பார்த்து இருப்பாங்க என்று எண்ணும் போது சீ நம்ம ஏன் அம்மாவிடம் இப்படி நடந்து கொண்டோம் என்று எண்ணத்தோன்றும்,,நம்து கணவர்மார்களுக்கு அவங்க அம்மா இப்படி தஏன் ந்ம்மளையும் வளர்த்து இருப்பாங்க என்று அவர்களுக்கும் எண்ணம் தோன்றும்.
என் யுவனை நான் முதன் முதலில் பார்க்கும் முன்பு எனக்குள் ஒரு பதட்டம், நானும் ஒரு அம்மா என்றா ஓர் உயர்ந்த இடத்திற்கு வந்து விட்டோம் என்ற எண்ணம்.நாங்களும் குழந்தை பிறக்கும் முன்பு வரை எந்த பொருளும் வாங்கி வைக்க மாட்டோம் அதன் பிறகு தான் எல்லாமும் வாங்குவோம்.யுவனை ஒரு பிங் கலரில் டிரஸ் போட்டு குல்லா வைத்து கொண்டுவந்தாங்க பார்த்தவுடன் ஒரு சைனீஸ் குழந்தைபோலவே இருந்தான், இப்பவும் பார்க்க அப்படிதான் இருப்பான் மொஸ்டில்ய் என்னை மாதிரியே இருப்பான் முக்கு சப்பையாக கொஞ்சம் கலராக இருப்பான்.நான் எத்தனை வேதனை அனுபவித்தாலும் அந்த குழந்தை முகம் பார்க்கும் போது அது சிணுங்கும் போதும், ம்மா என்று வார்த்தை கேட்ட்கும் போது அப்பாப புல்லரிக்குது இதை அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

நான் உங்களுக்கு சொல்லுவது ஒன்று தான் எந்த சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகவேண்டாம், மேக்ஸிமம் சந்தோஷமாக இருக்குமாறு பாத்துக்கொள்ளவும், குழந்தைக்கு தாய்ப்பாலே கொடுங்க.அதற்கு உங்கள் ப்ரெஅச்ட்ல் நிப்பிள் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும் இதை ஏன் நான் எழுதுகிரேன் என்றால் இதை எல்லாம் நான் கவனிக்காமல் அதன் பிறகு சிறிது அவஸ்த்தைப்பட்டேன், நிப்பிள் சரியாக இல்லாம் எக்ஸ்டார் நிப்பிள் வாங்கி அதன் மூலம் யுவனுக்கு பால் கொடுப்பேன் ஒவ்வொரு முறை குடிக்கும் போது வலிக்கும் எனக்கு அது ஒரு புறமாக வே கொடுத்தனால் ப்ரெஅச்ட் கிராக் ஆகி பிளட் வந்து அதிலும் சில வேதனை டோ நீங்க அதை முதலீலே சேக் செய்து கொள்ளவும்

எதுவுமே பயப்பட தேவையில்லை ,கடவுள் துணை இருப்பார் நீங்க எந்த கடவுளை வண்ணக்கினாலும் சரி அவரிடம் எனது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நார்மல் டெலிவரி வேண்டும் அதற்கு நீங்க தான் துணையாக இருக்க வேண்டும் என்று பிரத்தனை செய்யுங்கள். ஆல் தி பெஸ்ட் எல்லாமும் நன்றாக்வே நரக்கும்

தனிஷா
எப்படியிருக்கிறீங்க?அப்ரா எப்படியிருக்கிறாள், நான் இதுதான் உங்களுடன் முதன் முதலில் பேசுகிறேன்.எனக்கு உங்கள் பெயரை பார்த்தவுடன் தனிக்ஷ் என்ற ஒரு விளம்பரம் தான் ஞாபகம் வந்தது ,நல்ல பெயர் எனக்கு பிடித்து இருக்கிறது உங்களையும் உங்கள் பெயரையும்,வாங்க அரட்டை பகுதிக்கு பேசலாம்.நம்து சந்தோஷம் ,துக்கம், வேண்தல், ஆசைகள், மலரும் நினைவுகள் எல்லாமே பகிர்ந்து கொள்ளும் இடமே அட்மின் பாபு அவர்கள் அமைத்துக்கொடுத்துள்ள இந்த இணையதளம்

தளிகா
எப்படியிருக்கிறீங்க?உங்க பெண்ணோட உடல் நிலை இப்போது பரவாயில்லையா?நீங்கள் சொன்னது சரி தான் 1 வந்து வரை தான் நாம் அவர்களைக்ன்டிரோல் பண்ண முடியும் அதன் பிறகு அவர்கள் ராஜ்ஜியம் தான் நல்ல விளையாடி கொண்டு இருக்கும் போது தெஇர்யாது பிள்ளைகள் உடல் நிலை சரியில்லாம்ல் அமைதியா இருக்கும் போது ஐயோ நம்ம குழந்தை எப்போது எழுந்து ஆசையாக விளையாடும் என்று தான் தோன்றும், நீங்க எந்த ஊளிர்ல் இருக்கிறீங்க/உங்க பெண் பெயர் என்ன?உங்க ஐ.ட் யாரிடம் உள்ளது.
பதில் தரவும்...............................

பூஜா
எப்படியிருக்கிறீங்க?வருந்தம் தேவையில்லை நல்ல பிராத்தனை மற்றும் நல்ல மகிழ்ச்சியான் சுழ்நிலையில் உங்கள் மந்து , மற்றும் பாஸிட்டாக நினைத்தாளேஎ எல்லாம் உங்கள் வசம் ஓ.கே வா? கூடிய விரைவில் உங்களிடம் இருந்து நல்ல செய்தி எதிர்பார்க்கிறோம்.

ஷாராதா என்ன எப்படியிருக்கிறீங்க?அமிர்தா எப்படியிருக்கிறாள் என்ன ஆசு உங்களை காணவில்லை ரொம்ப நாளாக
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்