பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஹாய் திவ்யா,தனிஷா எப்படியிருக்கீரிங்க
என் அனுபவத்தயும் எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்து இன்று தான் நேரம் கிடைத்தது.எனக்கு சிசேரியன் தான்,ஆனால் கல்யாணம் ஆகி 9 மாதத்தில மகன் பிறந்துவிட்டான்.
8மாதம் வளைப்பு செய்து பாட்டி வீட்டிற்கு வந்தேன்[அம்மா காலமாயிவிட்டார்கள் என் 16 வயதிலே ].8மாதத்தில் என் வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்து ரொம்பா சந்தோஷமா பார்த்து கொண்டார்கள்,8மாதம் முடியும் தருணத்தில் ஒருநாள் விளக்கு பூசி கொண்டிருக்கும் போது வயிற்றில் ஆசைவே இல்லாதாத மாதிரி உணர்ந்தேன் அப்போது தான் னினைச்சு பார்த்தேன் அன்று முழுதும் வயிற்றில் ஆசைவே இல்லை யே தோனிச்சு உடனெ டாக்டரிம் செக்கப் போனேன் ,ஸ்கேன் பண்ணனும் சொன்னார் ஸ்கேன் பண்ணினோம் தண்ணீர் குறைப்பாட்டு இருக்கு நிறைய தண்ணீர் குடிங்க வேண்டும் சொன்னார்கள்,மறுநாள் காலையிலிருந்து தண்ணீர் குடிங்க ஆரம்பிச்சங்க குடிச்சு குட்டிச்சு வாந்தியில் கொண்டு போயிட்டு விட்டும் பிரயோசமில்லாமல் போய் விட்டது ,பிறகு தண்ணீர் குறைப்பாட்டு இருக்கு அதனால் ட்ரீப் போடன்னு சொன்னாங்க,குழந்தை பிறக்கும் வரை வாரம் நாலு நாள் ட்ரீப் போட்டார்கள் ஆஸ்பத்திரிக்கும் ,வீட்டுக்கும்போரதுக்கே பொழுது போயிடுச்சி,டேட் சொன்ன 5நாள் முன்னாட்டி ஞாயிறு கிழமை வலி வந்த்து போனேன் வலி அவ்வள்வா இல்ல பயந்துபோய் ஆஸ்பத்திரிக்கு போனேன் ஒன்னுமில்ல போங்க நல்ல வலி வந்த பிற்கு வந்தால் போதும் என்று அனுப்பி விட்டார்கள்
செவ்வாய் கிழமை குளிக்குபோதே பனிகுடம் உடைந்து விட்டது. குளிச்சுட்டு,சாப்பிட்டு தெம்பா ஆஸ்பத்திரி வலியே இல்லாமே சிரிச்சுகிட்டேன் போனேன் அவங்களும் இனிமா ,இஞ்சேக்சன் என்னவால்லமோ பன்னினாங்க ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஒன்னும் பிரயோசனமில்ல வலியே யில்ல கர்ப்ப வாய் திறக்காவேயில்லசொன்னாங்க டாக்டர் சரின்னு சொல்லியிட்டு நானும் சொந்தபந்தங்களோடு கதையடிச்சுகிட்டு இருந்தேன் ஆஸ்பிட்டல் முன்னாடி
தீடிர்ன்னு கூப்பிட்டு டெர்ஸ் சேஞ்சு பண்ணினாங்க தலைமுடி ஸ்கூலுக்கு போர மாதிரி இரட்டை ஜடைபோடங்க,நானும் இதெல்லாம் பண்ணுராங்க எனத்துக்கு தெரியலைய்யே நின்னைச்சுகிட்டே ஆஹா சூப்ப்ராயிருக்கே இந்த இரட்டசடை எவ்வளாச்சு இப்படி சடை பின்னி ரசிச்சிகிட்டுயிருந்தேன்,மின்னல் வேகத்தில் என்னை ரெடி பண்ணி சினிமாவில் காட்டடுவாங்க அது மாதிரி வண்டியில் படுக்க வைத்து தள்ளி கொண்டு போனார்கள்,ஏங்க கொண்டுபோரிங்க என்னை..... கேட்டததுக்கு பதில் சொல்லாமல் அவங்கலை பார்த்து கொண்டுருந்தார்கள்,கத்தி கூச்சல் போட்டேன் டாக்டர் விளக்கமாக விவரம் சொன்னாங்க பனிகுடம் உடைந்து பலமணிநேரம் ஆகுது,கர்ப்பாய் திற்க்கல,உனக்கோ வலியும் இல்ல பிள்ளை தண்ணீரில்லாமா மூச்சுமுட்டுல்ல அதுனால சிசேரியல் தான் அதுனால ஆப்பிரேசந்தியேட்ட்ருக்கு போமா சொல்லி போயிட்டாங்க.அப்போது விஷ்சயமே புரிந்த்து .ஆனாலு இந்த டாக்டர் ஆப்பிரேசந்தியேட்ட்ருக்கு போரதுக்கு கூலா சினிமாஅ தியேட்டர் போரமாதிரி சொல்லாங்களே நினைச்சு கிட்டேன் போனேன் ப்போகும் வழியில் பாட்டி ,அப்பாவை பார்த்ததும் ஒரேஅழுகை அழுது கொண்டே போனேன் முதுக்கி இஞ்செக்சன் போட்டார்கள்.....ஆனால் மயக்கம் வரவில்ல, டாக்டர் கத்தி எடுத்துகிட்டு கிட்ட வந்ததும் ஓஓஓஓஓஒ கத்திட்டென் என்க்கு Wநினைவு இருக்கு கத்தீயை வைக்காதிங்க டாக்டர்ன்னு உடனே டாக்டர் ஒ.கே.ஒ.கே கூல் சொல்லி சாந்த படுத்தி விட்டு உங்களுக்கு என்ன குழந்தை பிற்க்கன்னும் ஆசைபடுரீங்க கேட்டுகிட்டே ட்ரிப் வழியாக ஒரு ஊசி போட்டாங்க நான் எனக்கு பையன் வேணும் சொன்னதுதான் ஞாபக இருக்கு மயங்கிவிட்டேன் மறுகணமே ..........ஆப்பிரேசன் முடித்து விட்டு ஆபிரேசன் தியேட்டரில் யிருக்கும்போதே உங்களுக்கு ஆண்பிள்ளை பிறந்திகிரதுன்னு சொன்னாங்க கேட்டேன் ஆனால் கண்திரக்கமுடியாத தூக்கம்போல் உணர்ந்தேன்.......பின் வார்ட்டு மாற்றினார்கள்போலும்......சிறிது நேரத்துக்கு பிறகு பேச்சிலே புலம்பி,புலம்பி கண்விழித்தேன் என் மகனை பார்த்தேன் அப்ப பூத்த மலர் போல் அழகாய் இருந்தேன் ,என் வேதனையெல்லாம் போயே போச்சு அள்ளி முத்தம் கொடுத்தேன்.
என் அட்வைஸ் ஒன்றே ஒன்று தான் நிறை தண்ணீர் குடிங்கப்பா அதுபோதும் இதை படிச்சு பயப்பட்டாம் கடவுள் ஓவ்வொருத்துக்கு ஒவ்வொரு விதமான புதுஅனுபத்தை கொடுப்பார் .என் பிராத்தனை உங்களுக்கு நிச்சயம் உண்டு,நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வாழ்த்தூகள்.

naturebeuaty

உங்களை அருசுவை தோழிகள் சார்பாக வரவேற்க்கிறேன்.தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.உங்களுடைய வாழ்த்திற்க்கு மிக்க நன்றி.நீங்க எங்க இருக்கீங்க? என்ன செய்றீங்க?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

உங்க வாழ்த்திற்க்கும், பதிவுக்கும் நன்றி.திருமணத்திற்க்கு முன் சரியாக மாதவிடாய் வராவிட்டால் எவ்வளவு பயமாக இருக்கும்னு எனக்கும் தெரியும்.நானும் அதை அனுபவித்தேன்.பிரச்சனை இல்லாம் கன்சீவ் ஆகனும்னு பயமா இருக்கும்.3 மாதம் கழித்து கர்பமாகி பின் அதையும் இழந்த போது மனமொடிந்து போனேன்.பிறகு 6 மாதம் கர்ப்பம் தரிக்க வேண்டாம்னு மருத்துவர் சொல்லியிருந்தாங்க.முதல் வருட திருமண நாளில் எப்ப குழந்தை கிடைக்குமோனு நினைத்தேன்.இப்ப 2 வருட திருமண நாளுக்கு என் குட்டி செல்லத்துக்கு 3 மாதம் ஆயிருக்கும்.நினைத்தாலே இனிக்குது.

எனக்கு ஒரு சந்தேகம்.அன்னாசி பழம் சாப்பிட்டா சீக்கிரம் டெலிவரி ஆகுமா?பாப்பா 4 கிலோ இருந்தாலா? நீங்க கிரேட் தாங்க.ஏன்னா என் தோழி ஒருத்தி 4 கிலோ எடைல அவ குட்டி பையன் பிறந்தப்ப பட்ட கஷ்டம் எல்லாம் சொன்னா.குழந்தைங்க எடை அதிகமா இருந்தா நமக்கு தான் கஷ்டம்னு சொன்னா.
குட்டி இளவரசி நல்லா தூங்கி உங்கள பயமுறுத்திட்டாளா? எனக்கும் கூட பயமாயிடும்.3 மணி நேரத்திற்க்கு ஒரு முறை அசைவு இருக்கனும்.தூங்கினா கூட மேலும் 2 மணி நேரம் பார்க்கலாம்.அதுக்கப்புறமும் அசைவு தெரியலைனா உடனே வாங்கனு மருத்துவர் சொன்னனால சில சமயம் 3 மணி நேரம் ஆகி அசைவு தெரியாட்டி ரொம்ப பயமாகிடும்.கொஞ்ச நேரத்துல உதைத்து என்ன மகிழ வைப்பா.நம்மள பயமுறுத்திட்டு அவங்க ஹாயா தூங்குவாங்க.எனக்கு கொஞ்சம் பொறுமை கம்மி.டாக்டர் 5 மணி நேரம் பார்க்கலாம்,அவங்க தூங்குவாங்கன்னாலும் எனக்கு 3 மணி நேரம் ஆன்னா டென்சன் ஆயிடும்.

தளிகா ரீமா எப்படி இருக்கா? காய்ச்சல் சரியாயிருச்சா? இங்க என்னால தினமும் நெட் பார்க்க முடியாது.அதனால ரெகுலரா பதிவு போட முடியலை.இங்க(அம்மா வீட்டில்) நான் நெட் பார்ப்பதே பெரிய விஷயமா இருக்கு.ஆனா வாரக் கடைசில என் ஹஸ் வரும் போது அவர் லேப்டாபில் பார்த்திடுவேன்.யாருக்காவது பதிவு கொடுக்க விட்டு போயிருந்தா மன்னிக்கவும்.எல்லாருடைய அன்பும்,பிராத்தனையும் கேட்க சந்தோஷமா நிம்மதியா இருக்கு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

உங்க வாழ்த்திற்க்கு மிக்க நன்றி.குழந்தைங்க அம்மானு சொலற அந்த வார்த்தைக்காக தான எல்லா பெண்களும் தவமிருப்பது.எத்தனை வலியையும் பொறுத்து கொள்வது.எல்லா வலியையும் மறக்க செய்வது நம்ம குழந்தையோட பிஞ்சு முகம் தானே.

மர்லியா கண்டுபிடிச்சிடீங்களா.நான் அதுக்கு கீழயே வேற பதிவு போட்டிருப்பீங்கனு நினைச்சேன்.கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு பார்த்தும் ஒன்னும் சிக்கலை.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அஞ்சலி உங்க பேர் பார்த்ததும் டூயட் படத்துல வரும் அஞ்சலி பாட்டு தான் நினைவுக்கு வருது.உங்க அனுபவத்தை நல்லா நகைசுவையா சொல்லியிருக்கீங்க.
//நானும் சொந்தபந்தங்களோடு கதையடிச்சுகிட்டு இருந்தேன் ஆஸ்பிட்டல் முன்னாடி
தீடிர்ன்னு கூப்பிட்டு டெர்ஸ் சேஞ்சு பண்ணினாங்க தலைமுடி ஸ்கூலுக்கு போர மாதிரி இரட்டை ஜடைபோடங்க,நானும் இதெல்லாம் பண்ணுராங்க எனத்துக்கு தெரியலைய்யே நின்னைச்சுகிட்டே ஆஹா சூப்ப்ராயிருக்கே இந்த இரட்டசடை எவ்வளாச்சு இப்படி சடை பின்னி ரசிச்சிகிட்டுயிருந்தேன்,மின்னல
் வேகத்தில் என்னை ரெடி பண்ணி சினிமாவில் காட்டடுவாங்க அது மாதிரி வண்டியில் படுக்க வைத்து தள்ளி கொண்டு போனார்கள்,//
//ஆனாலு இந்த டாக்டர் ஆப்பிரேசந்தியேட்ட்ருக்கு போரதுக்கு கூலா சினிமாஅ தியேட்டர் போரமாதிரி சொல்லாங்களே நினைச்சு கிட்டேன் போனேன் ப்போகும் வழியில் பாட்டி ,அப்பாவை பார்த்ததும் ஒரேஅழுகை அழுது கொண்டே போனேன்//
//டாக்டர் கத்தி எடுத்துகிட்டு கிட்ட வந்ததும் ஓஓஓஓஓஒ கத்திட்டென் என்க்கு Wநினைவு இருக்கு கத்தீயை வைக்காதிங்க டாக்டர்ன்னு//
எப்படிங்க இப்படி எழுதறீங்க?உங்களுக்கு நல்ல நகைசுவை உணர்வுங்க.நினைத்து நினைத்து சிரித்தேன்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா,
எப்படி இருக்கிங்க?உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.எனக்கும் இது 8வது மாதம்.இந்த ட்ரெட்டில் அனைவரும் அவஙாக பிரசவ அனுபவத்தை சொல்லி இருக்கங்க.உங்களுக்கு டியூ டேட் எப்போழ்து?

மர்ழியா,
எப்படி இருக்கிங்க,உங்க பொண்ணு மரியம் எப்படி இருக்கா?இப்போ உங்க மகளுக்கு கால் வலி எப்படி இருக்கு?குழந்தைகளுக்கு ஒன்று என்றால் நம்மால் தாங்க முடியாது.பயப்படாதீங்க எல்லாம் சரியாகும்.உங்களுடைய பிரசவ அனுபவத்தை படித்தேன்பா.

ஜெயந்தி மாமிக்கு,
வணக்கம்.இப்போழுது தான் உங்களிடம் பேசுகிரேன்.உங்கள் அரட்டையை ரசிப்பேன்.இப்போ உங்க கை வலி எப்படி இருக்கு.பயப்படதீங்க சரியாகிடும்.

தளிகாக்கா,
எப்படி இருக்கிங்க.உங்க பொண்ணு ரீமா எப்படி இருக்கா?உங்கள் இந்திய பயணம் இனியதாக அமைய என் வாழ்த்துக்கள்.

ஹாய் மஹா,
எப்படி இருக்கிங்க,உங்க குட்டிப் பயன் யுவன் எப்படி இருக்கான்?
உங்க பிரசவ அனுபவம் படித்தேன். அப்ப்ப்ப்ப்பபா உங்களுக்கு பொருமை அதிகம்,படித்தேன்.மனசு ரொம்ப கஸ்டமா இருந்துச்சு.எனக்கும் இது மாதிரி அனுபவம் இருக்கு,போன் செப்டம்பரில் ஒரே வாரத்தில் கரு கலைந்து விட்டது.அப்போ நான் பட்ட கஸ்டம் சொல்ல முடியாது.இப்போ கடவுள் கருனையால் 8 மாதமா இருக்கேன்.உங்கள் உடல் நலம் இப்பொ பரவாயில்லையா?அடுத்த மாதம் ஊருக்கு போவதாக சொல்லி இருந்தீங்க.இனிய பயண நல்வாழ்த்துக்கள்.ரசியா அக்காவிடம் என் ஐடி கொடுத்துள்ளேன்.அவங்க நம்பரும் கொடுத்தங்க.நான் போன் செய்தேன்.யாரும் எடுக்கலை.நான் மெயிலில் என் நம்பர் கொடுத்துள்ளேன்.

ஹாய் அஞ்சலி,
உங்க பிரசவ அனுபவத்தை படித்தேன்பா.நகைச்சுவையாவும், த்ரில்லிங்காவும் இருந்தது.

சுகு,தனிஸா
உங்க இருவருடைய அனுபவத்தையும் படித்தேன்.இதன் மூலம் நான் அவங்க அவங்க அனுபவத்தை தெரிங்சுகிட்டேன்.இந்த ட்ரெடை ஆரம்பித்த திவ்யாவுக்கு தான் நன்றி சொல்லனும்

We are Happy to inform that we are blessed with a baby girl yesterday morning. Divya and our baby are doing well. She will be back soon and share her experience soon.

Regards,

Arun.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

hi Divya

hi Divya

congratulations

மேலும் சில பதிவுகள்