கிட்ஸ் வாழைக்காய் போண்டா |
|
|
|
தேவையானப் பொருட்கள்
- வாழைக்காய் - 2
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் - 5
- கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
- சீரகம் – ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 10 இலை
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
|
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
|
 |
ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
|
 |
வாழைக்காய் வெந்ததும் எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
|
 |
தோல் உரித்த வாழைக்காயை காரட் துருவியால் ஒரு தட்டில் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
|
 |
ஒரு பாத்திரத்தில் துருவிய வாழைக்காய், நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு அதனுடன் கரம் மசாலா தூள், சீரகம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
|
 |
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
|
 |
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
|
 |
எளிதில் தயாரிக்கும் கிட்ஸ் போண்டா ரெடி. இதை தக்காளி சாஸுடன் பரிமாறலாம். இது ஒரு மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
|
 |
அறுசுவை உறுப்பினரான திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த கிட்ஸ் வாழைக்காய் போண்டாவை செய்து காட்டியுள்ளார்
|
 |
|
|
|
|
|
|
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
32 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -