பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

மகா நீங்க எப்படி இருக்கீங்க. யுவன் என்ன பண்ணுகிறார்.நல்ல சேட்டையா. அfப்ரா நல்லா இருக்கா. நீங்க சொன்னதில் அவ்வளவும் உண்மை. //நாம் தாய்மை அடைந்து பிள்ளைகள பெறுகின்ற நேரம் வரையில் ஏதேனும் ஒரு சில நிமிடமாவது நம்து அம்மாவைப்பற்றி முழுமையாக உணர்வோம் நாம் எத்தனையோ முறை அம்மாவிடம் சண்டை போட்டுள்ளேன்,திட்டுவேன், ஆனால் நாம் குழந்தை உண்டான நேரம் முதல் நம்மளையும் நம்ம அம்மா இப்படிதான் பார்த்து இருப்பாங்க என்று எண்ணும் போது சீ நம்ம ஏன் அம்மாவிடம் இப்படி நடந்து கொண்டோம் என்று எண்ணத்தோன்றும்,,நம்து கணவர்மார்களுக்கு அவங்க அம்மா இப்படி தஏன் ந்ம்மளையும் வளர்த்து இருப்பாங்க என்று அவர்களுக்கும் எண்ணம் தோன்றும்.// அப்புற்ம் நானும் நிப்பில் வெடித்து ரொம்ப அவஸ்த்தை பட்டேன். துளைகள் எல்லாம் மூடி அங்கு இரத்தம் வர ஆரபிசிட்டு. குழந்தைக்கு பாலும் கொடுக்க முடியல.பால் கட்டி விட்டது. இரண்டு வலியயும் தாங்க முடியமல் அழ ஆரம்பிசிட்டேன்.தையல் போட்டு உட்காரவே முடியாது. டாக்டர் நிப்பிலில் placentric என்ற ஆயின்மென்ட் போட சொன்னார்கள்.ஹாட் ஒத்தடம் கொடுக்க சொன்னார்கள். சரியாகி பிள்ளைக்கு பால் கொடுக்க 1 வாரம் ஆகிவிட்டது. நீங்க குழ்ந்தைய பார்க்கும் போது எதுவும் தெரியாது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

திவ்யா எப்படி இருகீங்க. நான் லக்ஷ்மி.. நான் அருசுவைக்கு புத்சு.னல்ல படியாக குழந்தை பிறக்க நான் ஆண்டவனை வேண்டிக்க்ரேன்.

LOVE FOR EVER

திவ்யா எப்படி இருகீங்க. நான் லக்ஷ்மி.. நான் அருசுவைக்கு புத்சு.னல்ல படியாக குழந்தை பிறக்க நான் ஆண்டவனை வேண்டிக்க்ரேன்.
anbudan
laxmi

LOVE FOR EVER

திவ்யா எப்படி இருகீங்க. நான் லக்ஷ்மி.. நான் அருசுவைக்கு புத்சு.னல்ல படியாக குழந்தை பிறக்க நான் ஆண்டவனை வேண்டிக்க்ரேன்.
anbudan
laxmi

LOVE FOR EVER

திவ்யா நலமா.பல நாட்களாக எல்லோருடைய பதிவுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்று தான் பதிவிட முடிகிறது.திருமணத்திற்கு முன் சரியாக மாதவிடாய் வருவதேயில்லை. எனவே திருமணத்தின் பின் நெஞ்சு நிறைய பயம் தான் குடியிருந்தது.ஏனென்றால் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு,அது தவிர் யாரும் குறை சொல்லிவிடும் அல்லது எள்ளி நகையாடி விடக் கூடுமே என்ற தவிப்பு.
மேலும் திருமணம் நடந்து 25 நாட்களுக்குள் பெற்றோரை விட்டு முன்பின் தெரியாத நாட்டில் வாசம்.ஆனால் கடவுள் அருளால் இரு மாதங்களுக்குள்ளேயே கருத்தரித்தேன்.முதலில் வீட்டில் தான் பரிசோதனை செய்தேன். அன்று கணவர் வெளியே சென்று விட்டார்.மாலை 4 மணியளவில் பரிசோதனை செய்து பார்த்து பொசிடிவ் என்றதும் எவ்வளவு நேரம் அழுதேன் என்பது இன்று வரை தெரியாது. கணவர் வந்ததும் சொன்னேன்.மிகவும் சந்தோஷப்பட்டார், வீட்டில் படுக்கை அறை மாடியில் தான். எனவே ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதெல்லாம் வேகு கவனத்துடனே இருந்தேன். சமையல் உட்பட எல்லாவேலைகளும் செய்தேன்.ஆனால் நான் சாப்பிடுவது என்பது பெருங்கொம்பு தான்.எட்டவது மாதம் நடக்கையில் மாமியார் வந்தார். குறை ஏதுமின்றி பார்த்துக் கொண்டபோதும் அம்மாவின் அருகாமைக்காக தவித்து இருக்கிறேன்.இடையில் வயிறு பெரியதாக இருக்கிறது என்று 33 வாரமளவில் பார்த்த போது பிள்ளையின் கால் தான் கீழே உள்ளதென்றும் அனேகமாக குழந்தை திரும்பி விடும் அல்லாது விடின் சிசேரியன் தான் என்றும் சொன்னார்கள்.மே மாதம் 23அம் நாள் தான் பிறப்பிற்கான தேதியாக தந்திருந்த போதும் அன்று பகலுக்கு மேல் குழந்தையின் அசைவு ஒன்றையும் காணோம்.பதறி துடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்தால் மகாராணியார் நல்ல உறக்கமாம். பின் சரியாக ஒரு வாரம் கழித்து திங்கட் கிழமை இரவிலிருந்து நல்ல வலி கண்டது(நாட்கள் கடந்து விட்டதால் அன்னாசி பழம் சாப்பிட சொன்னபடியால் 1 பழத்தையும் நானே சாப்பிட்டு விட்டேன்.அது தவிர நல்ல நடை வேறு) வலியைத்தாங்கிக் கொண்டிருந்து விட்டு வலீ அடுத்தடுத்து வரவும் மருத்துவமனைக்கு சென்றாகி விட்டது.விடியற்காளை 5 மணிக்கு சென்றேன்.அபோது 5 சென்ரிமீற்றர் விரிவடைந்துள்ளதாக கூறி அனுமதிது விட்டார்கள். கடைசி நேரத்தில் பிரசர் வேறு கூடி விட்டது,பனிக்குடமும் உடைய வில்லை. பின் அவர்களே உடைத்து விட்டார்கள். இதற்கிடையில் வலியில் நான் சோர்ந்து போனேன்.குழந்தையின் தலை வெளியே வருஅதான் இல்லை. என்னால் இதற்கு மேல் முடியாது என்ரு அழ்த் தொடஙி விட்டேன். கணவர் கன்னத்தை தட்டி இதொ பொருத்துக்கொள் என்று அழாக்குறையாக சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது.ஒருவாறாக forceps உதவியால்(normal delivery) செல்ல மகாராணி மதியம் இரண்டு மணிக்கு வெளியே வந்து பெருங்குரலெடுத்து அழுத பொழுது தான் என் உலகம் வண்ணமயமானது.கிட்டத்தட்ட 4 கிலோ எஅடையுடன் சீமாட்டி சிஅவந்த உதடுகளுடன் ஜப்பான்காரி போல இருப்பதை பார்த்து அவளை தொட்டு பார்த்து விட்டு சிரிப்பும் அழுகையுமாய் 13 மணி நேர களைப்பில் மயங்கி நித்திரையாகி விட்டேன். இதோ இப்போது நித்திரைக்கு வழியில்லாது குட்டியின் அட்டகாசம் தாங்க முடியாது.

திவ்யா மனதைரியத்துடன் நலமே பிள்ளை பெற்று வர பிரார்த்திக்கிறேன்.

அன்புள்ள மஹா
எனது ஐடி அதிரா,மர்ழியாவிடன் கூட உள்ளது.எனது மகள் பெயர் ரீமா.இன்று பரவாயில்லை.இன்னும் சாப்பிட தான் ஆர்ம்பிக்கவில்லை..கடந்த 1 மாதமாக அழகாக கொடுப்பதை சாப்பிட்டு கண்ணமெல்லாம் கொஞ்சம் வந்திருந்தது..எல்லாம் ரெண்டே நாளில் போச்சு.கண்ணம் போனால்ம் போகட்டும் ஒழுங்கா சாப்பிட்டா சரி தான்.
சுகு சிரீலன்கனா.அழகா இருக்கு.மஹா எல்லா குழந்தையும் பிறக்கும்பொழுது ஜாபன்,சைனாகாரங்க போல தான் இருக்கும்போலிருக்கு..என் குழந்தை பிறந்து சில மணிநேரத்திற்கு பின் தான் காண முடிந்தது அதனால் எனக்கு அவ்வளவாக அது தோன்றவில்லை...ஆனால் பிறந்தவுடன் பார்த்த என் அம்மா மற்றும் குடும்பத்தினர் சொன்னாங்க ரீம பிறந்ததும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள் முகம் மேக் அப் பன்னி விட்டது போல முகம் மினுமினுப்பா இருந்ததுன்னு.
என் கனவரை ரொம்ப மிஸ் பன்னி விட்டேன் நான்..அவர் அருகில் இருக்கவில்லையே என்று இப்பொழுதும் வருந்துவேன்..

ஹலோ மஹா,

உங்க அனுபவம் படிச்சதும் ஒரே மலைப்பா இருக்கு.... ரொம்ப தெளிவா தைரியமா சமாளிச்சி இருக்கீங்க.... படிக்க படிக்க நானே அனுபவிச்சா மாதிரி இருந்துச்சி. யுவன் ராஜ் பேர் நல்லா இருக்கு.

எப்படிங்க இவ்ளோ அழகா எழுதறீங்க?

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

ஹலோ திவ்யா,

எப்படி இருக்கீங்க. உங்களுக்காக கடவுளை வேண்டி கொள்கிறேன்.

பிடிச்ச பாடல்களை கேளுங்க...

அன்புடன்,
பூஜா

Love the heart that wounds U don't wound the heart that Loves U

ஹாய் திவ்யா,
என் அனுபவத்தயும் எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்து இன்று தான் நேரம் கிடைத்தது.எனக்கு சிசேரியன் தான், E.D.D முடிவடைதும் வலி இல்லாததால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். உடன் சிறிது நேரத்தில் இரட்டை ஜடை பச்சை உடை,தொப்பி சகிதமாய் ஆபரெசன் தியேட்டருக்குள் சென்றேன்.முதுகு தண்டில் ஊசி,அடுத்த பத்து நிமிடத்தில் எங்கோ தொலைவில் மெல்லிய அழுகுரல் கேட்டது. ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நர்ஸ்கள் கூறினார்கள். என் மகன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அரை மயக்கத்தில் பிராத்தனை செய்து கொண்டேன்.சற்று நேரத்தில் ரூம்மிர்க்கு அழைத்து வந்துவிட்டர்க்கள்.அப்பொழுது தான் மயக்கம் தெளிந்து வலி உணர ஆரம்பித்தேன்,அந்நேரத்தில் தான் என் அம்மா என் குழந்தையை காட்டி பார் உன் மகனை என்றார்க்கள்,அம்மா என்று என்னை அழைக்க எனக்காக பிறந்த என் மகனின் அழகிய முகத்தை பார்த்தவுடன் இந்த உலகத்தில் உள்ள எந்த வலியயும் உனக்காக தாங்கிக்கொள்வேன் என்று மனதில் கூறிக்கொண்டேன்,அவ்லோ தான் வாழ்த்துக்கலும் சந்தோஷங்கலும்,தாய் என்ற பெருமையும் மனதை நிறைத்தது.இதோ ஓடி விட்டது ஒரு வருடம் என் செல்ல மகன் ஜானர்த்தின் பிறந்த நாளையும் கொண்டாடிவிட்டோம் 4 ஜூலையில். ok திவ்யா wish you happy and a safe delivery. warm welcome and best wishes to your darling baby.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

நான் பிரசவ திரட்டில் பிரச்சவத்தை தவிர மற்ற்தெல்லாம் அழக்கா சொல்லீ இருக்கேன் போல இப்பதான் எதார்த்தமா என் பதிவை பார்ர்த்தேன் எனக்க்கு சிரிப்பு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்