பொன்னாங்கீரை பொரியல்

தேதி: July 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொன்னாங்கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
வரமிளகாய் - 3
துவரம்பருப்பு வேகவைத்தது (அ) பாசிப்பருப்பு - அரை கப்
தேங்காய்ப்பூ - கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

துவரம்பருப்பு அரை கப் அளவு வேக வைத்தது (அ) பாசிப்பருப்பை ஊற வைக்கவும். கீரையை இலையை மட்டும் ஆய்ந்து கழுவிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கிள்ளிய வரமிளகாய் போட்டு வதங்கியதும் கீரையையும், ஊறிய பருப்பையும் போட்டு வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு உப்பு போடவும். வெந்ததும் தேங்காய்ப்பூ போட்டு கிளறியவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா நலமா? இன்று தான் முதல் தடவையாக உங்களுடன் பேசுகிறேன்.
இன்று பொன்னாங்கீரை பொரியல் செய்தேன் மிகவும்
சுவையாக இருந்தது.துவரம் பருப்பு சேர்ப்பதால் வித்தியாசமான சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் பொன்னாங்கீரை பொரியல் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"